சென்னை: திருமணமான பிறகு சில தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க சில ஆண்டுகள் எடுக்கும். இதற்கு அந்த கணவன் - மனைவிக்கு தாம்பத்திய உறவு பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். குறிப்பாக சில தம்பதிகள் இடையே விந்தணுக்கள் கருப்பப்பையை நோக்கி நீந்தி செல்வதில் பிரச்சனை இருக்கலாம். இதனை எப்படி சரிசெய்து மனைவியை எளிதாக கர்ப்பமாக்குவது எப்படி? கணவனின் விந்தணு பெண்ணின் கருப்பப்பையை சென்றடைய எளிமையான வழி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
திருமணமான ஜோடிகளில் பலரும் அடுத்த ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளில் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் இந்த பாக்கியம் அனைத்து தம்பதிகளுக்கும் கிடைப்பது இல்லை.

சில தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்துக்கு சில ஆண்டுகள் வரை ஆகலாம். இதற்கு ஆண், பெண் என இருவரும் தான் காரணமாக இருக்க முடியும். குறிப்பாக சில தம்பதிகள் குழந்தை பாக்கியத்தை தள்ளி வைக்கலாம்.
இன்னும் சிலர் குழந்தை பெற்றெடுக்க விரும்பினாலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு வராமல் போகலாம். அப்படியென்றால் உடனடியாக ஆணும், பெண்ணும் நல்ல டாக்டரை பார்த்து அவர்களின் அறிவுரைகளை பெற வேண்டும். உடல்நல பரிசோதனைகளை மேற்கொண்டு தேவை என்றால் சிகிச்சைகள் பெறலாம்.
அதோடு மனைவி கர்ப்பமாகாவிட்டால் அதற்கு ஆணின் விந்தணுக்கள் கர்ப்பப்பையை சென்று சேராதது தான் முக்கிய காரணமாக இருக்கும். ஆணுக்கு விந்தணு குறைபாடு இருந்தால் அதற்கு சிகிச்சை எடுத்து கொள்ளலாம். மாறாக விந்தணுக்கள் போதிய அளவு இருந்து ஊர்ந்து செல்லும் தன்மை குறைவாக இருந்தால் அவர்கள் எளிதாக வீட்டில் இருந்தே சரி செய்து கொள்ளலாம். இதற்கு எந்த வித சிகிச்சையும் தேவையில்லை.
அதாவது ஆணின் விந்தணுக்கள் போதிய அளவில் வீரியத்துடன் இருக்கும் பட்சத்தில் மனைவி கர்ப்பமாகாவிட்டால் அவர்கள் அடிக்கடி உடலுறவு வைத்து கொள்ள வேண்டும். இப்படி அடிக்கடி உடலுறவு வைப்பதன் மூலமாக ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறையலாமே தவிர அதன் ஊர்ந்து செல்லும் தன்மை அதிகரிக்கும். இதனால் விந்தணுக்கள் எளிதில் மனைவியின் கர்ப்பப்பையை அடையும்.
பெண்ணை கர்ப்பமாக்கி ஒரு விந்தணுவே போதும் என்பதால் உடல்நல பிரச்சனை இல்லாத ஆண்மை நிறைந்த ஆணாக இருப்பின் நிச்சயம் மனைவியை கர்ப்பமாக்கிவிடுவார். மேலும் இந்த விஷயத்தில் ஒரு தவறான புரிதல் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாவிட்டால் பலரும் ஒரு விஷயத்தை சொல்வது உண்டு.
அதாவது விந்தணுக்களில் குறைபாடு உள்ளது.இதனால் தினசரி உடலுறவு வைக்க வேண்டாம். 4 நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்தால் விந்தணுக்கள் வீரியமாக மாறி கர்ப்பப்பபை சென்றடையும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் விந்தணுக்ள் நீந்தி செல்வதில் தான் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் 4 நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைக்கும்போதும் மனைவியை கர்ப்பமாக்குவது தாமதப்படுத்தலாம். எனவே கட்டுக்கதையை நம்பால் கணவன் - மனைவி நம்பிக்கையுடன் அடிக்கடி உடலுறவு வைப்பது குழந்தை பாக்கியத்தை தரும் என்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



