சென்னை: மனைவி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்தவுடன் மீண்டும் உடனடியாக உடலுறவு வைக்கலாமா? இல்லையா? என்ற சந்தேகங்கள் பல ஆண்களுக்கும் இருக்கும். மனைவி குழந்தை பெற்றெடுத்த பிறகு எவ்வளவு நாட்கள் கழித்து மனைவியுடன் உடலுறவு வைக்கலாம்? என்பது பற்றி பார்க்கலாம்.
மனைவி கர்ப்பமான பிறகு ஆண்கள் உடலுறவு வைக்க கூடாது. குறிப்பாக மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கடைசி 3 மாதத்தில் உடலுறவை அறவே தவிர்க்க வேண்டும். இது பெண்ணுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது பலருக்கும் தெரியும். குறிப்பாக டாக்டர்களே சொல்லி இருப்பார்கள்.

ஆனால், மனைவி குழந்தையை பெற்றெடுத்த பிறகு உடனடியாக உடலுறவு வைக்கலாமா? இல்லாவிட்டால் கொஞ்சம் காலம் தள்ளி தான் உடலுறவு வைக்க வேண்டுமா? என்ற கேள்விகள் பலருக்கும் எழலாம்.
இதற்கான பதில் என்னவென்றால் மனைவி குழந்தை பெற்றெடுத்தால் கொஞ்ச நாட்கள் தாம்பத்திய உறவை வைப்பதில் இருந்து விலகி இருப்பது நல்லது என்கின்றனர் டாக்டர்கள். அதாவது நார்மல் டெலிவரியாக இருந்தாலும் சரி, சிசேரியன் டெலிவரியாக இருந்தாலும் சரி குறைந்தபட்சம் ஒன்றரை மாதம் உடலுறவு வைக்காமல் இருப்பது நல்லது.
இப்போது உங்களுக்கு கேள்வி வரலாம். எது என்ன ஒன்றரை மாதம் காத்திருக்க வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. பொதுவாக நார்மல் டெலிவரியாக இருந்தாலும் கூட பெண்ணுறுப்பை விரிவுப்படுத்தி தான் குழந்தையை எடுப்பார்கள். இதனால் பெண்ணுறுப்பு சுருங்க கொஞ்சம் டைம் தேவை.
அதேபோல் சிசேரியன் வழியில் குழந்தை பிறந்தால் காயங்கள் இருக்கும். இந்த புண்கள் முழுமையாக குணமாகவும் நாட்கள் எடுக்கும். அதேபோல் பெண்களுக்கும் டெலிவரிக்கு பிறகு ஒரு மிகப்பெரிய சோர்வு என்பது இருக்கும். ஹார்மோன் மாற்றம் உள்ளிட்டவற்றால் பெண்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பெண்கள் முழுமையாக வெளிவர தான் இந்த ஒன்றரை மாதம் என்கின்றனர் டாக்டர்கள். அதன்பிறகு கணவன் - மனைவி உடலுறவு கொள்வது இருவருக்கும் மனநிறைவு, நிம்மதியை தரும் என்கின்றனர் டாக்டர்கள்.
அதேபோல் குழந்தை பிறந்த பிறகு பெண்களால் சரியாக தூங்க முடியாது. அவர்கள் நீண்டநேரம் கண்விழித்து இருப்பார்கள். இதனால் மனசோர்வால் பாதிக்கப்படலாம். இதனை தடுக்க கணவன்களும் உதவ வேண்டும். குறிப்பாக சில மணிநேரம் குழந்தைகளை கவனித்து கொண்டு மனைவியை தூங்க அனுமதிப்பது அவர்களுக்கான மனநிம்மதியை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications



