•  

தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபட.. இந்த உணவை அதிகமா சேர்த்துக்கோங்க!

சென்னை: வளரிளம் பருவத்தில் ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் தாம்பத்தியத்தில் நாம் போதுமான அளவுக்கு செயல்பாட்டுடன் இருக்கிறோமா? என்பதுதான். ஆனால் மருத்துவர்கள் கூறும் உணவு முறையை பின்பற்றினால் அப்படியான சந்தேகமே உங்களுக்கு வராது.

நீடித்த இயக்கமே தாம்பத்திய வெற்றிக்கு அடிப்படை. அப்படியெனில் அதை எப்பபடி சாத்தியமாக்குவது என்கிற கேள்வி எழலாம். மருத்துவர்கள் சிலர் இதற்கான பொதுவான உணவுகளை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

sex  human
 

இது மூன்றும் ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. எனவே இவற்றை மேம்படுத்தும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த உணவு பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பூண்டுதான். பூண்டில் அல்லிசின் என்கிற கந்தக சேர்மம் இருக்கிறது. பூண்டை நசுக்கும்போது வெளிவரும் நெடிக்கு இருதான் காரணம். இது நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்கிறது. நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களின் சுவர்களைச் சுற்றியுள்ள மென்மையான தசைகளைத் தளர்த்துகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக செல்கின்றன.

இந்த உணவு லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் இருப்பது இஞ்சி. இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் கலவை இருக்கிறது. இதுதான் இஞ்சிக்கு கார தன்மையை கொடுக்கிறது. இந்த ஜிஞ்சரால் ரத்த நாளங்களை விரிவாக்குகிறது. இதனால் ரத்தம் உடலின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக பாய்ந்து புத்துணர்ச்சியை கொடுக்கிறது. மட்டுமல்லாது இது மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது என்பதால் சோர்வில்லாமல் நம்மால் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபட முடியும்.

இந்த உணர்வு பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது மாதுளை. இந்த பழத்தில் பியூனிகாலஜின் எனும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கிறது. வைட்டமின் சி-ஐ விட இது பலமடங்கு சக்தி வாய்ந்தது. மாதுளை பழங்கள் சிவப்பாக இருப்பதற்கு காரணமும் இதுதான். இதை நாம் சாப்பிடுவதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்சைடை உருவாக்குகிறது. நைட்ரிக் ஆக்சைடின் நன்மைகளை நாம் முன்னரே பார்த்தோம். அந்த வகையில் இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பாலுறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து நீண்ட நேரம் விறைப்பு தன்மையை கொடுக்கிறது.

மாதுளை பழம், மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே இயல்பாகவே பாலுறவில் அதிக நாட்டம் கொள்ள இது தூண்டுகிறது.

இவை தவிர வாழைப்பழம், பாதாம் மற்றும் வால்நட் போன்றவையும் பாலுறவு சிறப்பாக அமைய உதவுகிறது. வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் இருக்கின்றன. எனவே இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து, சோர்வடையாமல் இருக்க உதவுகிறது. நட்ஸ்களில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உடல் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவுகிறது. எனவே தாம்பத்தியத்தில் வெற்றிபெற நினைத்தால் இந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.

English summary
Looking to enhance your stamina and performance in the bedroom? Your diet plays a crucial role. Learn which foods to incorporate—from blood-flow boosters like garlic and pomegranate to energy-rich options like bananas and oats—to improve your libido, increase stamina, and support overall sexual health. Discover the key nutrients and dietary changes that can help you engage in intimacy for a longer time, naturally and effectively.

Get Notifications from Tamil Indiansutras