சென்னை: உடலுறவின்போது உடனடியாக விந்து வெளியேறுவது தாம்பத்தியத்தில் திருப்தியை ஏற்படுத்தாது. இதனால் ஆண்களுக்கு மன உளைச்சலும், பெண்களுக்கு உடலுறவில் திருப்தியின்மையும் ஏற்படும். ஆனால் உண்மையில் உடலுறவின்போது விந்தணுக்கள் உடனடியாக வெளியேறுவதை எளிதாக தடுக்கலாம். இதற்கு 2 விஷயங்களை செய்ய வேண்டும். அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
தாம்பத்தியம்.. ஆண்களுக்கும், பெண்களுக்கும் மிகவும் முக்கியமான உறவுகளில் ஒன்று. மனைவியின் பாலியல் ஆசையை கணவனும், கணவனின் பாலியல் ஆசையை மனைவியும் கட்டிலில் நிறைவேற்றுவது தான் தாம்பத்தியம். இந்த தாம்பத்திய உறவு அனைவருக்கும் திருப்திகரமாக உள்ளதா? என்றால் கேள்விக்குறி தான்.

ஏனென்றால் உடலுறவின்போது ஆண்கள் உடனடியாக உச்சக்கட்டத்தை அடைவார்கள். 2 முதல் 3 நிமிடங்களில் ஆண்களால் உச்சகட்டத்தை அடைய முடியும். ஆனால் பெண்களுக்கு கூடுதல் நேரம் பிடிக்கும்.
அதிலும் குறிப்பாக ஆண்கள் பலருக்கும் விந்து முந்துதல் பிரச்சனை என்பது இருக்கும். அதாவது உடலுறவு தொடங்கியதுமே விந்தணுக்கள் வெளியேறி விடும். இது ஆண்களுக்கு எப்படி பிரச்சனையாக இருக்கிறதோ? அதேபோல் தான் பெண்களுக்கும் பிரச்சனையாக உள்ளது. ஆண்கள் உச்சகட்டத்தை அடைந்தவுடன் பெண்களை கண்டுக்கொள்ளவது இல்லை. இதனால் பெண்கள் சரியான தாம்பத்திய உறவு இன்றி தவிப்பார்கள்.
இந்த விந்து முந்துதலை எளிதாக தவிர்க்கலாம். சதாரணமாகவே ஆண்கள் 2 விஷயங்களை பின்பற்றி மனைவியுடன் நீண்ட நேரம் ‛செக்ஸ்' செய்யலாம். அதன்படி முதல் விஷயம் என்னவென்றால், உடலுறவை வைக்கும்போது விந்தணுக்கள் வெளியேறுவதை அறிந்தவுடன் ஆணுறுப்பை, பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். அதன்பிறகு ஆணுறுப்பின் நுணிப்பகுதியை லேசாக ஒரு நிமிடம் வரை அழுத்தி பிடிக்க வேண்டும். இதனால் விந்தணுக்கள் வெளியேறுவதை தவிர்க்கலாம். இதனை மீண்டும் மீண்டும் செய்து உடலுறவு வைக்கலாம்.
இரண்டாவது விஷயம் என்னவென்றால் பொதுவாக உடலுறவின்போது பெண்களுக்கு மேல் ஆண்கள் அமர்ந்து தாம்பத்தியம் கொள்கின்றனர். இதனால் விந்தணுக்கள் சீக்கிரமாக வெளியேறும். மாறாக ஆண்களுக்கு மேல் பெண்கள் அமர்ந்து உடலுறவு வைக்கும்போது விந்தணுக்கள் வெளியேற தாமதம் ஆகும். இதனால் நீண்ட நேரம் உடலுறவு வைக்கலாம்.
ஒருவேளை இந்த 2 விஷயங்களையும் கடந்து விந்து வெளியேறும்போது கணவர்கள் உடலுறவை கைவிட கூடாது. மாறாக பெண்ணுறுப்பு மற்றும் மார்பகங்களை தூண்டி மனைவியை ஊச்சக்கட்டம் அடைய வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் கணவன் - மனைவி இடையேயான தாம்பத்திய உறவு சிறப்பாக அமையும்.



Click it and Unblock the Notifications



