•  

விந்தணு வாய்க்குள் போனால் பிரச்சனையா? ஆண் -பெண் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மேட்டர்

சென்னை: உடலுறவின்போது ஆண்களின் விந்தணு வாய்க்குள் செல்வது பாதுகாப்பா? இல்லையா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதேபோல் மனைவி அல்லது பெண் துணையை வாய்வழி செக்ஸ் செய்ய செய்வது பாதுகாப்பானதா? இல்லையா? என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

திருமண வாழ்க்கையில் ஒரு பகுதியாக தாம்பத்தியம் உள்ளது. வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் கணவன் - மனைவி இடையேயான செக்ஸ் உறவு தான் அது. இதில் பலருக்கும் தயக்கங்கள் இருக்கும்.

oral sex  sperm  relationship
 

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் கூட ஆணுக்கும், பெண்ணுக்கும் சில இனம்புரியாத கேள்விகள், சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் செக்ஸ் உறவு பற்றி யாரும்வெளிப்படையாக பேசாதது தான்.

இதுபற்றி ஏதாவது சந்தேகம், கேள்விகள் கேட்டால் எங்கே தன்னை தவறாக நினைத்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் இதற்கு முக்கிய காரணம். இருப்பினும் சிலர் தங்களின் தோழிகள், நண்பர்களிடம் கேட்டு தீர்த்து கொள்வார்கள். ஆனாலும் இந்த தாம்பத்திய உறவு பற்றிய வெளிப்படை பேச்சு குறைவு என்பதாலே பல கட்டுக்கதைகளும் உலா வருகின்றன.

இதனால் தொடர்ந்து செக்ஸ் உறவில் பலருக்கும் சந்தேகங்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் ஆண்களின் விந்தணுக்களை வாய்க்குள் எடுத்து கொள்வது பாதுகாப்பானதா? ஆபத்தானதா? என்ற சந்தேகமும் உண்டு. இதற்கு சிலர் விந்தணு வாய்க்குள் சென்றால் பிரச்சனை வராதும் என்றும், இன்னொரு தரப்பினர் ஆபத்து வரலாம் என்றும் கூறியிருக்கலாம்.

ஆனால் உண்மை என்ன? என்பது பற்றி பல டாக்டர்கள் யூடியூப்களில் பேசி உள்ளனர். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போத, ‛‛ பொதுவாக கணவன் - மனைவி அல்லது ஒரேயொரு பார்ட்னர் இருக்கும்போது இத்தகைய உறவு என்பது யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. இருவருக்கும் பாதுகாப்பானதாகவே இருக்கும். விந்தணு வாய்க்குள் செல்வது பிரச்சனையாக இருக்காது.

இருப்பினும் உடலுறவுக்கு முன்பாக ஆண் தனது பிறப்புறுப்பை சுத்தம் செய்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி மனைவி அல்லது தனது ஜோடியை இந்த வகை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தக்கூடாது. விரும்பினால் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம். அதே வேளையில், பல பெண்கள், பல ஆண்களுடன் உடலுறவு வைத்து இருப்பவர்கள் என்றால் இத்தகைய உறவை தவிர்க்க வேண்டும். மீறினால் பால்வினை நோய் வர வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Is Oral Sex Safe or Not? (வாய்வழி செக்ஸ் பாதுகாப்பானதா? இல்லையா?): Many people have the question of whether it is safe for men to ejaculate into their mouths during sex. Similarly, you can learn about whether it is safe for a wife or female partner to perform oral sex.

Get Notifications from Tamil Indiansutras