•  

ஆபாச படங்களை தவிர்த்தால் இவ்வளவு நல்லதா? ஆண்களே உஷாராக இருங்க!

சென்னை: பாலியல் என்பது ஆபாசமானதாக மாறியிருக்கும் காலம் இது. தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையேயான விவகாரம் இன்று பொது வெளிக்கு வந்திருக்கிறது. குறிப்பாக ஆபாச படங்கள் பாலியல் மோகங்களை தீர்க்கும் வடிகட்டியாக பார்க்கப்படுகிறது. ஆனால் உளவியல் மருத்துவர்கள் ஆபாச படங்கள் குறித்து கடுமையாக எச்சரித்திருக்கின்றனர்.

ஆபாச படங்களை பார்க்காமல் தவிர்ப்பதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவர்கள் விளக்கியுள்ளனர். குறிப்பாக, திருமணமானவர்கள் நிச்சயம் ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

health  sex
 

ஆபாச படங்களில் காட்டப்படும் பாலியல் காட்சிகள் பெரும்பாலும் கற்பனையானவை, யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை. இவற்றை தொடர்ந்து பார்க்கும்போது, தனிப்பட்ட உறவுகளில் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் ஏற்படலாம். இது உறவுகளில் திருப்தியற்ற உணர்வையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும். இந்த படங்களை பார்ப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இதையே எதிர்பார்ப்பார்கள். மட்டுமல்லாது ஆபாச படங்களை பார்ப்பது ஒரு போதை பழக்கமாக மாறக்கூடும்.

அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு வேளைக்கும் மூளையில் ரிவார்ட் சிஸ்டம் செயல்பட்டு நிம்மதியை கொடுக்கும். உதாரணத்திற்கு திரைப்படம் பார்க்கிறீர்கள் எனில், அது குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீடிக்கும். திரைப்படம் தொடங்கியதிலிருந்து அது முடிவது வரை ஏராளமான உணர்ச்சிகள் கடத்தப்படும். இறுதியில் திரைப்படம் சோகமாகவோ, சந்தோஷமாகவோ, சிந்திக்கும் வகையிலோ முடியும். இந்த முடிவில் உங்கள் மூளையில் டொபமைன் சுரக்கும். இதனால் நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.

உடற்பயிற்சியின்போதும், விளையாட்டின்போதும், பயணங்களின்போதும், ஓவியம் வரையும்போதும், எழுதும்போதும், இதர வேலைகளை செய்யும்போதும் நீங்கள் நிம்மதியாக உணர காரணம் இந்த டோபமைன்தான்.

ஆனால், ஆபாசப்படங்களை பார்ப்பதன் மூலம் டோபமைன் செயற்கையாக சுரந்து, மூளையை மழுங்கடித்துவிடும். அதாவது, தொடக்கத்தில் இந்த படங்கள் உற்சாகத்தை கொடுக்கலாம். ஆனால் காலப்போக்கில் உற்சாகம் குறையும். எனவே இன்னும் தீவிரமான படங்களை நீங்கள் தேடுவீர்கள். இது உங்களை ஆபாசப்படங்களுக்கு அடிமையாக்கும்.

இதனால் உங்கள் காதலியுடன், மனைவியுடன் திருப்திகரமான தாம்பத்திய உறவில் இருக்க முடியாது. இந்த பழக்கத்திற்கு அடிமையாதல், தனிப்பட்ட வாழ்வில் ஒரு வெறுமையையும், குற்ற உணர்வையும், சுயமரியாதை குறைபாட்டையும் ஏற்படுத்தலாம். இதனால் மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

பல ஆபாச படங்களில் பெண்கள் ஒரு பொருளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இது நிஜ வாழ்க்கையில் பெண்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்தை உருவாக்கலாம். இது பாலியல் வன்முறை, அத்துமீறல் போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு மறைமுகமாக வழிவகுக்கலாம். எனவே உடனடியாக ஆபாசப்படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Get Notifications from Tamil Indiansutras