சென்னை: உடலை தூய்மையாக வைத்து கொள்ள நாம் சோப்பு பயன்படுத்துகிறோம். அதேபோல் நம்மில் பலருக்கும் ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பில் சோப்பு பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் இருக்கும். பலரும் சோப்பை பயன்படுத்தி வரலாம். ஆனால் அந்தரங்க உறுப்புகளில் சோப்பு பயன்படுத்தலாமா? கூடாதா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
உடல் உறுப்புகளை சுத்தமாக வைத்து கொள்ள நாம் தினமும் குளிக்கிறோம். அப்போது சோப்பு மற்றும் சேம்புகளை பயன்படுத்துகிறோம். தலைக்கும் சேம்பும், பிற உடல் பாகங்களுக்கும் சோப்பும் பயன்படுத்துகிறோம்.

அதேபோல் பலரும் உடலின் பிற பாகங்களை சுத்தம் செய்வது போல் ஆணுறுப்பு, பெண்ணுறுப்புகளிலும் சோப்பை பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அந்தரங்க உறுப்புகளில் சோப்பு பயன்படுத்தலாமா? கூடாதா? என்பது பற்றி அறியாமலேயே பிற உறுப்புகளை போல் அங்கும் சோப்பு பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படி அந்தரங்க உறுப்புகளில் சோப்பு பயன்படுத்துவதன் மூலம் பலரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கலாம். ஏனென்றால் பொதுவாகவே ஆணுறுப்பு, பெண்ணுறுப்பில் சோப்பு பயன்படுத்துவதை கைவிட வேண்டும். ஏனென்றால் தொடர்ச்சியாக சோப்பு பயன்படுத்தும்போது ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பில் அரிப்பு ஏற்படலாம். நாளடைவில் வீக்கங்கள் கூட வரலாம். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு மிகவும் சென்சிட்டவான உறுப்பாகும்.
கண்கள் எப்படி சென்சிட்டவோ அதுபோல் தான் இந்த அந்தரங்க உறுப்புகள் உள்ளன. இதனால் கண்களுக்கு சோப்பு போடுவதை தவிர்ப்பது போல் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பில் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வேண்டுமானால் சோப்பு பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பாக அந்த சோப்பும் எந்தவித எரிச்சலையும் தராது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஆணுறுப்பு, பெண்ணுறுப்பில் சோப்பு பயன்படுத்தாவிட்டால் எப்படி சுத்தம் செய்வது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு டாக்டர்கள் கூறும் பதில் என்னவென்றால் சாதாரண தண்ணீரை பயன்படுத்தியே சுத்தம் செய்யலாம். காலை, மாலை வேளைகளில் தினமும் அந்தரங்க உறுப்புகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யலாம். இதற்கென பிரத்யேகமாக சோப்பு பயன்படுத்த தேவையில்லை என்கின்றனர் டாக்டர்கள்.
மேலும் சிலருக்கு ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பில் பூஞ்சை காளான் தொற்று வரலாம். இதனால் பலரும் சோப்பு பயன்படுத்தலாம். இது கூடுதல் பாதிப்பை தான் ஏற்படுத்தும். குறிப்பாக அரிப்பை ஏற்படுத்தலாம். இப்படியான பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவர்கள் நிச்சயம் டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மாறாக தொற்றை சரிசெய்வதாக கூறி சோப்பு பயன்படுத்துவது பிரச்சனையை தீவிரமாக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



