பெங்களூர்: தாம்பத்திய உறவு மட்டுமின்றி சுயஇன்பம் செய்வது தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் பரவி உள்ளன. இதனை பலரும் உண்மை என்று நம்பி விடுகின்றனர். அந்த வகையில் தான் இளம் வயதில் அதிகமாக சுயஇன்பம் செய்தால் ஆண்மை குறைபாடு வரும். மனைவியை திருப்திப்படுத்த முடியாமல் போவதோடு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாத சூழல் வரும் என்று பலரும் ஆண்களை பயமுறுத்துவார்கள். இது உண்மையா? சுயஇன்பம் செய்யும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது தொடர்பான விவரங்கள் வருமாறு:

எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு - இது வள்ளுவர் இயற்றிய திருக்குறள்..
இதன் அர்த்தம் என்னவென்றால் எந்த விஷயத்தை யார் கூறினாலும் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். சொல்கிறார்களே என்று அப்படியே நம்பி விடக்கூடாது. இதனை நாம் கடைப்பிடித்தாலே பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதேபோல் தாம்பத்திய உறவு தொடர்பாக வெளிப்படையாக யாரும் பேசுவது இல்லை. இதனால் பல கட்டுக்கதைகள் இன்றும் நம்மிடம் உலா வருகின்றன. இதனை பலரும் நம்பி விடுகின்றனர். அதில் சில விஷயங்கள் உண்மையாக இருக்கலாம். பல விஷயங்கள் வெறும் வதந்தியாக இருக்கலாம்.
அப்படித்தான் இன்றும் கூட ஒரு விஷயத்தை பலரும் சொல்ல கேள்விப்பட்டு இருக்கலாம். அது என்னவென்றால் ஆண்கள் அதிகமாக சுயஇன்பம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஆண்மை குறைபாடு வரும். திருமணத்துக்கு பிறகு மனைவியை கட்டிலில் திருப்திப்படுத்த முடியாது. குழந்தை பாக்கியம் இருக்காது என்று பலரும் சொல்ல நாம் கேள்வி பட்டு இருப்போம்.
ஆனால், உண்மையில் அப்படி கிடையாதாம். 1995ம் ஆண்டில் இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசினில் ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரையில் 1,500 ஆண்களை சுயஇன்பம் செய்ய வைத்து உடல்நலத்தில் ஏற்படும் பாதி்ப்பு குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. அந்த கட்டுரையின் சாராம்சம் என்னவென்றால் சுயஇன்பம் செய்வதில் உடலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. அதன்பிறகு பல ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன.
இதுதொடர்பாக WHO எனும் உலக சுகாதார மையம் உள்பட பல டாக்டர்கள் கூறுவது என்னவென்றால், ‛‛பொதுவாகவே சுயஇன்பம் ஒரு நார்மலான பாலியல் செயலாகும். இதனை செய்வதன் மூலமாக எந்த தவறும் இல்லை. சுயஇன்பம் செய்வதால் எந்த பிரச்சனையும் வராது. மாறாக மனஅழுத்தத்தை குறைக்கும். கவலைகளை மறந்து நன்றாக தூங்க உதவியாக இருக்கும்.
இருப்பினும் ஆண்களும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது இந்த விஷயத்திலும் பொருந்தும். சுயஇன்பம் செய்வது நல்லது தானே என்று அதனை வாடிக்கையாக வைத்து விடக்கூடாது. இது வேலை, அன்றாட வாழ்க்கை உள்ளிட்டவற்றை பாதிக்கும். நாள்தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சுயஇன்பம் செய்வது அசதியை ஏற்படுத்தலாம். எனவே கட்டுப்பாட்டுடன் சுயஇன்பம் செய்வது உடல்நலத்துக்கு நல்லது என்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



