•  

ஆரோக்கியமான செக்ஸ்க்கு ஏன் செவ்வாழை முக்கியம்? தெரிஞ்சுக்கோங்க

சென்னை: செக்ஸ் என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அடிப்படை. ஆனால் அப்படிப்பட்ட செக்ஸே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில், அதற்கேற்றார் போல உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மிக குறிப்பாக, செவ்வாழையை உணவில் அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

செக்ஸுக்கு அடிப்படை டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்தான். ஆண்களுக்கு இது விந்து உற்பத்தி, விறைப்புத்தன்மை, தசை வளர்ச்சி, எலும்பின் அடர்த்தி மற்றும் பாலியல் ஆசையை அதிகரிக்க இது தேவை. இது ஆண்களின் இனப்பெருக்க அமைப்பு மற்றும் இரண்டாம் நிலை பாலியல் பண்புகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது.

banana  sex
 

ஒருவேளை இது குறைவாக இருப்பின், பாலியல் உறவில் ஆர்வம் குறைவது அல்லது முழுமையாக விருப்பம் இல்லாமல் போவது என வாழ்க்கை கசந்துவிடும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவதால் விறைப்புத்தன்மை பெறுவதிலும், அதைத் தக்கவைப்பதிலும் சிரமம் ஏற்படும். விந்துக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறையும், இது கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.

உடலிலும் இதற்கான மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக தசை வலிமை மற்றும் தசை அளவு குறைதல், உடல் கொழுப்பு அதிகரித்தல், எலும்புகளின் அடர்த்தி குறைந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரித்தல், மற்றும் உடல் முடி உதிர்தல் போன்றவை ஏற்படும். தவிர சோர்வு, மனச்சோர்வு, எரிச்சல், ஆற்றல் குறைவு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற மனநிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இதை சரிசெய்ய சரியான உணவை எடுத்துக்கொள்வது முக்கியமாகும்.

இங்குதான் ஹீரோ போல வாழைப்பழம் என்ட்ரி கொடுக்கிறது. செவ்வாழைப்பழத்தில் உள்ள புரோமிலைன் என்ற நொதி, ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. செவ்வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரையான சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ் ஆகியவை உடனடி ஆற்றலைத் தருகின்றன. இது பாலியல் செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தியை வழங்குகிறது. இந்த பழத்தில் பொட்டாசியம் இருக்கிறது. பொட்டாசியம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடல் முழுவதும், குறிப்பாக ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் உள்ள டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம், மனநிலையை மேம்படுத்தும் செரோடோனின் ஹார்மோன் உற்பத்தியில் உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, பாலியல் உணர்வைத் தூண்டுகிறது. ஆகவே திருப்தியான செக்ஸ் வாழ்க்கைக்கு தினமும் ஒரு செவ்வாழை முக்கியம் பசங்களா.

English summary
Red bananas are gaining attention as a natural food to support a healthy sex life. Rich in potassium (for blood flow), vitamin B6 (for hormone regulation), and antioxidants, they may help boost energy, improve circulation, and enhance libido. While not a magic solution, incorporating nutrient-dense red bananas into a balanced diet can contribute to overall vitality and sexual wellness.

Get Notifications from Tamil Indiansutras