•  

தாம்பத்தியத்திற்கு சரியான நேரம் இதுதான்.. தூங்கிடாதீங்க பசங்களா! முழிச்சுக்கோங்க

சென்னை: "மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன் மூச்சை நிறுத்திவிடு" என பாரதியார் ஒன்னும் சும்மா சொல்லவில்லை. மோகம் மனிதர்களுக்கு முக்கியமான விஷயம். எனவே, அந்த விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, தாம்பத்யத்தை சரியான நேரத்தில் அனுபவிக்க வேண்டும். எது சரியான நேரம்? மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.

ஆண்களுக்கு அதிகாலையில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவு உச்சத்தில் இருக்கும். இந்த ஹார்மோன் பாலியல் உணர்ச்சியைத் தூண்டுகிறது. பெண்களுக்கு அதிகாலையில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்களின் சுரப்பும் பாலியல் நாட்டத்தை அதிகரிக்கும். இந்த ஹார்மோன்களின் இருப்பு, இருவருக்கும் பரஸ்பர பாலியல் ஈர்ப்பையும், திருப்தியையும் தர உதவும். எனவேதான் அதிகாலை நேரம் பாலியல் செயல்பாடுகளுக்கு சரியான நேரமாக இருக்கிறது.

sex  human
 

மட்டுமல்லாது இரவு முழுவதும் நல்ல தூக்கத்திற்குப் பிறகு, உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அன்றைய நாளின் மன அழுத்தங்கள், வேலைப்பளு, சோர்வு போன்றவை இல்லாததால், இருவரும் அமைதியான மனநிலையுடன் இருப்பார்கள். இது தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் அனுபவிக்க உதவும். அதிகாலை நேரத்தில் செக்ஸ் என்பது திருப்திகரமானதாக இருப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் அதிகாலையில் செக்ஸ் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இரவில், அன்றைய நாளின் சோர்வு அல்லது தூக்கத்தின் தேவை காரணமாக உறவில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம். எனவே அதிகாலையில், பரபரப்பு இல்லாததால், இருவரும் அவசரமில்லாமல் ஒருவருக்கொருவர் முழு கவனம் செலுத்த முடியும். இது உறவில் உணர்ச்சிப்பூர்வமான நெருக்கத்தை அதிகரிக்கும்.

முழுமையான இரவுத் தூக்கத்திற்குப் பிறகு, உடல் அதிக ஆற்றலுடன் இருக்கும். இது தாம்பத்திய உறவுக்குத் தேவையான உடல் வலிமையையும், சுறுசுறுப்பையும் கொடுக்கும். அதிகாலையில் ஏற்படும் இந்த நெருக்கம், நாள் முழுவதும் ஒருவித மகிழ்ச்சி மற்றும் திருப்தியைத் தரும். இது இருவருக்கும் நேர்மறையான எண்ணங்களையும், உற்சாகத்தையும் அளித்து, நாள் முழுவதும் நல்ல மனநிலையில் இருக்க உதவும்.

அதேபோல அதிகாலை செக்ஸ் சமயத்தில் டோபமைன் அதிக அளவில் சுரப்பதால் மன திருப்தி அதிகமாக இருக்கும். எனவே மற்ற நேரங்களில் செக்ஸ் வைத்துக்கொள்வதை விட அதிகாலையில் செக்ஸ் வைத்துக்கொள்வதே சிறந்தது.

English summary
சென்னை: “மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன் மூச்சை நிறுத்திவிடு” என பாரதியார் ஒன்னும் சும்மா சொல்லவில்லை. மோகம் மனிதர்களுக்கு முக்கியமான விஷயம். எனவே, அந்த விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, தாம்பத்யத்தை சரியான நேரத்தில் அனுபவிக்க வேண்டும். எது சரியான நேரம்? மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.ஆண்களுக்கு அதிகாலையில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவு உச்சத்தில் இருக்கும். இந்த ஹார்மோன் பாலியல் உணர்ச்சியைத் தூண்டுகிறது. பெண்களுக்கு அதிகாலையில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்களின் சுரப்பும் பாலியல் நாட்டத்தை அதிகரிக்கும். இந்த ஹார்மோன்களின் இருப்பு, இருவருக்கும் பரஸ்பர பாலியல் ஈர்ப்பையும், திருப்தியையும் தர உதவும். எனவேதான் அதிகாலை நேரம் பாலியல் செயல்பாடுகளுக்கு சரியான நேரமாக இருக்கிறது.மட்டுமல்லாது இரவு முழுவதும் நல்ல தூக்கத்திற்குப் பிறகு, உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அன்றைய நாளின் மன அழுத்தங்கள், வேலைப்பளு, சோர்வு போன்றவை இல்லாததால், இருவரும் அமைதியான மனநிலையுடன் இருப்பார்கள். இது தாம்பத்திய உறவை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் அனுபவிக்க உதவும். அதிகாலை நேரத்தில் செக்ஸ் என்பது திருப்திகரமானதாக இருப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் அதிகாலையில் செக்ஸ் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இரவில், அன்றைய நாளின் சோர்வு அல்லது தூக்கத்தின் தேவை காரணமாக உறவில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம். எனவே அதிகாலையில், பரபரப்பு இல்லாததால், இருவரும் அவசரமில்லாமல் ஒருவருக்கொருவர் முழு கவனம் செலுத்த முடியும். இது உறவில் உணர்ச்சிப்பூர்வமான நெருக்கத்தை அதிகரிக்கும்.முழுமையான இரவுத் தூக்கத்திற்குப் பிறகு, உடல் அதிக ஆற்றலுடன் இருக்கும். இது தாம்பத்திய உறவுக்குத் தேவையான உடல் வலிமையையும், சுறுசுறுப்பையும் கொடுக்கும். அதிகாலையில் ஏற்படும் இந்த நெருக்கம், நாள் முழுவதும் ஒருவித மகிழ்ச்சி மற்றும் திருப்தியைத் தரும். இது இருவருக்கும் நேர்மறையான எண்ணங்களையும், உற்சாகத்தையும் அளித்து, நாள் முழுவதும் நல்ல மனநிலையில் இருக்க உதவும்.அதேபோல அதிகாலை செக்ஸ் சமயத்தில் டோபமைன் அதிக அளவில் சுரப்பதால் மன திருப்தி அதிகமாக இருக்கும். எனவே மற்ற நேரங்களில் செக்ஸ் வைத்துக்கொள்வதை விட அதிகாலையில் செக்ஸ் வைத்துக்கொள்வதே சிறந்தது.

Get Notifications from Tamil Indiansutras