சென்னை: கணவன் - மனைவி நீண்டகாலம் அன்போடு இருக்க வேண்டும் என்றால் வெறும் பணம், அன்பு, பாசம் மட்டும் போதாது. தங்களின் துணையை திருப்தி படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தோற்றுப்போவதாலே சில நேரம் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மனைவியை கட்டிலில் முழு திருப்தியடைய கணவன்கள்சாப்பிட வேண்டிய உணவு, பழ வகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
கணவன் - மனைவி இடையேயான பாலியல் உணர்வு என்பது உடல் ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் இன்பத்தையும் கொடுக்கும். ஆனால் பலரும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு உடலுறவில் ஆர்வம் காட்டுவது இல்லை. இது தம்பதி இடையே வெறுப்பை ஏற்படுத்தலாம். அதோடு குடும்பத்தில் கலகத்தை ஏற்படுத்தலாம். உண்மையில் இந்த பிரச்சனையை எளிதாக தவிர்க்கலாம். அதோடு கணவன் - மனைவி குறிப்பிட்ட உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் தங்களின் இணையை திருப்திப்படுத்தலாம்.

ஏனென்றால் பல உணவுகளுக்கு பாலியல் செயல்பாட்டை அதிகரிக்கும் சக்தி உள்ளது. அதுமட்டுமின்றி சத்தான உணவு எடுத்து கொள்வதன் மூலம் பாலுணர்வு அதிகரிப்பது மட்டுமின்றி உடலில் ரத்த ஓட்டம் சீராகும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இது தம்பதி இடையேயான பாலியல் உறவுக்கு கைக்கொடுக்கும்.
பொதுவாக உடலுறவு சிறப்பாக அமைய வேண்டும் என்றால் உடலில் போதிய அளவில் ஜிங்க் எனும் சத்து இருக்க வேண்டும். இந்த ஜிங்க் என்பது டெஸ்டோஸ்டிரோன் அளவை கட்டுப்படுத்தும். டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் போது செக்ஸில் ஆர்வம் இல்லாமல் போகும். குறிப்பாக விறைப்பு தன்மை இல்லாமல் போகலாம். அதேபோல் கருவுறுதலுக்கு அவசியமான விந்தணுவின் வீரியத்தை குறைத்து விடும்.
மேலும் இந்த ஜிங்க் என்பது ஹார்மோன் உற்பத்தியில் ஈடுபடும் செல்கள் சேதப்படுவதில் இருந்து பாதுகாப்பதோடு டெஸ்டோஸ்டிரோனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றி உடலுறவுக்கு தேவையான வலுவை கொடுக்கிறது. இந்த ஜிங்க் எந்தெந்த உணவுகளில் அதிகம் உள்ளது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கடல் உணவுகள்
Oysters (கடல் உணவுகள்) உணவுகளை எடுத்து கொள்ளலாம். இது பாலூணர்வை தூண்டும். இந்த உணவில் அதிகளவில் ஜிங்க் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பிறப்புறுவுக்கான ரத்த ஓட்டத்தை சீராக்கும். அதுமட்டுமின்றி இது டெஸ்டோஸ்டிரோன் அளவை கட்டுப்படுத்தும். இதனால் இறால், நண்டு, மத்தி மீன்களை அதிகம் எடுத்து கொள்ளலாம்.
மீன்கள்
அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிடலாம். சால்மன், சார்டின்கள், டுனா மற்றும் ஹாலிபட் உள்ளிட்ட மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதோடு, பாலியல் செயல்பாட்டை குறைக்கும் சில நோய்களின் அபாயத்தை குறைக்கும். மீன்களிலும் ஜிங்க் அதிகம் உள்ளது. வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை மீன் உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
மாட்டிறைச்சி
கடல் உணவுகளை தவிர்த்து மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். மாட்டிறைச்சியில் எல் அர்ஜினைன், எல் கார்னைடைன், ஜிங்க் உள்ளிட்டவை உள்ளன. இருப்பினும் அதிகப்படியான சிவப்பு இறைச்சி சாப்பிடுவது இதயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் கடல் உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது நல்லது.
சைவ பிரியர் என்றால்..
அதேபோல் அசைவ பிரியராக நீங்கள் இல்லாவிட்டால் சைவ உணவுகளையும் எடுத்து கொள்ளலாம். அதன்படி வேகவைத்த பீன்ஸ் பூசணி விதைகள், ஜிங்க் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட தானியங்களை எடுத்து கொள்ளலாம் மேலும் பால் மற்றும் சீஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு இந்த ஊட்டசத்துகளை பெறலாம்.
அதேபோல் முந்திரி, பாதாம் பருப்புகளில் ஜிங்க் அதிகம் உள்ளது. அதேபோல் வால்நட்ஸ் பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், பீக்கன்ஸ், ஹேசல்நட்ஸ், வேர்க்கடலை உள்ளிட்டவற்றிலும் ஒமேகா 3 உள்ளதால் அதனையும் சைவ பிரியர்கள் அதிகம் எடுத்து கொள்ளலாம்.
பழ வகைகள்
உயர் ரத்த அழுத்தம் என்பது பாலியல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலமாக சரிசெய்யலாம். அதன்படி ஆப்பிள்களை அதிகம் எடுத்து கொள்ளலாம். ஆப்பிளில் குர்செடின் எனும் பொருள் உள்ளது. இது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் ஸ்ட்ராபெர்ரிகள், அவுரி நெல்லிகள் அடர் நிற திராட்சைகள், செர்ரிகள் சிட்ரஸ் பழங்கள் உள்ளிட்டவைகளில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. மாறாக சர்க்கரை, நிறைய கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



