•  

எந்த வயதானாலும் செக்ஸை மட்டும் விட்றாதீங்க.. கணவன் - மனைவிகளுக்கு கிடைக்கும் நன்மை இதுதான்

சென்னை: கணவன் - மனைவி இடையே எந்த வயதானாலும் உடலுறவை மட்டும் கைவிடக்கூடாது. இப்படி செய்வதால் கணவன் - மனைவி இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இது சாத்தியமா? ஆம். எப்படி தாம்பத்திய உறவு கணவன் - மனைவி இடையேயான பிரச்சனையை தீர்க்கும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

நம் ஊர்களில் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு உடலுறவு வைத்து கொள்வதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தயக்கம் உள்ளது. மகள் வளர்ந்து விட்டாள். மகள் வளர்ந்துவிட்டாள் என்று பல தம்பதிகள் 40 வயதுக்கு மேல் பாலியல் உறவை தவிர்ப்பது உண்டு.

relationship  husband  wife
 

ஆனால் உண்மையில் அப்படி செய்யக்கூடாதாம். ஏனென்றால் கணவன் - மனைவி இடையேயான தாம்பத்தியம் இருவருக்கும் இடையே அன்பை அதிகரிக்கும். பிரச்சனையை குறைக்கும். ஒருவேளை சண்டையிட்டால் இந்த உறவின் மூலமாக இருவரும் பேசி கொள்ளும் நிலை வரலாம் என்கின்றனர்.

இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், ‛‛கணவன் - மனைவி இடையே எப்போதும் அன்பான உறவு இருக்குமா? என்றால் கிடையாது. அவ்வப்போது சண்டைகள் வருவது உண்டு. இந்த சண்டையை முடிந்தவரை இருவரும் பேசியே தீர்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை இருவரும் தொடர்ந்து பேசாமல் இருப்பது என்பது இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துவதோடு, கணவன் மீது மனைவிக்கும், மனைவி மீது கணவனுக்கும் பாலியல் ஆர்வத்தை குறைக்கும்.

இதனால் சண்டைக்கு பிறகு உடனடியாக கணவன் - மனைவி சேர்ந்து பாலியல் ஆர்வம் குறையாமல்பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை வயது அதிகரிப்பால் இருவர் இடையே பாலியல் ஆர்வம் இயல்பாகவே குறைந்தால் உரிய சிகிச்சை பெற்று கொள்ளலாம். தற்போது பல சிகிச்சைகள் உள்ளன. உறவுகளில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்தாலோ கவுன்சிலிங் சென்று இருவரும் தீர்த்து கொள்ளலாம்.

ஆனால் இந்த பிரச்சனைகளை உடனடியாக கணவன் - மனைவி தீர்க்காவிட்டால் அது தங்களை மட்டுமின்றி தனது துணையின் செக்ஸ் ஆர்வத்தை குறைப்பதோடு, கள்ளத்தொடர்பு, விவாகரத்துக்கு வழிவகுக்கலாம். மாறாக கணவன் - மனைவி இருவரும் சண்டையிட்டாலும் அதன்பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் பேசி உறவு வைத்து கொள்வது நல்லது. இருவருக்கும் இடையேயான தாம்பத்திய உறவு அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி அன்பை அதிகரிக்கும். இருவருக்கும் இடையே இனம்புரியாத அன்பு அதிகரிக்கும்'' என கூறியுள்ளனர்.

English summary
A husband and wife should not give up sex at any age. Experts say that by doing this, a good understanding can be established between the husband and wife and problems can be avoided. Is this possible? Yes. Here we will see how marital relationship can solve problems between husband and wife.

Get Notifications from Tamil Indiansutras