•  

விந்து கெட்டியாக இல்லாமல் தண்ணீயாக இருந்தால் பெண்ணை கர்ப்பமாக்க முடியுமா? கட்டுக்கதையை நம்பாதீங்க

சென்னை: மனைவியை கட்டிலில் திருப்திப்படுத்தி கர்ப்பமாக்க வேண்டும் என்றால் விந்தணுக்கள் கெட்டியாக தான் இருக்க வேண்டும். தண்ணீயாக இருந்தால் கர்ப்பமாக்க முடியாது என்று பலரும் கேள்வி பட்டு இருக்கலாம். ஆனால் இது எந்தளவுக்கு உண்மை? விந்தணுக்கள் தண்ணீயாக இருந்தால் மனைவியை கர்ப்பமாக்க முடியுமா? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

தாம்பத்தியம்.. கணவன் - மனைவி இடையே இந்த உறவு சிறப்பாக இருந்தால் பெரும்பாலும் சண்டைகள் வராது என்கின்றனர் பெரியவர்கள். ஆனால் இப்போது கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். ஒருவர் பகல் ஷிப்ட் என்றால், இன்னொருவரும் இரவு ஷிப்ட் பணிக்கு செல்கின்றனர்.

 

sex  relationship   sperm
 

இதனால் பெரிய பெரிய நகரங்களில் கணவன் - மனைவி ஒன்றாக நேரம் செலவிடுவது குறைகிறது. மேலும் கூட்டு குடும்பத்தில் இப்போது யாரும் இருப்பது இல்லை. இதனால் தனிமையில் பலரும் வாடி வதங்குகின்றனர். மேலும் சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளிட்டவற்றால் பல உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இத்தகைய வாழ்க்கை முறை கணவன் - மனைவி இடையேயான தாம்பத்திய உறவை பாதிக்கிறது. மேலும் நம் தாத்தா, பாட்டிகள் 7 குழந்தைகள், 8 குழந்தைகள் பெற்றெடுத்தனர். ஆனால் இப்போது பலரும் ஒரு குழந்தை பெற்றெடுப்பதும், மனைவியை தாம்பத்தியத்தில் திருப்திப்படுத்துவதை கூட பெரும் சவாலாக பார்க்கின்றனர்.

குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. விந்து வெளியேறும்போது அது கெட்டியாக இருந்தால் தான் மனைவியை கர்ப்பமாக்க முடியும்? விந்து தண்ணீயாக இருந்தால் கர்பபமாக்க முடியாது? என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதுபற்றிய புரிதல் பலருக்கும் இல்லாதது தான்.

ஆனால் உண்மையில் மனைவியை கர்ப்பமாக்க வேண்டும் என்றால் தாம்பத்திய உறவின்போது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் வழியாக நீந்தி சென்று கர்ப்பப்பையை அடையும் அளவுக்கு வீரியமான விந்தணு இருந்தால் போதும் என்கின்றனர் டாக்டர்கள். அதாவது ஆணின் உறுப்பில் இருந்து வெளியேறும் விந்து கெட்டியாக இருந்தாலும் சரி, தண்ணீயாக இருந்தாலும் சரி.. அதில் உள்ள விந்தணு வீரியமாக இருக்க வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.

பொதுவாக விந்து கெட்டியாக வெளியேறினால் அதில் நிறைய விந்தணுக்கள் இருக்கும். மாறாக தண்ணீயாக போல் இருந்தாலும் கவலையில்லை. அதில் விந்தணுக்குள் இருக்கும். ஆனால் கெட்டியாக விந்து வெளியேறுவதை ஒப்பிடும்போது தண்ணீயாக வெளியேறும் விந்துவில் விந்தணுக்கள் குறைவாக இருக்கும். விந்தணுக்கள் குறைவாக இருந்தாலும் கூட மனைவியை கர்ப்பமாக்கலாம்.

ஏனென்றால் மனைவியை கர்ப்பமாக்க வேண்டும் என்றால் பல விந்தணுக்கள் தேவையில்லை. ஒரேயோரு விந்தணு மனைவியின் கர்ப்பப்பையை அடையும் தன்மையுடன் இருந்தாலே போதும். இருப்பினும் அதிக எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருக்கும்போது அதில் ஒன்று ஈஸியாக கர்ப்பப்பையை அடையும். மாறாக குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருந்தாலும் அது வீரியத்துடன் இருக்கும் பட்சத்தில் கர்ப்பமாக்குவது எளிது என்கின்றனர் டாக்டர்கள்.

இதனால் இளைஞர்கள் விந்தணு தண்ணீயாக இருக்கிறதே.. மனைவியை கர்ப்பமாக்க முடியுமா? என்று சந்தேகம் கொள்ள வேண்டும். மாறாக விந்துவில் விந்தணுக்கள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொண்டாலே போதும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பினும் அருகே உள்ள டாக்டரை சந்தித்து இதுதொடர்பான சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

English summary
If you want to satisfy your wife in bed and get her pregnant, your sperm must be thick. Many people may have heard that if your sperm is watery, you cannot get pregnant. But how true is this? Let's take a detailed look at whether your sperm is watery and can you get your wife pregnant.

Get Notifications from Tamil Indiansutras