•  

ஆண்மை குறைபாடு ஏற்படுவது எப்படி? இந்த விஷயத்தை எல்லாம் உடனே விட்டுவிடுங்கள்.. ஆண்களே கவனம்

சென்னை: மனைவியை கட்டிலில் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் ஆணுறுப்புக்கான ரத்தம் ஓட்டம் முறையாக செல்ல வேண்டும். அதேபோல் விறைப்பு தன்மையுடன் ஆணுறுப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு ஆண்மை குறைபாடு இருக்கும். இந்த ஆண்மை குறைபாடு எதனால் ஏற்படுகிறது? அதனை தடுப்பது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தற்போது இளைய தலைமுறையினர் இடையே விவாகரத்து பெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. பணத்தகராறு, இருவருக்கும் இடையேயான புரிதல் ஏற்படாமல் இருப்பது, ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் செல்வது என பல்வேறு காரணங்களாக கூறலாம்.

relationship
 

மேலும் கள்ளத்தொடர்பு, தாம்பத்தியத்தில் திருப்திப்படுத்தாத செயல் உள்ளிட்டவையும் சில தம்பதிகள் இடையே விவாகரத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. பொதுவாகவே திருமண பந்தத்ததில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு தங்களின் விருப்பம், ஆசையை நிறைவேற்றி வாழ்வார்கள். இதில் தாம்பத்தியமும் முக்கியம்.

ஆனால் பல வேளைகளில் தாம்பத்திய உறவின்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைவது இல்லை. ஆண்கள் 2 அல்லது 3 நிமிடத்தில் உச்சக்கட்டம் அடையும் நிலையில் பெண்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும். ஆனால் அதனை கண்டுக்கொள்வது இல்லை. மேலும் சில ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும் இருக்கும். ஆணுறுப்பில் விறைப்பு தன்மை இருக்காது.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவர்களை அணுகி தீர்வு காணலாம். அந்த பிரச்சனையை எளிதில் சரிசெய்யலாம். இருப்பினும் கூட ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட சில முக்கிய காரணங்கள் உள்ளன. அது என்னென்ன? அந்த பழக்க வழக்கங்களை தவிர்த்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

அதில் முதல் விஷயம் என்னவென்றால் மதுபானம் எடுத்து கொள்வது. மதுபானம் உடல்நலத்துக்கு கேடானது. இருப்பினும் பலரும் அதனை விரும்பி குடிக்கின்றனர். இது ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தலாம். 2வது மேட்டர் என்னவென்றால் அதேபோல் புகைப்பிடிக்கும் பழக்கம். இது புற்றுநோய் மட்டுமின்றி ஆண்மை குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்று வார்னிங் செய்துள்ளனர் டாக்டர்கள்.

இந்த வரிசையில் 3வது இடத்தில் இருப்பது அதிகப்படியான உடல் எடை. ஆண்கள் தங்களின் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதிகப்படியான உடல் எடை என்பது செக்ஸில் முழு ஈடுபாட்டை காட்ட விடாது. ஆண்மை குறைபாட்டையும் ஏற்படுத்தலாம். இதனால் அது பார்ட்னருக்கு வெறுப்பை உண்டாக்கும் என்கின்றனர் டாக்டர்கள்.

அதேபோல் அதிகப்படியான டென்ஷன், சர்க்கரை வியாதி, உடலில் கொழுப்பு சார்ந்த பாதிப்பு இருந்தாலும் ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்துமாம். இதனால் இப்படியான பாதிப்பில் உள்ளவர்கள் டாக்டர்களை அணுகி அதனை கண்ட்ரோலில் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். மேற்கூறிய இந்த பாயிண்ட்டுகளை முறையாக கடைப்பிடித்தாலே பெரும்பாலானவர்கள் ஆண்மை குறைபாட்டில் இருந்து தப்பித்து தங்களின் மனைவியை கட்டிலில் மகிழ்ச்சி அடைய செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
If you want to satisfy your wife in bed, the blood flow to the penis should be regular. Likewise, the penis should be erect. But some men have erectile dysfunction. What causes this erectile dysfunction? How to prevent it? Let's see here.

Get Notifications from Tamil Indiansutras