சென்னை: ஒவ்வொருவரும் தங்களின் மனைவி, கணவன், காதலன், காதலியை இறுக்கி அணைத்து முத்தம் கொடுப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதுபற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:
முத்தம்.. அன்பு - காமம் என்று இருவகைகளில் பரிமாறப்பட்டு வருகிறது. திருமண உறவில் கணவன் - மனைவியாக இருப்போரும், காதலர்களாக உலா வருவோர் இடையே அன்பையும், காதல் உணர்வையும் ஏற்படுத்துகிறது இந்த முத்தம். அதேவேளையில் நம் உறவினரின் குழந்தைகளுக்கு வழங்கும் முத்தம் அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
இதனால் ஒவ்வொருவருக்கும் முத்தம் கொடுத்தது அல்லது முத்தம் வாங்கியது என்ற அனுபவம் நிச்சயம் இருக்கும். இப்போது முத்த கலாச்சாரம் என்பது குறைந்து விட்டது. வெளிநாடுகளில் பொதுவெளியில் முத்தம் கொடுப்பது இருந்தாலும் நம் நாட்டில் அது குறைந்துவிட்டது. இப்படி முத்தம் கொடுக்க அல்லது முத்தம் வாங்க நீங்கள் கூச்சப்படுகிறீர்களா? அப்படியென்றால் உண்மையில் வருத்தம் தான் பட வேண்டும். ஏனென்றால் முத்தம் கொடுப்பதன் பின்னணியில் பல நன்மைகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:

பந்தம் அதிகரிக்கும்
ஒவ்வொரு முத்தமும் உடலில் ஆக்சிடாக்ஸின் (oxytocin), டொபமைன் ( dopamine) மற்றும் செரோட்டோனின் (serotonin) உள்ளிட்ட ஹார்மோன்களை உடலில் சுரக்க வைக்கிறது. இது தம்பதி, காதலர்களுக்கு இடையே என்று பந்தத்தை அதிகரிக்க செய்யும்.
ஆக்ஸிடாசின் எனும் ஹார்மோன் பிணைப்பை அதிகரிக்கம். இது பாச உணர்வை தூண்டும். துணையுடன் அடிக்கடி முத்தம் கொடுப்பதன் மூலமாக இருவருக்கும் இடையேயான பாசம் அதிகரிக்கும். உறவில் திருப்தி ஏற்படும்.
மனஅழுத்தம் குறையும்
உடலில் கோர்டிசோல் (Cortisol) எனும் ஹார்மோன் சுரப்பதால் தான் மனஅழுத்தம் உருவாகிறது. முத்தம் கொடுப்பதன் மூலமாக கார்டிசோல் (cortisol )ஹார்மோன் சுரப்பது குறைகிறது. இதனால் மனஅழுத்தம் குறையும்.
பாலியல் உணர்வை தூண்டும்
சில சமயங்கள் ஒருவருக்கு பாலியல் உணர்வு இருக்கும். இன்னொருவருக்கும் பாலியல் உணர்வு இருக்காது. இந்த சமயத்தில் மாற்றி மாற்றி முத்தம் கொடுப்பது பாலியல் உணர்வை தூண்டுமாம்.
பதற்றம் குறையும்
மனஅழுத்தம் இருக்கும்போது ஒருவித பதற்றம் ஏற்படும். இந்த சமயத்தில் தனக்கு பிடித்தவரிடம் இருந்து முத்தம் கிடைப்பது பதற்றத்தை தணிக்கும். முத்தத்தால் சுரக்கும் ஆக்ஸிடாஸின் பதற்றத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதயத்துக்கு நல்லது
முத்தம் கொடுக்கும்போது ஒவ்வொருவரின் இதயத்துடிப்பும் அதிகரிக்கும். அப்போது ரத்த நாளங்கள் உடலில் விரிந்து கொடுக்கும். இதனால் ரத்தம் ஓட்டம் அதிகரிப்பதோடு, ரத்த அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். அதேபோல் தலைவலி இருந்தால் அதையும் முத்தம் விரட்டியடிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
முத்தம் கொடுப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒவ்வொருவரின் உமிழ்நீரிலும் நுண்ணுயிர்கள் உள்ளன. அடிக்கடி தம்பதி, காதலிகள் முத்தமிடும்போது நுண்ணுயிரிகள் இடம்பெயர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே மாற்றி மாற்றி முத்தம் கொடுங்கள்.. மனமகிழ்ச்சியாய் வாழுங்கள். ஒவ்வொருவரும் தங்களின் மனைவி, கணவனுக்கு முத்தம் கொடுங்கள்.. முத்தம் கொடுப்பதற்கு முன்பு இருவரும் தங்களின் வாயை சுத்தம் செய்து கொள்வது நல்லது. அதேபோல் காதலனும், தங்களின் காதலிக்கு அவர்களின் அனுமதி கிடைத்தால் முத்தம் கொடுக்கலாம். அதைவிட்டுவிட்டு முத்தம் கொடுக்கிறேன் என்று வேறு யாரையும் சீண்டி வாங்கி கட்டி கொள்ளாதீர்கள்..



Click it and Unblock the Notifications



