•  

பெண்ணை கர்ப்பமாக்க ஆணுறுப்பு எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்? சராசரி நீளம் என்ன? இதோ விளக்கம்

சென்னை: ஆண்களில் சிலருக்கும் தங்களின் ஆணுறுப்பு சிறியதாக இருப்பதாக நினைக்கின்றனர். இதனால் அவர்களின் மனதில் ஒரு சந்தேகம் வருகிறது. தங்களின் மனைவியை உடலுறவில் திருப்திப்படுத்த முடியுமா? இல்லையா? மனைவியை கர்ப்பமாவாரா? என்ற கேள்விகள் எழுவது உண்டு. இது பலருக்கும் மனஅழுத்தத்தை கூட ஏற்படுத்தி உடலுறவு குறித்த பயத்தை ஏற்படுத்தலாம். இப்படி ஃபீல் பண்ணுவோர் இந்த செய்தியை படித்தால் நிம்மதி அடையலாம்.

செக்ஸ்.. இந்த வார்த்தையை கேட்டவுடன் சில பெண்களுக்கும், ஆண்களுக்கும் பயம் வரலாம். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது தான். இதுபற்றி வெளிப்படையாக யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதும் இந்த பயத்துக்கு முக்கிய காரணம்.

sex  relationship
 

அந்த வகையில் ஆண்களில் சிலருக்கு பொதுவாகவே ஒரு கேள்வி உண்டு. அது என்னவென்றால் தனது மனைவியை கட்டிலில் திருப்திப்படுத்த முடியுமா? என்பது தான். இந்த விஷயத்தில் சில ஆண்கள் தங்களின் ஆணுறுப்பின் நீளம் குறைவாக உள்ளதாக நினைத்து கவலைப்படுவது உண்டு.

அப்படி கவலைப்படும் நபர்களில் நீங்கள் ஒருவர் என்றால் இனி அந்த கவலையை விட்டு விடுங்கள். ஏனென்றால் மனைவியை திருப்திப்படுத்த ஆணுறுப்பு அதிகப்படியான நீளத்தில் இருக்க வேண்டும் என்பது இல்லை. குறிப்பிட்ட நீளத்தில் இருந்தாலே போதும். ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆணுறுப்பின் நீளம், சைஸ் மாறுபடும். இதனால் யாரும் யாருடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.

2007ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் ஆண்களின் விறைப்பு தன்மையின்போது ஆணுறுப்பின் சராசரி நீளம் 13.01 செமீ என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 5.11 இன்ச். இது சராசரி நீளம் தான். இது உங்களின் புரிதலுக்கானது மட்டுமே. உண்மையிலேயே பெண்களை திருப்திப்படுத்த ஆணுறுப்பு சைஸ்க்கு என்று சரியான வரையறை கிடையாது.

ஏனென்றால், ஆணுறுப்பு 2 முதல் 4 இன்ச் அளவில் இருந்தாலே போதும். பெண்ணுறுப்பின் உள்ளே 2.5 சென்டிமீட்டரில் ஜி ஸ்பாட் என்ற உறுப்பு உள்ளது. இந்த இடத்தை தூண்டும் தன்மை ஆணுறுப்புக்கு இருந்தாலே போதும். பெண்களை உடலுறவில் உச்சக்கட்டமடைய செய்ய முடியும். அதேபோல் பெண்களை கர்ப்பமாக்குவதற்கும், ஆணுறுப்பின் நீளத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சரியான பிரஷரில் ஆணுறுப்பில் இருந்து விந்தணு வெளியேறி கருப்பையை சென்றடைந்தாலே போதும். ஒரு பெண் கர்ப்பமாவார் என்கின்றனர் டாக்டர்கள்.

இதனால் இனி ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்று நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம். மீறி அப்படி நினைப்பதன் மூலமாக ஆண்கள் தங்களுக்கு குறை உள்ளதாக நினைத்து மனஅழுத்தத்துக்கு ஆளாகலாம். அதோடு மனைவியுடனான உறவை தள்ளி வைக்கலாம். இதுதான் கணவன் - மனைவி இடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம். எனவே ஆணுறுப்பின் அளவுக்கும், பெண்ணை கர்ப்பமாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2 முதல் 4 இன்ச் அளவில் ஆணுறுப்பு இருந்தாலே போதும். ஒரு பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Some men also feel that their penis is small. This raises a doubt in their mind. Will they be able to satisfy their wife sexually? Or not? Will they get her pregnant? Questions arise. This can even cause stress and fear of sex for many. Those who feel this way can find relief by reading this article.

Get Notifications from Tamil Indiansutras