•  

தாம்பத்தியம் சிறக்க.. பிரைட் ரைஸ் வேண்டாம் பசங்களா! மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸ்

சென்னை: இல்லற வாழ்க்கையில் தாம்பத்தியம் மிகவும் முக்கியமான ரோல் வகிக்கிறது. எனவே, இதனை மேம்படுத்த உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இதற்காக சில டிப்ஸ்களை மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

துத்தநாகம், மக்னீசியம், வைட்டமின் E, நைட்ரேட், ப்ரோமிலின் என்சைம், பினைலேதிலமைன் மற்றும் செரோடோனின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கெள்ள வேண்டும். இவை இருக்கும் உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும், தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

foods  sex
 

சரி இதெல்லாம் எந்த உணவுகளில் இருக்கிறது என்பது பார்ப்போம். மீன், இறைச்சி, முட்டை, பருப்பு வகைகள், பூசணி விதைகள் மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றில் துத்தநாகம் இருக்கிறது. துத்தநாகத்தின் வேலையே டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிப்பதுதான். இந்த ஹார்மோன் ஆண்களின் விரைகளிலும், பெண்களின் அண்டகங்களிலும், அட்ரீனல் சுரப்பிகளிலும் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பாலினப் பண்புகளின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் பல உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரண்டாவதாக கீரைகள், முந்திரி, பூசணி விதைகள், வாழைப்பழம், மற்றும் அவகேடோ ஆகியவற்றில் மெக்னீசியம் இருக்கிறது. இது உடலில் ஆற்றலை அதிகரித்து நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. மன அழுத்தம் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையில் பெரிய ஓட்டை விழுந்துவிடும். எனவே அதை சரி செய்ய மேற்குறிப்பிட்ட விஷயங்களை உணவில் சேர்க்க வேண்டும்.

அடுத்து பாதாம், சூரியகாந்தி எண்ணெய், கீரைகள், மற்றும் அவகேடோ போன்றவற்றில் வைட்டமின் E அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் ஆன்டிஆக்சிடென்ட் ஆக செயல்படும். ஆன்டிஆக்சிடென்ட் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதேபோல சிவப்பு பீட்ரூட், கீரைகள், பூண்டு, மற்றும் வெங்காயம் போன்ற நைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள், உடலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்திக்கு உதவுகிறது. இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

செவ்வாழையில் ப்ரோமிலின் என்ற என்சைம், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இது உடலில் ஆற்றலை அதிகரிக்கவும், பாலியல் உணர்ச்சியைத் தூண்டவும் உதவும்.

அதேபோல அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்தல் நல்லது. குறிப்பாக பிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகள் உடல் பருமனுக்கு வழி வகுக்கும். இது தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

English summary
Discover the top foods scientifically linked to improved libido, stamina, and overall sexual function. This guide covers natural aphrodisiacs like dark chocolate, watermelon, and nuts, explaining how their nutrients enhance blood flow, hormone balance, and energy levels for a healthier sex life.

Get Notifications from Tamil Indiansutras