•  

மனைவியுடன் நீண்ட நேரம் செக்ஸ் வைப்பது எப்படி? ஆண்களே இதை ஃபாலோ பண்ணுங்க.. 14 பாயிண்ட் இதோ

சென்னை: திருமண உறவில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தாலும் கூட அவர்கள் இடையேயான செக்ஸ் உறவு இன்னும் இருவரையும் நெருக்கமாக்கும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை அதிகரிக்கும். வயதாக வயதாக கணவன் - மனைவி இடையேயான தாம்பத்திய உறவு திருப்தியளிக்காமல் போகலாம். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வரலாம். இந்த சண்டையை தவிர்த்து மனைவியுடன் நீண்ட நேரம் செக்ஸ் வைக்க ஆண்கள் இந்த6 ஸ்டெப்புகளை பாலோ செய்தால் போதும்.

தாம்பத்தியம்.. கணவன்- மனைவி இடையேயான உறவை வலுவாக்கும் ஒரு நிகழ்வு. திருமணமான புதிதில் அடிக்கடி தாம்பத்தியத்தில் ஈடுபடும் ஜோடிகள் நாளடைவில் அதனை குறைத்து கொள்கின்றனர். குடும்ப சூழல், பணி நேரம் அதிகரிப்பு உள்பட பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

sex  couple
 

ஆனாலும் கூட தாம்பத்திய உறவின்போது கணவன் - மனைவியை திருப்திப்படுத்துகிறார்களா? என்றால் பல பெண்களின் பதில் இல்லை என்பதாக தான் இருக்கிறது. இதனை புள்ளிவிவரங்களும் உறுதி செய்கின்றன.

உலகில் 82 சதவீத மக்கள் தங்கள் உடலுறவில் மகிழ்ச்சியடையவில்லை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் கணவர் உடலுறவை குறைவான நேரத்தில் முடித்து கொள்வதாக பல பெண்கள் நினைக்கின்றனர். மேலும் தனக்கு தேவையான ஆசையை கணவரிடம் சொல்ல முடியாமல் பல பெண்கள் தவிக்கின்றனர். இதனால் தாம்பத்தியத்தின் போது மனைவியை முழு திருப்திப்படுத்துவது கணவரின் கடமையாகும். சரி இது இருக்கட்டும். இனி மனைவியுடன் எப்படி நீண்ட நேரம் உடலுறவு வைப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

முன் விளையாட்டுகளில் கவனம்

சில ஆண்கள் தாம்பத்திய உறவில் penetration மட்டுமே முக்கியம் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அப்படியில்லை. முன்விளையாட்டுகள் அவசியம். உடலில் உணர்ச்சி மிக்க இடங்களை தொடுதல், முத்தமிடுதல், வாய் வழி செக்ஸ் உள்ளிட்டவை அவசியம். இது நீண்ட நேர செக்ஸ்க்கு உதவுவதோடு பெண்களை திருப்திப்படுத்தவும் வழிவகுக்கும். 2017 ம் ஆண்டு பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 36.6 சதவீத பெண்கள் முன்விளையாட்டுகள் அவசியம். இதன்மூலம் உடலுறவில் திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளனர்.

விட்டு விட்டு உடலுறவு

சிலருக்கு உடலுறவின்போது உடனடியாக விந்து வெளியேறிவிடும். இதனால் இணையை திருப்திப்படுத்த முடியாத நிலை வரும். இதனை எளிதாக தவிர்க்கலாம். இதற்கு ஆண்கள் சிறிது இடைவெளி விட்டு பாலியல் செயல்பாட்டை தொடர வேண்டும். விந்து வெளியேறுவது போல் தோன்றினால் சில வினாடிகள் இடைவேளை எடுத்து கொண்டு ஆழமாக சுவாசித்து மீண்டும் உறவை தொடங்கலாம். இதன்மூலம் விரைவாக விந்து வெளியேறுவது தவிர்க்கப்படுவதோடு கூடுதல் நேரம் உறவு வைத்து மனைவியை திருப்திப்படுத்தலாம்.

புதிதாக முயற்சி செய்யுங்கள்

கணவன் - மனைவியாக நீண்டகாலம் இருக்கும்போது உடலுறவு போர் அடித்து விடும். இதனால் உடலுறவையும் சுவாரசியமாக்க வேண்டும். அதற்கு வித்தியாசமான முறைகளில் செக்ஸ் செய்யலாம். மனைவியிடம் கேட்டு அவர்களுக்கு ஏற்ப புதிய பொஷிஷன்கள், புதிய இடங்களில் முயற்சி செய்யலாம்

மனஅழுத்தம் - பதற்றத்தை தவிருங்கள்

மனஅழுத்தம் மற்றும் பதற்றம் என்பது உடலுறவுக்கான எதிரிகளாக உள்ளன. இதனால் முடிந்தவரை மனஅழுத்தம், பதற்றத்தை தவிர்க்க பாருங்கள். இதனால் நேரம் கிடைக்கும் போது உடற்பயிற்சி செய்யலாம், தூங்கலாம். யோகா செய்யலாம். மனதை உற்சாகப்படுத்தும் தெரபி எடுத்து கொள்ளலாம்.

புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது ரத்த அழுத்தத்த்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் வழிக்காட்டிய இருக்கும். அதோடு உடலுறவிலும் புகைப்பழக்கம் மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும். 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட அனலிசிஸில் புகைப்பழக்கம் கொண்டவர்களை விட புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் உடலுறவில் சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இதனால் புகைப்பழக்கத்தை கைவிடுவது நல்லது.

வெளிப்படையாக பேசுங்கள்

செக்ஸ் வைக்கும்போதும், அதற்கு தயாராகும்போது உங்களின் துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள். உடலுறவு பற்றிய தயக்கத்தை இருவரும் கைவிட்டு தங்களின் விருப்பத்தை கேட்டு முயற்சி செய்யலாம். இதன்மூலம் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்

உடல்நலனை சிறப்பாக வைத்து கொள்வது அவசியம். இதனால் தினமும் உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள். இதன்மூலம் ரத்த அழுத்தம், இதய பிரச்சனை, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக pelvic floor exercises அல்லது kegels உடற்பயிற்சிகள் செய்வது மனைவியுடனான தாம்பத்திய உறவை சிறப்பாக்கும்.

English summary
Even if a husband and wife love each other in a marriage, sex between them will bring them closer. It will increase the bond between the two. With age, the marital relationship between the husband and wife may become unsatisfying. This can lead to fights between the two. To avoid this fight and have sex with your wife for a long time, men just need to follow these 6 steps.

Get Notifications from Tamil Indiansutras