•  

செக்ஸ் உறவுக்கு பின் பெண்கள் Rest Room போனால் குழந்தை பிறக்காதா? டாக்டர்கள் சொல்வது என்ன?

சென்னை: கணவன் - மனைவி உடலுறவு வைத்த பிறகு பெண்கள் உடனடியாக ‛ரெஸ்ட்ரூம்' செல்வது கர்ப்பமடைவதை தடுக்கும் என்று பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையா? கட்டுக்கதையா? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

திருமண வாழ்க்கையில் இணைந்த தம்பதிகள் ஒவ்வொருவருக்கும் இன்னும் கூட செக்ஸ் உறவில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதுபற்றி பொதுவெளியில் அதிகம் பேசாதது தான் முக்கிய காரணம். அதோடு, யாரிடமாவது சந்தேகம் கேட்டால் எங்கே அவர்கள் தவறாக நினைத்து கொள்வார்களோ? என்ற சந்தேகமே இந்த விஷயம் பற்றி பொதுவெளியில் அதிகம் பேசாததற்கு முக்கிய காரணமாக உள்ளது.

sex  couple  relationship
 

இதனால் பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. சிலர் அதுபற்றி சம்பந்தப்பட்ட டாக்டர்கள், ஆய்வு முடிவுகளை படித்து சந்தேகங்களை தீர்த்து கொண்டாலும் கூட பெரும்பாலானவர்கள் கட்டுக்கதைகளை நம்பி விடுகின்றனர். இதனால் தான் ஒவ்வொருவருக்கும் தாம்பத்திய உறவு குறித்த புரிதல் வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கின்றனர்.

மேலும் நம் மக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. அதாவது கணவன் - மனைவி இருவரும் உடலுறவு வைத்த பிறகு பெண்கள் Rest Room செல்லக்கூடாது. அப்படி சென்றால் குழந்தைகள் பிறக்காது என்று பலரும் கூறி வருகின்றனர். தாம்பத்திய உறவுக்கு பிறகு உடனடியாக பெண்கள் கழிவறை சென்று சிறுநீர் கழிக்கும்போது கணவனால் உட்செலுத்தப்பட்ட விந்தணுக்கள் வெளியே வரும். இது கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லி வருகின்றனர்.

ஆனால் அதில் உண்மையில்லை என்று டாக்டர்கள் சொல்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் உடலுறவுக்கு முன்பாகவும், பின்பாகவும் பெண்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி விந்தணு கர்ப்பப்பையை அடையும் பாதையும், சிறுநீர் வெளியேறும் பாதையும் தனித்தனியானது. இதனால் உடலுறவுக்கு பிறகு பெண்கள் சிறுநீர் கழிப்பதன் மூலமாக கர்ப்பமடைவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

மேலும் உடலுறவுக்கு பிறகு கழிவறை பயன்படுத்த கூடாது என்ற மூடநம்பிக்கையில் பெண்கள் சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதன் மூலம் அது பாக்டீரியா தொற்றை கூட ஏற்படுத்தலாம். மேலும் உடலுறவுக்கு பிறகு தங்களின் துணையிடம் இருந்து பாக்டீரியாக்கள் பெண்ணுறுப்புக்கு வரலாம். அது சிறுநீர் பாதையில் நோய் தொற்றை ஏற்படுத்தலாம். இதனால் பெண்கள் உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிப்பது நல்லது தான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழித்தால் போதும். குழந்தை பிறக்காது என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்த முடிவு அவர்களுக்கு கைக்கொடுக்காது. எனவே ஒருவேளை குடும்ப சூழல் காரணமாக குழந்தை பிறப்பை தள்ளி வைக்க விரும்பும் பெண்கள் முறையான பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தி உடலுறவு வைத்து கொள்வது நல்லது என்கின்றனர் டாக்டர்கள்.

English summary
We have all heard that women who go to the restroom immediately after having sex can prevent pregnancy. Is this true? Is it a myth? Let's take a closer look at this.

Get Notifications from Tamil Indiansutras