•  

ஆண் அல்லது பெண் குழந்தை பிறக்க எந்தெந்த நாட்களில் செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும்? தெரிஞ்சிக்கோங்க

சென்னை: கணவன் - மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது தான் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம். ஆண் குழந்தை தான் வேண்டும் அல்லது பெண் குழந்தை தான் வேண்டும் என்று தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளால் கூட முடிவு செய்ய முடியாது. இருப்பினும் குறிப்பிட்ட தினங்களில் உடலுறவு வைத்து கொள்வதன் மூலமாக ஆண், பெண் குழந்தைகளை பெற்றெடுக்க முடியும் என்று சில டாக்டர்கள் சொல்கின்றனர். இது 100 சதவீதம் சாத்தியம் இல்லாவிட்டாலும் கூட ஓரளவு சாத்தியமாகலாம். அதுபற்றிய விவரம் வருமாறு:

தாம்பத்தியம்.. கணவன் - மனைவி இடையேயான அன்பு, பாசம், ஆசையை அதிகரிப்பதோடு, தங்களுக்கான குழந்தை பாக்கியத்தையும் தருகிறது. பொதுவாக தாம்பத்திய உறவுக்கு பிறகு ஆண் அல்லது பெண் குழந்தை பிறக்கிறது.

relationship  sex
 

சில நேரங்களில் இரட்டை குழந்தைகள் கூட பிறக்கலாம். அதிலும் கூட 3 வகைகள் உள்ளன. ஒன்று இரண்டு குழந்தைகளுமே ஆணாக இருக்கலாம். 2வது இரண்டு குழந்தைகளுமே பெண்ணாக இருக்கலாம். 3வது ஒரு ஆண் - ஒரு பெண் குழந்தைகள் பிறக்கலாம். இதனை தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளால் கூட சொல்ல முடியாது.

அதேபோல். ஆண் குழந்தை பிறப்பதற்கும், பெண் குழந்தை பிறப்பதற்கும் தனியே மாத்திரை, மருந்துகள் எதுவும் கிடையாது. இந்த குழந்தைகள் ஆணின் விந்தணுக்களில் எந்த வகையான குரோமோசோம்கள் பெண்ணின் கருப்பபையை சென்றடைகிறது என்பதன் அடிப்படையில் தான் குழந்தையின் பாலினம் இருக்கும்.

புரியும்படி கூற வேண்டும் என்றால் பெண்ணின் கருமுட்டையில் எக்ஸ் குரோமோசோம் மட்டுமே இருக்கும். அதேவேளையில் ஆண்களின் விந்தணுக்களில் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசாம்கள் இருக்கும். இதில் ஆணின் விந்தணுக்களில் உள்ள எக்ஸ் குரோமோசோம்கள் பெண்களின் கருமுட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் இணையும்போது பெண் குழந்தை பிறக்கும். மாறாக ஆணின் விந்தணுக்களில் உள்ள ஒய் குரோமோசோம் பெண்களின் கருமுட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் இணையும்போது ஆண் குழந்தை பிறக்கும்.

ஒரு வரியில் கூற வேண்டும் என்றால் எக்ஸ் + எக்ஸ் குரோமோசாம் இணைந்தால் பெண் குழந்தையும், எக்ஸ் + ஒய் குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தையும் பிறக்கும். இதனை யாராலும் மாற்ற முடியாது. அதேவேளையில் சிலர் ஆண் குழந்தை வேண்டும். பெண் குழந்தை வேண்டும் என்ற நினைப்பார்கள்.

அப்படி குறிப்பிட்ட குழந்தையை யாராலும் பெற்றெடுக்க முடியாது. இருப்பினும் சில விஷயத்தை கடைப்பிடித்தால் அது சாத்தியமாகலாம் என்கிறது சில ஆய்வுகள். அது என்னவென்றால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலம் 28 நாட்களாகும். இதனால் 14 நாட்களில் கருமுட்டை வெடிக்கும். இதனால் ஆண் குழந்தை வேண்டும் என்பவர்கள் மாதவிடாயில் இருந்து 15, 16, 17 வது நாட்களில் உடலுறவு வைக்கலாம். பெண் குழந்தை வேண்டும் என்பவர்கள் கருமுட்டை வெடிப்புக்கு முன்பாக 12, 13வது நாளில் உடலுறவு வைக்கலாம். இதில் 100 சதவீதம் சாத்தியம் இல்லை என்றாலும் தங்களின் விருப்பப்படி குழந்தை பிறக்க ஓரளவு வாய்ப்புள்ளது என்கின்றனர் சில டாக்டர்கள்.

பொதுவாகவே ஆண் - பெண் என 2 குழந்தைகள் பிறந்தாலும் நல்லது தான். தற்போதைய காலத்தில் இருகுழந்தைகளும் நன்றாக படிக்கிறார்கள். நன்றாக வேலைக்கு போய் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். இதனால் பாலின பாகுபாடு என்பது காட்ட வேண்டிய தேவை இல்லை. எந்த குழந்தை பிறந்தாலும் கணவன் - மனைவி அன்போடு வளர்க்க வேண்டும். ஒருவேளை சில தம்பதிகளுக்கு ஆண் குழந்தையாகவே பிறக்கலாம். சில தம்பதிகளுக்கு பெண் குழந்தைகளாகவே பிறக்கலாம்.

இப்படி இருக்கும்போது அவர்களுக்கு ஆண் அல்லது பெண் குழந்தை வேண்டும் என்று விரும்பலாம். அப்படியான தம்பதி இந்த முறையை பின்பற்றலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எந்த குழந்தை பிறக்கிறது என்பது நம் கையில் இல்லை. அது விந்தணுக்களில் உள்ள எக்ஸ் - ஒய் குரோமோசோம்களை பொறுத்தது தான். மேற்கூறியபடி மாதவிடாய் நாட்களை கணக்கிட்டு உடலுறவு வைக்கும்போது சில தம்பதிகளுக்கு மட்டுமே அவர்களின் விருப்பபடி குழந்தை பிறக்குகும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

Get Notifications from Tamil Indiansutras