•  

குழந்தை பிறக்க வாரத்தில் எத்தனை முறை செக்ஸ் வைக்க வேண்டும்? புதுமண தம்பதிகளே தெரிஞ்சுக்கோங்க

சென்னை: சில தம்பதிகள் தங்களின் உடலுறவுக்கு அட்டவணை போட்டு வைத்து இருப்பார்கள். இத்தனை நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உடலுறவு வைக்க வேண்டும் என்று அட்டவணை போட்டு வாழ்வார்கள். ஆனால் உண்மையில் உடலுறவுக்கு அட்டவணை தேவையா? புதிதாக திருமணம் ஆனவர்கள் வாரத்தில் எத்தனை முறை செக்ஸ் வைக்க வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

பொதுவாக சில தம்பதிகள் நாட்களை கணக்கில் வைத்து செக்ஸ் வைத்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். உண்மையில் அப்படி செய்வது நல்லது இல்லை என்கின்றனர் டாக்டர்கள்.

relationship  intimacy  sex
 

இதுபற்றி பல டாக்டர்கள் சொல்வது என்னவென்றால், ‛‛செக்ஸ் என்பது குழந்தை பாக்கியத்துக்கு அப்பாற்பட்டு மனமகிழ்ச்சியையும் மையப்படுத்தி தான் உள்ளது. கணவனால் மனைவியும், மனைவியால் கணவனும் செக்ஸ் மூலம் இன்பம் பெறுகின்றனர்.

இதனால் செக்ஸ் உறவுக்கு நேரம், காலம் எதுவும் வேண்டாம். குழந்தை வேண்டும் என்பவர்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 4 முறை உடலுறவு வைத்து கொள்ள வேண்டும். அப்படி உடலுறவு வைத்து கொள்ளும்போது கருத்தரிப்புக்கான வாய்ப்பு 83 சதவீதம் உள்ளது. வாரத்தில் ஒருமுறை மட்டுமே செக்ஸ் வைத்து கொண்டால் கருத்தரித்தல் சதவீதம் 17 ஆக உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

இதனால் புதுமண தம்பதிகள் குறைந்தபட்சம் வாரத்தில் 4 முறை செக்ஸ் உடலுறவு வைக்கலாம். இதுதவிர விருப்பம் உள்ளவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் உடலுறவு வைத்து கொள்ளலாம். மேலும் வயதான தம்பதிகளும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடலுறவு வைத்து கொள்ளலாம். உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் மட்டும் உறவு வைப்பதை தவிர்க்கலாம். அதுவும் விருப்பம் இருந்தால் தொடரலாம். அது மனதில் ரிலாக்ஸை உருவாக்கும்.

குறிப்பாக உடலுறவுக்கு முன்பாக தங்கள் ஜோடியின் விருப்பத்தை கேட்டு அதன்படி அவர்களை இன்பமடைய செய்வது நல்லது. பொதுவாக உடலுறவின் போது ஆண்களின் ஆசைப்படியே பெண்கள் செயல்பட வேண்டி உள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் தங்களின் விருப்பத்தை ஆண்களிடம் கூறுவது இல்லை. அதனை வெளிப்படுத்துவதில் தயக்கம் உள்ளது. இதனால் ஆண்களே, தங்களின் மனைவியிடம் அவர்களின் ஆசையை கேட்டு நிறைவேற்றுவது இருவருக்கும் இடையேயான அந்நியோன்யத்தை இன்னும் அதிகப்படுத்தும்.

இதனால் இத்தனை நாட்களுக்கு ஒருமுறை தான் உடலுறவு வைக்க வேண்டும் என்று நாட்களை எண்ண வேண்டாம். தம்பதிகள் தினமும் தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் உடலுறவு வைத்து கொள்ளலாம். தேதி வைத்து பண்ணும்போது மனஅழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விறைப்பு தன்மை வராமல் போகலாம். இது இருவருக்கும் இடையேயான செக்ஸ் ஆர்வத்தை குறைத்து சலிப்பை ஏற்படுத்தலாம்'' என எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

English summary
Some couples have a schedule for their sex. They live by a schedule that says they only have sex once every so many days. But is a schedule really necessary for sex? Here's how many days a week should newlyweds have sex?

Get Notifications from Tamil Indiansutras