•  

உடலுறவின்போது தலை வலிக்குதா? காரணம் இதுதான்.. அலட்சியம் காட்டினால் பேராபத்து.. தப்பிக்க ஈஸி வழி

சென்னை: சிலருக்கு தங்களின் மனைவி, கணவனுடன் உடலுறவு வைக்கும்போது தலைவலியை உணரலாம். இது ஏதாவது ஒரு நாளில் என்றால் சாதாரணமானது தான். ஆனால் உடலுறவின்போது பலமுறை இதுபோன்ற தலைவலி வந்தால் அது ஆபத்தானது. இந்த தலைவலி ஏற்படுவது ஏன்? அதில் இருந்து விடுபடுவது எப்படி? அலட்சியம் காட்டினால் எந்த மாதிரியான உடல்நல பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கட்டிலில் இன்பமாக தாம்பத்தியம் கொள்ளும்போது திடீரென்று தலைவலி பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதில் நீங்களும் கூட உணர்ந்து இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் கணவன், மனைவி ஆகியோரில் யாரோ ஒருவர் தலைவலியால் பாதிக்கப்படலாம். இல்லாவிட்டால் கணவன் - மனைவி இருவரும் தலைவலியால் பாதிக்கப்படலாம்.

relationship  headache
 

உடலுறவை ஆரம்பிக்கும் போது அல்லது உடலுறவில் இருக்கும்போது அல்லது உச்சக்கட்டம் அடையும்போது இந்த தலைவலியை உணரலாம். இப்படியான தலைவலி எப்போதாவது ஒருமுறை வந்தால் பரவாயில்லை. ஆனால் அடிக்கடி வருவது பிரச்சனைக்குரியதாகும்.

இந்த தலைவலி என்பது கழுத்தின் தசைப்பகுதி அல்லது பின்பக்க தலையில் வரலாம். இல்லாவிட்டால் தலையின் ஒருபகுதி மட்டும் வலிக்கலாம். சிலருக்கு தலைவலியுடன் மூக்கில் இருந்து தண்ணீர் ஒழுகலாம். இல்லாவிட்டால் தலைவலியுடன் கண் எரிச்சல் ஏற்படலாம். மேலும் சிலருக்கு வாந்தி கூட வரலாம்.

இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது உடலுறவின்போது சிலர் தங்களின் தலையை விறைப்பாக வைக்கலாம். இது தலைவலிக்கு முக்கிய காரணம். உடலுறவின்போது இருவருக்கும் கலோரிகள் கரையும். உடலில் உள்ள நீர் சத்து குறையும். இது தலைவலியை ஏற்படுத்தலாம். இதனால் உடலுறவின்போது தலைவலி ஏற்பட்டால் தண்ணீர் குடிப்பது நல்லது. இதன்மூலம் அடுத்த 10 நிமிடங்கள் தலைவலி குணமாகலாம். சிலருக்கு ஒருநாள் வரை கூட தலைவலி நீடிக்கலாம்.

மேலும் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. உடலுறவின்போது தலைவலி ஏற்பட்டால் வேகமாக தாம்பத்தியம் கொள்வதை நிறுத்த வேண்டும். கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு அதன்பிறகு தாம்பத்தியத்தில் மெதுவாக ஈடுபடலாம். இதுவும் தலைவலியை நிறுத்தும் ஒரு செயல்முறையாகும். மேலும் இந்த தலைவலி மற்றும் மேற்கூறிய பிரச்சனைகள் உடலுறவின்போது தொடர்ந்து வந்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளலாம்.

ஏனென்றால் இந்த தலைவலியை லேசாக கருதக்கூடாது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த தலைவலி மற்றும் அதனுடன் கூடிய பிற பிரச்சனைகளுடன் உடலுறவு வைக்கும்போது அது ஸ்டோக்ஸை உருவாக்கலாம். இதனால் உடல் உறுப்புகள் கூட பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். இதனால் தாம்பத்திய உறவில் இருக்கும்போது ஏற்படும் தலைவலியை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள்.

English summary
Some people may experience headaches while having sex with their spouse. This is normal if it happens once in a while. But if you get such headaches repeatedly during sex, it is dangerous. Why do these headaches occur? How to get rid of them? What kind of health consequences can you face if you show negligence? Let's see here.

Get Notifications from Tamil Indiansutras