•  

கட்டிலில் முழு இன்பம்.. பெண்ணுறுப்பு - ஆணுறுப்பில் இந்த இடம் தான் முக்கியம்.. தம்பதிகளே நோட் பண்ணுங்க

சென்னை: கணவன் - மனைவி தாம்பத்திய உறவில் முழு திருப்தியடைய சில வழிமுறைகள் உள்ளன. பெண்கள் ஆண்களை எப்படி திருப்திப்படுத்துவது? ஆண்கள் எப்படி பெண்களை திருப்திப்படுத்துவது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

செக்ஸ்.. இல்லற வாழ்க்கையில் இணையும் ஆணும், பெண்ணுக்கும் இடையே நிகழும் இன்ப நிகழ்வு. கணவன் மூலம் மனைவியும், மனைவி மூலமாக கணவன்களும் தங்களின் பாலியல் உறவில் திருப்தியடைய வைக்கும் முறை தான் செக்ஸ்.

relationship  sex  couple
 

உடலுறவில் கணவனும், மனைவியும் ஒன்றாக திருப்தியடைகிறார்களா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கு இல்லை என்பது தான் பலரின் பதிலாக இருக்கும். ஏனென்றால் இன்று பல தம்பதிகளை எடுத்து கொண்டால் ஒருவர் திருப்தியடைந்து விடுவார். இன்னொருவர் திருப்தியடையாமல் இருப்பார்.

ஆனால் உண்மையில் இருவரும் ஒரே நேரத்தில் திருப்தியடையலாம். இதற்கு வெறும் உடலுறவு மட்டும் தேவையில்லை. சில முக்கிய இடங்களை விடாமல் தூண்டலாம். உதாரணமாக ஆண்களுக்கான உணர்ச்சி என்பது பிறப்பிறுப்பின் குறிப்பிட்ட இடத்தில் அதிகம் உள்ளது. ஆணுறுப்பின் தோல் பகுதியின் உள்ளே அரை இன்ச் தொலைவில் வளையம்போன்ற அமைப்பு இருக்கும். அது உணர்ச்சி மிகுந்த பகுதி. அந்த இடத்தை பெண்கள் தூண்டலாம். கை, அல்லது வாய் வைத்து மெதுவாக தூண்டுவதன் மூலமாக ஆண்களை முழுமையாக திருப்திப்படுத்தலாம்.

அதேபோல் பெண்களை எடுத்து கொண்டாலும் சில வழிமுறைகள் உள்ளன. ஆண்களின் பிறப்புறுப்பு என்பது 3 இன் 1 என்ற வகையில் செயல்படுகிறது. அந்த ஒரு உறுப்பே சிறுநீரை வெளியேற்றுகிறது. குழந்தை பிறப்புக்கான விந்தணுக்களை வெளியேற்றுகிறது. இன்னொன்று தாம்பத்திய உறவில் திருப்தியை ஏற்படுத்தும் உறுப்பாகவும் அதுவே உள்ளது.

ஆனால் பெண்களை எடுத்து கொண்டால் பிறப்புறுப்பில் சிறுநீர் துவாரம் தனியாகவும், உடலுறவில் விந்தணுக்களை செலுத்தும் துவாரம் தனியாகவும் இருக்கும். அதேபோல் Clitoris என்று ஒரு இடம் உள்ளது. இதுதான் பெண்ணின் உடலுறவுக்கான உறுப்பு. இதில் பல ஆயிரம் நரம்பு முடிச்சுகள் உள்ளன. மிகவும் உணர்ச்சி மிகுந்த இடமாகும். இதனால் ஆண்கள் கிளிட்டோரிஸை தூண்டலாம். இந்த இடம் என்பது பெண்ணுறுப்பின் மேல்பகுதியில் இருக்கும். இந்த இடத்தை தூண்டுவதன் மூலம் பெண்ணை கட்டிலில் முழுமையாக திருப்திப்படுத்தலாம்.

அதேபோல் மார்பகங்களும் பெண்களுக்கு உணர்ச்சி மிகுந்த இடமாகும். இதனால் மார்பகங்களையும் வாய் வைத்து ஆண்கள் தூண்டலாம். இதுவும் பெண்களை உச்சமடைய வைக்க எளிதான வழியாகும். இதுபற்றி நம்மில் பலருக்கும் தெரியாமல் உள்ளது. இதனால் கணவன் - மனைவி இடையே இதுபற்றி விஷயங்களை தெரிந்து கொண்டு இருவரும் சேர்ந்து கட்டிலில் இனம் காணலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

English summary
There are some ways to be completely satisfied in the marital relationship between husband and wife. Here we will look at how women satisfy men and how men satisfy women.

Get Notifications from Tamil Indiansutras