•  

மனஅழுத்தம் இருக்கா? ஆண்மை குறைபாடு வர சான்ஸ் இருக்காம்.. பிரச்சனையில் விடுபடுவது எப்படி?

சென்னை: தற்போது பலரும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறுவதை நாம் கேட்டு இருக்கலாம். வீட்டு பிரச்சனை, பணப்பிரச்சனை, வேலை பிரச்சனை என்று பலரும் மனசோர்வு மற்றும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மனஅழுத்தம் என்பது உடல் ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலையில் ஆண்மை குறைபாட்டுக்கும் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றனர்.

ஒரு காலத்தில் பெரியவர்கள் தான் கவலையுடன் காணப்படுவார்கள். ஆனால் இப்போது சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் முதல் பெரியர்கள், முதியவர்கள் வரை பலரும் மனஅழுத்தத்துடன் காணப்படுகின்றனர். இதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு.

sex  relationship
 

மனஅழுத்தம் ஏற்படுவதற்கு வீட்டு பிரச்சனை, பணப்பிரச்சனை, வேலை பிரச்சனை, குடும்ப பிரச்சனை என்று பல காரணங்களை நாம் கூறலாம். இந்த மனஅழுத்தம் என்பது செக்ஸ் உறவை பாதிக்குமா? என்றால் ஆம் என்கிறது பல ஆய்வுகள்.

அதேபோல் மனஅழுத்தம் கண்டிப்பாக ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் என்கின்றனர் பல ஆய்வுகள். உடலுறவின்போது மனம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களின் இணையை மகிழ்ச்சிப்படுத்த முடியும். இல்லாவிட்டால் அவர்களால் தாம்பத்திய உறவில் முழு திருப்தியை பெறவும், கொடுக்கவும் முடியும்.

உதாரணமாக உடலுறவுக்கு செல்லும்போது ஒருவர் பயம், பதற்றம், மனஅழுத்தத்தில் இருந்தால் அவரால் இயல்பாக செயல்பட முடியாது. ஆணுறுப்பில் விறைப்பு தன்மை குறைந்து விடும். உடனடியாக சிறிய அளவிலான விந்தணுக்கள் மட்டுமே வெளியேறலாம். இது மனைவியை திருப்திப்படுத்தாமல் போகலாம். இதனால் அவர்களுக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கை ஃபெயிலாக மாறலாம்.

மேலும் மனஅழுத்தம் இருக்கும் போது உடலில் நைட்ரஸ் ஆக்சைடு சுரக்காது. இந்த நைட்ரஸ் ஆக்சைடு என்பது செக்ஸ் உறவின்போது சுரக்க வேண்டும். அதற்கு செக்ஸ் ஆர்வம் இருக்க வேண்டும். மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நைட்ரஸ் ஆக்சைடு சுரக்காது. கவலையாக இருப்பது, மனஅழுத்தத்தில் சோர்வாக இருப்பதால் நைட்ரஸ் ஆக்சைடு சுரக்காமல் போகலாம். மாறாக பிற ஹார்மோன்கள் சுரக்கலாம். இது ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஒரு காலத்தில் உடல் ரீதியான காரணங்கள் தான் ஆண்மை குறைவுக்கு காரணம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது அது மாறி உள்ளது. சமீபத்திய ஆய்வுகளில் ஆண்மை குறைபாட்டுக்கு 80 சதவீதம் உடல் ரீதியிலான காரணமும், 20 சதவீதம் மனரீதியிலான காரணமும் தான் என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மனஅழுத்தமும் ஆண்மை குறைபாட்டுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்கின்றனர் டாக்டர்கள்.

English summary
We may have heard that many people are currently experiencing stress. Many people are experiencing depression and anxiety due to problems at home, money problems, and work problems. Studies show that stress can cause many physical effects and can also be a cause of erectile dysfunction.

Get Notifications from Tamil Indiansutras