சென்னை: இரவு நேரத்தில் மனைவியுடன் உடலுறவு வைக்கும்போது அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதிகப்படியான உணவு எடுத்து கொள்வது என்பது தாம்பத்தியத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக கணவன் - மனைவி இடையே தாம்பத்தியம் வைத்து கொள்வதற்கு நேரம், காலம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஆசை வரும்போதெல்லாம் தம்பதிகள் உடலுறவு வைத்து கொள்ளலாம். ஆனால் இது சாத்தியமா? என்றால் கிடையாது.

பகல் நேரங்களில் வீட்டில் மாமனார், மாமியார், குழந்தைகள் இருப்பார்கள். இதனால் பகல் நேரங்களில் உடலுறவு கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். இதனால் நம் நாட்டில் பெரும்பாலான தம்பதிகள் இரவு நேரத்தில் தான் தாம்பத்தியம் வைத்து கொள்கின்றனர்.
இப்படியான சூழலில் ஆண்கள் இரவு நேரத்தில் அதிகப்படியான உணவை எடுத்து கொள்வது தாம்பத்திய உறவில் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் உடலுறவு வைக்கும் முன்பு இரவு நேரங்களில் ஆண்கள் வயிறு நிறைய சாப்பிடாமல் இருப்பது நல்லது என்கின்றனர். ஏனென்றால் வயிறு நிறைய சாப்பிடும்போது உடலில் உள்ள ரத்தங்கள் அதனை ஜீரணம் செய்யும் பணியை தான் செய்யும்.
இந்த வேளையில் உடலுறவு வைக்கும்போது ஆண் உறுப்புக்கு அதிகப்படியான ரத்த ஓட்டம் கிடைக்காது. இதனால் ஆணுறுப்பு விறைப்புத்தன்மை அதிகம் இருக்காது. இதனால் தாம்பத்தியத்தில் குறைபாடு வரலாம். ஆண்களுக்கு மனஉளைச்சலும், பெண்களுக்கு திருப்தியின்மையும் வரலாம். இதனால் இரவு நேரத்தில் ஹெவி உணவுகளை எடுக்காமல் லைட்டான உணவுகளை ஆண்கள் எடுத்து கொண்டு உடலுறவு வைப்பது நல்லது.
இதனால் மதிய வேளையில் அதிகப்படியான உணவுகள் எடுத்து கொண்டு இரவில் ‛லைட்' டின்னர் முடித்து ஒரு மணிநேரம் வரை இடைவெளி விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது இருவருக்கும் நல்லஉணர்வை தரலாம். மேலும் இரவு நேரத்தில் வெற்றிலை எடுத்து கொள்வது ஜீரணத்துக்கு உதவும். இதையும் ஆண்கள் கடைப்பிடிக்கலாம்.
அதேபோல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு பயன்படுத்தும்போது அது ஜீரணத்துக்கு அப்பாற்பட்டு காமபெருக்கியாகவும் செயல்படும். இது ஆண்களுக்கு கட்டிலிலும் மனைவியை திருப்திப்படுத்த உதவும்.



Click it and Unblock the Notifications



