சென்னை: உடலுறவு திருப்தி மற்றும் ஆரோக்கியத்திற்கு சரியான உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சமீபத்திய ஆராய்ச்சிகள் வலியுறுத்துகின்றன. சில உணவுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும், பாலுணர்வைத் தூண்டவும் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தர்பூசணி பழம், சிட்ருலின் அமினோ அமிலம் இரத்த நாளங்களை விரிவாக்கி ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிட்ருலின் என்பது ஒரு அமினோ அமிலம். இது சிறுநீரகம் மற்றும் இரத்த நாள சுவர்களில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தூண்டுகிறது. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களை விரிவாக்கி, குறிப்பாக பேருருக்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயாகரா மருந்து இப்படித்தான் செயல்படுகிறது.

அதேபோல வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து உடனடி ஆற்றலைத் தரும். டார்க் சாக்லேட்களில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மனநிலையை மேம்படுத்தும். கவனத்தில் கொள்ளுங்கள், செக்ஸ் வாழ்க்கை என்பது மன ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியதுதான்.
நட்ஸ் மற்றும் விதைகளில் உள்ள துத்தநாகம் மற்றும் அமினோ அமிலங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். துத்தநாகம் டெஸ்டோஸ்டிரோனின் தொகுப்பு மற்றும் சீரமைப்புக்கு அவசியமான ஒரு முக்கிய தாது உறுப்பு. போதுமான துத்தநாகம் இல்லாவிட்டால், பாலுணர்வு குறையும் மற்றும் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். பாதாம், பூசணி விதைகள் மற்றும் இரைச்சல் ஆகியவை இதன் சிறந்த மூலங்கள்.
பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள அல்லிசின் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பேணும். ஓட்ஸில் உள்ள எல்-அர்ஜினைன் அமினோ அமிலம் ஆண்குறி இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்.
மேலும் சில பரிந்துரைகள்
என்னதான் உணவு மூலம் ஆற்றல் கிடைத்தாலும், இந்த உணவுகள் தற்காலிக ஊக்கியாகத்தான் செயல்படும். நீண்டகால உடலுறவு ஆரோக்கியத்திற்கு சீரான வாழ்க்கை முறை முக்கியம்.
தினசரி 30 நிமிடம் உடற்பயிற்சி
7-8 மணி நேரம் தூக்கம்
மன அழுத்தக் குறைப்பு பயிற்சிகள்
மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்த்தல்
இதையெல்லாம் செய்யும்போது உடலுறவில் நீண்ட நேரத்திற்கு ஈடுபட முடியம். இவை அனைத்தும் அறிவியல் ரீதியாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உடலுறவு ஆரோக்கியம் என்பது மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது. சமச்சீர் உணவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையுமே நீண்டகால தீர்வாகும்.



Click it and Unblock the Notifications



