•  

வயதானாலும் செக்ஸ் வைத்து கொள்ளலாமா? ஆணும் - பெண்ணும் உடலுறவை நிறுத்த வேண்டுமா? டாக்டர்கள் விளக்கம்

சென்னை: ஆணும், பெண்ணும் திருமணம் ஆனதில் இருந்து தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்பாக ஒரு ஆண் அல்லது பெண்ணுடன் உடலுறவை வைத்து கொள்வது நல்லது இல்லை. அப்படி நடந்தால் அது சட்டவிரோதமான உறவாகும். சரி உடலுறவுக்கு ஸ்டார்ட்டிங் பாயிண்ட் என்பது பலருக்கும் திருமணத்தில் இருந்தாலும் கூட உடலுறவை குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நிறுத்த வேண்டுமா? தொடரலாமா? என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதற்கான விடையை இங்கு பார்க்கலாம்.

தாம்பத்திய உறவு என்பது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் முறைப்படி எப்போது தொடங்கும் என்றால் அது திருமணத்தில் தான். திருமணத்துக்கு பிறகு ஆண், பெண் உறவு வைப்பது தான் சட்டத்துக்கு உட்பட்டது.

 

relationship  sex
 

திருமணத்துக்கு முன்பாக காதல், கள்ளக்காதல், லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவுகளில் ஆணும், பெண்ணும் உல்லாசமாக இருந்தாலும் கூட அது சட்டத்துக்கு உட்பட்ட உறவு கிடையாது இத்தகைய உறவுகள் தொடக்கத்தில் சுகமாக இருக்கலாம். ஆனால் பிரச்சனைகள் நிறைந்தது.

இதனால் திருமணத்துக்கு பிறகு மனைவி - கணவன் என தாம்பத்தியம் வைத்து கொள்வது தான் சிறந்தது, பாதுகாப்பானது. அதேவேளையில் உடலுறவு பற்றி நம் ஊர்களில் வெளிப்படையாக பேசுவது கிடையாது. இதனால் பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அதில் ஒன்று தான் வயது அதிகரிக்க அதிகரிக்க ஆண், பெண்களின் பாலுணர்வு குறைந்து விடும். ஒரு கட்டத்தில் உடலுறவு செய்து கொள்வதில் ஆர்வம் இருக்காது. இதனால் குறிப்பிட்ட வயதில் செக்ஸை நிறுத்தி விட வேண்டும் என்றும் சொல்வார்கள்.

மேலும் தோளுக்கு மேல் வளர்ந்த மகள், மகன் இருக்கிறார்கள் என்று பல தம்பதிகள் தாம்பத்தியத்தை தவிர்த்து விடுவது உண்டு. ஆனால் உண்மையில் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு செக்ஸ் உறவை நிறுத்த வேண்டுமா?, ஆண் - பெண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க பாலுணர்வு குறையுமா? என்பது பற்றி பல டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபற்றி டாக்டர்கள் கூறியுள்ளதாவது:

‛‛பொதுவாக ஆணும், பெண்ணும் தனது வாழ்நாள் முழுவதும் உடலுறவு வைத்து கொள்ளலாம். உடலுறவுக்கு வயது என்பது ஒரு தடையே கிடையாது. பால் உணர்வுகள் என்பது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தனது வாழ்நாள் முழுவதும் இருக்கும். இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஆணும், பெண்ணும் செக்ஸ் உணர்வுடன் இருந்தாலும் கூட அதனை வெளிக்காட்டுவது இல்லை. குறிப்பாக பெண்கள் என்றால் நம் ஊர்களில் பெண்கள் தங்களின் பாலுணர்வை கட்டுப்படுத்த தொடங்கி விடுகின்றனர். குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்று பெண்கள் தங்களின் 45 வயதுக்கு மேல் பல பெண்கள் அந்த உறவை வெளிப்படுத்துவது இல்லை.

இதனால் ஆண்களும் அப்படியே உடலுறவை நிறுத்த தொடங்கி விடுவார்கள். உண்மையில் செக்ஸ் வைப்பதன் மூலமாக இருவரின் மனதும் மகிழ்வதோடு, உடலில் கலோரிகள் குறையும். இது உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும். அதேபோல் அமைதியாக ஒருவரையொருவர் அன்பு செலுத்தி வைக்கும் உறவு என்பது வயது முதிர்வின்போதும் கூட இருவருக்குமான உறவை வலுவாக்கும். மனஅழுத்தம் குறையும். இளமையாக இருக்கலாம். முகத்தில் பொலிவு இருக்கும்'' என்று கூறினர்.

English summary
A man and a woman have been engaged in marital life since they got married. It is not good to have sexual intercourse with a man or a woman before that. If that happens, it is an illegal relationship. Well, the starting point for sexual intercourse is when many people should not have sexual intercourse even in marriage? Should sexual intercourse stop at a certain age? Many people have doubts about it. Let's see the answer to that here.

Get Notifications from Tamil Indiansutras