சென்னை: அன்பு என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் ஒரு சக்தி. அதிலும், துணைவரை அணைத்துக் கொள்வது, மன அழுத்தத்தைக் குறைப்பதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக மருத்துவ மற்றும் உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அறிவியல் பூர்வமான நன்மைகள்
மன அழுத்தம் குறையும்
அன்பான அணைப்பு ஒரு இயற்கை சிகிச்சை போன்றது. அணைக்கும்போது உடலில் ‛ஆக்ஸிடோசின்' எனப்படும் "காதல் ஹார்மோன்" சுரக்கிறது. இந்த ஹார்மோன் மன அழுத்தம், பதற்றம், மற்றும் கவலை போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மனதை அமைதிப்படுத்தி, பாதுகாப்பான உணர்வைத் தருகிறது.
இதய ஆரோக்கியம் மேம்படும்
துணையுடன் அணைத்துக்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது இதயத்திற்கு நல்ல சக்தியையும் அமைதியையும் அளித்து, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பையும் கணிசமாகக் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
அணைக்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதனால், உடல் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் மேம்பட்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாகிறது.
உறவு வலுப்பெறும்
அடிக்கடி அணைத்துக்கொள்ளும் தம்பதியரிடையே மனரீதியான பிணைப்பு வலுவாகிறது. இது நம்பிக்கையை அதிகரிப்பதுடன், அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியையும், பாசத்தையும் பெருக்குகிறது. இதன் மூலம் குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் குறையும்.
ஆழ்ந்த தூக்கம்
அணைத்துக்கொள்ளும் பழக்கம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. மனதிற்கு அமைதியைத் தருவதால், தூக்கம் எளிதாக வருவதுடன், ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கிறது.
ஆனால் ஒரு கண்டிஷன். உங்கள் மனைவியை மட்டும் கட்டியணைத்து பலன்களை பெறுங்கள். மாற்றிபிடித்து தர்ம அடி வாங்கினால் கம்பெனி பொறுப்பாகாது மக்காஸ்.



Click it and Unblock the Notifications



