சென்னை: ‛முருங்கைக்காய்' என்றதும் நம்மில் பலருக்கும் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜின் திரைப்படங்கள் தான் நியாபகத்துக்கு வரும். உண்மையில் ஆண்கள் முருங்கைக்காய்களை சாப்பிடுவதன் மூலமாக செக்ஸ் ஆர்வம் அதிகரித்து, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமா? இல்லையா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
முருங்கைக்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு பாக்கியராஜ் திரைப்படம் தான். அவரது பல திரைப்படங்களில் முருங்கைக்காய் சீன் இருக்கும். முருங்கைக்காய் சாப்பிட்டால் அது பாலியல் உணர்வை தூண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார்கள்.

உண்மையில் முருங்கைக்காய் சாப்பிட்டால் பாலியல் ஆர்வம் அதிகரிக்குமா? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். முருங்கைக்காயை ஆங்கிலத்தில் Drumsticks அல்லது Moringa என்று சொல்வார்கள்.
இந்த முருங்கைக்காய் எளிதில் நம் மாநிலத்தில் கிடைக்கும். முருங்கை வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரமாகும். கிராமங்களில் முருங்கைக்காய்களை பொதுமக்கள் இலவசமாகவே பறித்து செல்வது உண்டு. நகரங்களில் மட்டும் தான் சீசனை பொறுத்து முருங்கைக்காய் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். நம் மக்களிடம் முருங்கைக்காய் சாப்பிட்டால் ஆண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும். ஆணுறுப்பு வீரியம் பெறும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதில் உண்மை தானாம். முருங்கைக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இரும்பு இயற்கையாக உள்ள சில மூலக்கூறுகள் மன அழுத்தத்தை குறைத்து பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளன. அதன்படி பார்த்தால் முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம் உடலில் டெஸ்டோஸ்டிரோன், லிபியோ உள்ளிட்டவை அதிகரிக்கும்.
வைட்டமின்கள் ஏ, சி உள்ளிட்டவை முருங்கைக்காயில் இருக்கின்றன. இது வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய உதவுவதாக கூறப்படகிறது. அதோடு உடல் முழுவதும் ரத்தம் ஓட்டம் சீராக பரவ இந்த முருங்கைக்காய் உதவுகிறது. மேலும் இது ஆண்களின் பாலியல் செயல்திறனை அதிகரிக்கப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. முருங்கையை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிடலாம்.
அதேபோல் முருங்கை கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. முருங்கை பூக்கள் மற்றும் விதைகள் கருவுறுதலை மேம்படுத்தவும், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும், விறைப்புத்தன்மை குறைபாட்டை குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் ப்டெரிகோஸ்பெர்மின் என்பது முருங்கை இலையில் உள்ளது. இது வயிற்று அசவுகரித்தை நீக்கும். ரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, மத்திய நரம்பு மண்டல பிரச்சனைகளை தடுக்கும் வல்லமை கொண்டது.
இப்படி முருங்கையின் ஒவ்வொரு பகுதிகளும் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கைக்காய், முருங்கை இல்லை. முருங்கை பூ, முருங்கை விதை உள்பட அந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் உண்ணத்தகுந்தது. அதோடு நல்ல சத்தான உணவாக பார்க்கப்படுகிறது. இதனால் முருங்கைக்காய், முருங்கை இலையை அவ்வப்போது சமையலில் சேர்த்து கொள்வது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications



