•  

முதல் குழந்தை பிறந்த பின் 2வது குழந்தையை எப்போது பெற்றெடுக்கலாம்? எத்தனை ஆண்டு இடைவெளி அவசியம்?

சென்னை: கணவன் - மனைவிக்கு இருக்கும் ஒரு சந்தேகம் என்னவென்றால் முதல் குழந்தை பிறந்த பிறகு 2வது குழந்தையை பெற்றெடுக்க எத்தனை ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்? எத்தனை ஆண்டு இடைவெளியில் 2வது குழந்தை பெற்றெடுத்தால் நல்லது? என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான விடையை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கணவன் - மனைவி தாம்பத்திய உறவு என்பது இருவருக்குமான பாலியல் ஆசைகளை தீர்த்து கொள்வதற்கு மட்டுமானது இல்லை. தங்களின் பெயரை சுமக்கும் வாரிசுகளை உருவாக்குவதற்கான உறவும் கூட. இருந்தாலும் குழந்தை பாக்கியம் சில தம்பதிகளுக்கு திருமணமான அடுத்த ஓராண்டில் கிடைத்து விடும்.

relationship  child birth
 

அதேவேளையில் சில தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும். 2 ஆண்டு, 3 ஆண்டு ஏன் இன்னும் கூட சில ஆண்டுகள் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். இப்படியான சூழலில் பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும்.

முதல் குழந்தை பெற்றெடுத்த பிறகு 2வது குழந்தையை பெற்றெடுக்க எத்தனை ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும் என்பது தான் அந்த கேள்வி. இதற்கு டாக்டர்கள் கூறுவது என்னவென்றால் ஒரு குழந்தைக்கும், இன்னொரு குழந்தைக்கும் இடையே குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர். ஏனென்றால் பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது சில சிரமங்களை எதிர்கொள்கிறார். இதனால் அவரது உடல் பலவீனமாகும்.

அதேபோல் ஆபரேஷன் முறையில் குழந்தை பிறந்தால் அந்த பெண்ணின் உடல் இன்னும் பலவீனமாக இருக்கும். இதனால் 2வது குழந்தைக்கு உடனடியாக அவசரப்படக்கூடாது. மேலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்து கவனித்து சிறப்பாக வளர்க்க 3 ஆண்டுகள் வரை தேவைப்படும். இதனால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இடைவெளி இருப்பது நல்லது. கூடுதலாக இன்னும் கூட 2 ஆண்டுகள் எடுத்து கொள்ளலாம்.

ஆனால் இரு குழந்தைகளுக்கான இடைவெளி 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்க வேண்டாம். ஏனென்றால் மூத்த குழந்தை, 2வது குழந்தையை அடக்கி ஆள முயற்சி செய்யலாம். இதனால் இருவருக்குமான உறவில் எதிர்காலத்தில் விரிசல், அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.

மேலும் இன்னொரு விஷயத்தையும் டாக்டர்கள் சொல்கின்றனர். அதாவது கிராமம் மற்றும் நகரங்களில் சில பெரியவர்கள் உடலில் சக்தி இருக்கும்போதே அடுத்தடுத்து குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தம்பதிகளும் அடுத்தடுத்து ஆண்டுகளில் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இது குழந்தைகளின் தாயின் உடல் மற்றும் மனநிலையை பாதிக்கும். 2 குழந்தைகளை ஒரே நேரத்தில் சமாளிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும். இதனால் தம்பதிகள் முதல் குழந்தைக்கும், 2வது குழந்தைக்கும் இடையே குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை இடைவெளி விடுவது நல்லது என்கின்றனர் மகப்பேறு டாக்டர்கள்.

English summary
One of the doubts that husband and wife have is how many years should they wait before having a second child after the birth of their first child? How many years should be between having a second child? You can find the answer to that in this article.

Get Notifications from Tamil Indiansutras