சென்னை: ‛‛பழக பழக பாலும் புளிக்கும்'' என்பார்கள். இதற்கு தாம்பத்திய வாழ்க்கையும் விதிவிலக்கல்ல. திருமணமான புதிதில் தம்பதிகள் இடையே தாம்பத்தியத்தில் இருக்கும் நெருக்கம் காலப்போக்கில் மெல்ல மெல்ல குறைந்துவிடும். இது தம்பதிகள் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கலாம். அதோடு கள்ளத்தொடர்பை உருவாக்கலாம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கலாம். ஆனால் இதற்கு எளிதாக தீர்வு காணலாம். அதுபற்றி இங்கு பார்ப்போம்.
திருமணம் ஆன புதிதில் கணவன், மனைவி இடையே நெருக்கம் என்பது அதிகரித்து இருக்கும். சில மணிநேரங்கள் கூட பிரிந்து இருக்க முடியாமல் பலரும் திணறி இருக்கலாம். இதனால் எப்போது இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடலாம். இதற்கு ஒருவர் மீது இன்னொருவருக்கும் இருக்கும் அன்பு, பாசம், ஈர்ப்பு உள்ளிட்ட விஷயங்கள் தான் காரணம்.

இதனாலேயே திருமணமான பலரும் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி இருக்கலாம். மனைவி வந்தவுடன் வீட்டை விட்டே வெளியே வருவது இல்லை என ஆண்களை சக நண்பர்கள் கிண்டல் செய்வது போல் பெண்களையும் அவர்களின் தோழிகள் வேடிக்கையான கமெண்ட்டுகளை கூறி இருக்கலாம். இதனை பலரும் எதிர்கொண்டு இருக்கலாம்.
காலப்போக்கில் குறையும் தாம்பத்திய உறவு
மேலும் திருமணமான புதிதில் அடிக்கடி தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு இருக்கலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடலுறவு வைத்திருக்கலாம். இது இப்படியே காலம் முழுவதும் தொடர்கிறதா? என்று கேள்வி எழுப்பினால் பலரும் இல்லை என்று தான் பதில் சொல்வார்கள். ஏனென்றால் காலப்போக்கில் தம்பதிகள் இடையே தாம்பத்திய உறவு குறைந்து விடுகிறது. தினசரி என்று இருந்த தாம்பத்திய உறவு வாரத்துக்கு ஒருமுறை, மாதத்துக்கு சில முறை என்று குறைந்து போகலாம்.
குடும்பத்தில் பிரச்சனை வர வாய்ப்பு
இது பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். ஏனென்றால் கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கலாம். இன்னொருவருக்கு குறைந்து இருக்கலாம் அல்லது உடலுறவில் நாட்டமின்றி போகலாம். இதனால் செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ளவர்கள் வேறு துணையை தேடிசெல்லலாம். இது கள்ளக்காதலை உருவாக்கி நல்லா இருந்த குடும்பத்தில் பிரித்து விடும். ஆனால் உண்மையில் காலப்போக்கில் தம்பதிகள் இடையே குறையும் நெருக்கத்தை எளிதாக சரிசெய்யலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அதற்கு தம்பதிகள் சில விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
உடலுறவு ஆர்வம் குறைய என்ன காரணம்?
நம் உடலில் பினைல் எத்திலமின் (Phenylethylamine or PEA) எனும் காதல் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் தான் பாலின ஈர்ப்பை தரும். வயது ஆக ஆக இந்த பினைல் எத்திலமின் ஹார்மோன் சுரப்பது குறையும். இதனால் கணவனுக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவன் மீதும் ஈர்ப்பு குறையும். இதனால் தான் வயது அதிகரிக்க தாம்பத்திய உறவில் பலருக்கும் நாட்டமில்லாத நிலை உருவாகிறது.
பிரச்சனைக்கு தீர்வு என்ன?
இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். அதில் ஒன்று கணவன் - மனைவி இடையேயான புரிதலை அதிகப்படுத்துவது. அதாவது கணவன் - மனைவி சண்டையின்றி பாசத்தோடு இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும், கணவன் மனைவியையும், மனைவி, கணவனையும் திட்டுவதை கைவிட வேண்டும். ஏனென்றால் இப்படி நடந்து கொள்வது தம்பதி இடையேயான கவர்ச்சியை குறைத்து விடும். அதோடு வெறுப்பை ஏற்படுத்தி விடும். இதனால் கணவன் - மனைவி முடிந்தவரை சண்டையிடுவதை தவிர்த்து ‛ரொமாண்டிக்கான' வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும். இதன்மூலம் செக்ஸ் ஆர்வம் குறையாமல் தாம்பத்திய உறவில் சந்தோஷமாக இருக்கலாம்.
அதேபோல், ஒரே மாதிரியான செக்ஸ் செய்வது பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தும். உடலுறவை பொறுத்தவரை ஏராளமான முறைகளில் செய்யலாம். உண்மையில் 500க்கும் அதிகமான முறைகளில் செக்ஸ் செய்யலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றை தேடி தேடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வித்தியாசமான முறைகளில் செக்ஸ் வைக்கலாம். இதன்மூலம் கணவன் - மனைவி இடையே தாம்பத்திய உறவில் சுவாரசியம் ஏற்பட்டு செக்ஸ் உணர்வு குறையாது என்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



