•  

செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

சென்னை: செக்ஸ் வாழ்க்கை என்பது வெறுமென உடல் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. அது மனம் சம்பந்தப்பட்டதும் கூட. ஒரே ஒரு வார்த்தை மொத்த செக்ஸ் வாழ்க்கையையும் நாசமாக்கிவிடும். அதேபோல ஒரே ஒரு வார்த்தை செக்ஸ் வாழ்க்கையை மிகுந்த அழகானதாகவும் மாற்றிவிடும். ஆனால் அது என்ன வார்த்தை என்பதை கண்டுபிடிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.

செக்ஸ் வாழ்க்கையை அழக்காக்க ஆய்வாளர்கள் புதிய முறை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். 'தலையணைப் பேச்சு' என்று சொல்லக்கூடிய இந்த விஷயத்தை நீங்களும் தெரிந்துக்கொண்டால் செக்ஸ் வாழ்க்கையை திருப்திகரமாக மாற்றிவிட முடியும். செக்ஸ்க்கு பின்னர் பேசுவது இருவருக்கிடையேயான உறவை வலுப்படுத்தும். இது உடல் ரீதியான நெருக்கத்தை உணர்வுபூர்வமாகவும் அர்த்தமுள்ளதாக்கும். அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில், இந்த வாய்ப்பை பெரும்பாலும் நாம் பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம். ஆனால், இது பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான உரையாடல்களை உருவாக்க உதவுகிறது.

sex  health
 

உடலுறவுக்கு பிந்தைய பேச்சுக்கள் உறவுகளை வலுப்படுத்தும். உடலுறவு சமயத்தில் ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இது இருவரும் அதிக உணர்ச்சி பூர்வமாக இருக்க உதவுகிறது. செக்ஸ் முடிந்த பின்னர், "நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?" போன்ற கேள்விகள் கேட்பதன் மூலம் ஒரு உரையாடலை தொடங்கலாம்.

தலையணைப் பேச்சு என்பது வெறும் உரையாடல்கள் மட்டுமல்ல. அது உணர்ச்சிபூர்வமான நம்பிக்கையை வளர்க்கிறது. ஒருவருக்கொருவர் தங்கள் உணர்வுகள், கனவுகள் அல்லது பலவீனங்களை பற்றி பேசும்போது, அவர்கள் நேர்மையின் அடித்தளத்தை உருவாக்குகிறார்கள். இது அதிக ஆசையையும், திருப்தியையும் தருகிறது.

தலையணைப் பேச்சு உங்களுக்கு பல நேரங்களில் காதலை அள்ளித்தரும். உதாரணத்திற்கு நேற்றிரவு நீங்கள் செக்ஸை முடித்துவிட்டு மனம் விட்டு பேசியிருந்தால், அடுத்தநாள் உங்கள் இணையரிடமிருந்து கனிவான அன்பு நிச்சயம் அதிகம் கிடைக்கும். ஒரு சின்ன குறுஞ்செய்தி அல்லது பாராட்டு மூலமாகவும் அன்பு கிடைக்கலாம். இந்த சின்னஞ்சிறிய அன்பு நெருக்கத்தையும் உருவாக்குகின்றன. அப்புறம் என்ன செக்ஸ் வாழ்க்கையில் நீங்கள்தான் ராஜா.

இணையருடன் பிரச்சனை இருக்கும்போதும் இந்த நேரத்தில் மனம் விட்டு பேசினால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். எளிமையான உரையாடல்தான் சில நேரங்களில் நினைத்து பார்க்கவே முடியாத மேஜிக்கை செய்துவிடுகிறது. எனவே இணையருடன் மனம் விட்டு பேசுங்கள்.

English summary
A satisfying sex life is built on communication, emotional intimacy, and mutual respect. Discover essential tips to enhance intimacy, improve communication with your partner, and prioritize sexual wellbeing for a healthier, more fulfilling relationship.

Get Notifications from Tamil Indiansutras