சென்னை: தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் மழைக்காலத்தில் கணவன்- மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பாதுகாப்பானதா? அப்படி உடலுறவு செய்யும்போது என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் வழக்கத்தை விட இந்த முறை அதிகளவில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இப்படியான சூழலில் தான் மழைக்காலத்தில் கணவன் - மனைவி இடையே தாம்பத்திய உறவு வைக்கலாமா? இல்லையா? உடலுறவின்போது இருவரும் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மழைக்காலம் என்பது தொற்றுநோய்கள் பரவும் காலமாகும். இதனால் சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை அதிகமாக உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்லளாம். எனவே பாலியல் உறவில் ஈடுபடும் கணவன் - மனைவியும் அதிக கவனம் பெற வேண்டும். பாலியல் சுகாதாரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் . இதனை தவிர்க்க IASH (ஆண்ட்ராலஜி மற்றும் பாலியல் சுகாதார நிறுவனம்) ஆண்ட்ரோலஜி நிபுணர் டாக்டர் சிராக் பண்டாரி கூறியுள்ளதாவது:
* மழைக்காலத்தில் ஆண்களும், பெண்களும் தங்களின் தனிப்பட்ட சுகாதாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆணும், பெண்ணும் எப்போது தாம்பத்திய உறவுக்கான உறுப்புகளில் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். ஈரப்பதம் இன்றி இருக்க வேண்டும். ஈரப்பதம் இருப்பது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். இதனால் இருவரும் பிறப்புறுப்பில் சுகாதாரத்தை பேண வேண்டும்.
* தாம்பத்திய உறவு வைத்த பிறகு கணவன், மனைவி இருவரும் வெதுவெதுப்பான நீரில் பிறப்புறுப்பை கழுவலாம். அதேவேளையில் சோப்புகள், சேம்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது. இது அரிப்பை ஏற்படத்த வாய்ப்புள்ளது.
* மழைக்காலத்தில் ஈரமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்து வியர்வையில் நனைந்த ஆடை அல்லது மழையில் நனைந்த ஆடைகளை அதிக நேரம் அணிவதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான அல்லது ஈரத்தை தக்கவைக்கும் ஆடைகளை அணியவே கூடாது. தளர்வான ஆடைகள், பருத்தி உள்ளாடைகளை தேர்வு செய்து அணியலாம். இறுக்கமான ஆடைகள் அணிவது பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளுக்கு வழிவகுக்கும். இது உடலுறவின்போது ஆணில் இருந்தும் பெண்ணுக்கும், பெண்ணில் இருந்து ஆணுக்கும் தொற்று பரவும் சூழலை ஏற்படுத்தும்.
* மழைக்காலம் என்பது பாலியல் உறவுக்கு கணவன் - மனைவியை தூண்டிவிடலாம். இருப்பினும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நோறய் தொற்றுகளை குறைக்க ஆணுறைகளை பயன்படுத்தலாம். ஒருவேளையில் பிறப்புறுப்பில் அரிப்பு, அசாதாரணமான சூழல் இருப்பதை அறிந்தால் உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது.
* மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் என்பது இருக்காது. இதனால் பலரும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது இல்லை. உண்மையில் தண்ணீரை போதிய அளவு குடிக்க வேண்டும். உடலில் தண்ணீர் சத்து குறையும்போது நச்சுக்கள் நீக்கப்படுவது குறையும். இது உடலுறவில் திருப்தியின்மையை ஏற்படுத்தும். இதனால் முடிந்தவரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெள்ளரி, தர்பூசணி, நீர் நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.
* மழைக்காலத்தில் தொற்று நோய் அபாயம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள், காய்கறிகளை உணவின் மூலமாக எடுத்து கொள்ளலாம். கீரைகள், வாழைப்பழங்கள், டார்க் சாக்லேட் மற்றும் கொட்டைகள் போன்ற லிபிடோ-அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிக பதப்படுத்தப்பட்ட உணவு அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகள் உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு ஊக்கத்தை கொடுக்கலாம்'' என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications



