•  

முத்தம் ரொம்ப நல்லதுங்க! காதலிப்பவர்கள் மட்டுமல்ல.. கணவன்மார்களே நீங்களும் தெரிஞ்சுக்கோங்க

சென்னை: பெரும்பாலும் காதலர்கள்தான் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்வார்கள். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு முத்தம் காணாமல் போய்விடும். இணையர்களிடையே பிரச்சனை வருவதற்கு காரணமே இங்கிருந்துதான் தொடங்குகிறது. எனவே கணவன்மார்களே முத்தமிடுவதை மறக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முத்தமிடும்போது முகத்தில் உள்ள சுமார் 30 தசைகள் இயங்குகின்றன. இதனால் ஒரு நிமிட முத்தத்திற்கு 2 முதல் 3 கலோரி வரை எரிக்கப்படுகிறது. தீவிரமான முத்தம் நிமிடத்திற்கு 26 கலோரி வரை எரிக்க உதவும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அதிகமாக முத்தமிடுங்கள்.

health  kiss
 

இது தவிர மன அழுத்தத்தை குறைக்கவும் முத்தம் பயன்படுகிறது. முத்தமிடும்போது ஆக்ஸிடோசின், டோபமைன், மற்றும் செரோடோனின் போன்ற மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்துகின்றன. அதே நேரத்தில், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல்-இன் அளவும் குறைகிறது. எனவே டென்ஷனாக இருக்கும் நேரத்தில் சட்டென மனைவியை வளைத்து பிடித்த நச்சுன்னு ஒரு கிஸ் அடிச்சுவிடுங்க.

முத்தமிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதெப்படிங்க சாத்தியம்? என கேள்வி எழலாம். இதற்கு மருத்துவர்கள் அறிவியல் ரீதியில் விளக்கமளித்திருக்கின்றனர். அதாவது முத்தமிடும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பரிமாறப்படுகின்றன. இது உடலில் புதிய கிருமிகளுக்கு எதிராகப் போராட நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. குறிப்பாக, சைட்டோமெகல்லோவைரஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலை வலுப்படுத்த இது உதவும்.

இப்போது புரியுதா? ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க மனைவியை பிடிச்சு முத்தம் கொடுங்க. இது மட்டுமில்லீங்க, முத்தமிடுவது மூலம் இரத்த அழுத்தம் கூட குறையுதாம். முத்தமிடும்போது இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் வாய் மொழியாக இல்லாமல் இது தொடர்பான சரியான ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆய்வின் முடிவில் தெரிய வந்த விஷயங்களைதான் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு. இது இருவருக்குமிடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்தி, நெருக்கத்தை அதிகரிக்கிறது. ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரப்பு, ஒருவருக்கொருவர் நம்பிக்கை மற்றும் பாசத்தை உருவாக்க உதவுகிறது. நீங்கள் மற்றவர்களால் விரும்பப்படுகிறீர்கள் என்பதை தெரிவிக்க முத்தம் வாங்க வேண்டும். அதேபோல உங்கள் மனைவிக்கு நீங்கள் ஐ லவ் யூ சொல்வதை விட ஒரு முத்தம் கொடுப்பது சிறந்தது.

English summary
Studies show that kissing plays a vital role in increasing intimacy and strengthening emotional bonds in relationships. The act of kissing triggers the release of hormones like oxytocin and dopamine, which are crucial for feelings of attachment, love, and happiness. This scientific finding highlights how kissing is not just a physical act, but a key component for fostering a deeper connection and improving relationship health.

Get Notifications from Tamil Indiansutras