சென்னை: அதிகாலையில் செக்ஸ் வைத்து கொள்வதன் மூலமாக பெண்ணை எளிதாக கர்ப்பமாக்கலாம் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையா? இல்லை கட்டுக்கதையா? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஆண், பெண்.. இருமணங்களை இல்லறத்தில் சேர்ப்பது திருமணம். இந்த இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அன்பு, பாசம், நேசம் இருவருக்கும் இருக்க வேண்டும். அதேபோல் இருவருக்கும் இடையேயான தாம்பத்திய உறவு சிறப்பாக இருக்க வேண்டும்.

கணவன், மனைவியையும், மனைவி, கணவனையும் தாம்பத்திய உறவில் திருப்திப்படுத்த வேண்டும். இது சக்சஸ் ஆகும்பட்சத்தில் அந்த தம்பதி இடையே பிரச்சனை வந்து அவர்கள் பிரிந்து செல்வது கடினம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு தம்பதிகளுக்கும் தாம்பத்திய உறவு என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் தாம்பத்தியம் எனும் உடலுறவுக்கு சரியான நேரம் இதுதான் என்று பலரும் சொல்லியிருப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். குறிப்பாக அதிகாலையில் உடலுறவு வைப்பதன் மூலமாக பெண்ணை எளிதாக கர்ப்பமாக்கலாம் என்று கூறுவது உண்டு.
ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு பெண்ணை கர்ப்பமாக்க எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடலுறவு வைத்து கொள்ளலாம். காலை, மதியம், இரவு, அதிகாலை மற்றும் நாம் கூறிய நேரங்களுக்கு இடைப்பட்ட வேளை என்று எப்போது வேண்டுமானாலும் செக்ஸ் வைத்து கொள்ளலாம். ஏனென்றால் மனைவியை கர்ப்பமாக்க வெறுமனே அதிகாலை நேர உடலுறவு மட்டுமே போதாது. குறிப்பாக ஆணுக்கு உரிய எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதேபோல் பெண்ணின் உறுப்பு வழியாக விந்தணுக்கள் போதிய வேகத்தில் கர்ப்பப்பை அடையும் திறனுடன் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஒரு பெண்ணை கர்ப்பமாக்க முடியும்.
மற்றபடி அதிகாலை வேளையில் செக்ஸ் வைத்தால் மனைவி கர்ப்பமடைவார் என்பது வெறும் கட்டுக்கதை தான். இருப்பினும் அதிகாலை நேரத்தில் உடலுறவு வைப்பதில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது அதிகாலையில் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும். ஆண்களை எடுத்து கொண்டால் அதிகாலையில் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் உடலில் அதிகமாக சுரக்கும். இது பாலியல் உணர்ச்சியை தூண்டும் ஹார்மோன் ஆகும்.
அதேபோல் பெண்களை எடுத்து கொண்டால் அவர்களுக்குஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்கள் சிறப்பாக சுரக்கும். இது அவர்களுக்கான பாலியல் உணர்வை அதிகப்படுத்தும். இப்படி ஆணுக்கும், பெண்ணுக்கும் பாலியல் ஹார்மோன் அதிகமாக அதிகாலையில் சுரக்கும் என்பதாலேயே அந்த நேரம் உடலுறவுக்கு ஏற்ற நேரம் என்று சொல்கின்றனர். ஆனாலும் அந்த ஆணிடம் விந்தணு எண்ணிக்கை உரிய அளவில் இருப்பது மற்றும் பெண்ணின் கர்ப்பப்பை நீந்தி அடையும் திறன் விந்தணுக்களில் இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணை கர்ப்பமாக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



