•  

உதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா?

சென்னை: முத்தம் காமத்தில் சேர்த்தியில்லை என்றாலும் துணையுடன் உதடோடு உதடு வைத்து உரசி விளையாடுவது சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.

காதலன் காதலிக்கு தரும் முத்தத்திற்கும், கணவன் மனைவிக்கு தரும் முத்தத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதே போல முத்தத்தை எப்படி தரவேண்டும் என்பதிலும் ஒரு கலையம்சம் உள்ளது.

முத்தம் பற்றிய ஆரய்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு முத்தம் வலியை குறைக்கும், கலோரியை எரிக்கும், முகத்திற்கு பொலிவு தரும், இரத்த அழுத்தத்தை குறைக்கும், மகிழ்ச்சியான ஹார்மோன்களை சுரக்க செய்யும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

முத்தம் எப்படி இருக்க வேண்டும்

முத்தம் எப்படி இருக்க வேண்டும்

உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சண்டை இட்டுக்கொள்வது போல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்தப்பிரமை கொண்டவள் போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் மூடியிருக்கும்... இது வாத்சாயனார் முத்தத்திற்கு சொன்ன விளக்கம்.

முத்தத்திற்கு ஏற்ற நேரம்

முத்தத்திற்கு ஏற்ற நேரம்

முத்தமிட ஏற்ற நேரம் என்று எதுவும் இல்லை. இருவருக்கும் நல்ல மனநிலை, ஒத்த மனநிலை, மூடு இருக்கும்போது முத்தம் தருவது இனிமை சேர்க்கும்.. மூடு வந்திருச்சுன்னா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.. அதிலும் முத்தம் கொடுக்க நேரம் காலமா பார்க்க முடியும்... உதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே...!

உதட்டு முத்தம்

உதட்டு முத்தம்

உதடுகளில் முத்தமிடும்போது அவசரம் கூடாது, அதி வேகம் கூடாது. முக்கியமாக உதடுகளை கடித்து காயப்படுத்தக் கூடாது. இதமாக முத்தம் கொடுப்பது தான் சரி!. கீழ் உதடுகளை அன்பாக, மெதுவாக, ஆசையாக முத்தமிட வேண்டும். சின்னதாக கவ்வியபடியும், சுவைத்தபடியும் இடப்படும் முத்தத்திற்கு கிக் அதிகம்.

கலை நயம்

கலை நயம்

முத்தம் அற்புதமானது என்று எல்லோரும் அறிந்தது தான். அது ஒரு தனி கலை. ஒவ்வொரு முத்தமும் தித்திக்க சின்னச் சின்னதாக கற்பனை நயத்தையும் சேர்த்து கலையுணர்வோடு முத்தமிடுங்கள். வாய்களை மூடிக்கொண்டு முத்தம் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுக்கிறீர்கள் என்றால் கோபமாக, வெறுப்பாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திவிடும்!

மென்மையான முத்தம்

மென்மையான முத்தம்

அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம். உதட்டுடன் உதடு உரசி தரப்படும் முத்தம் தரும் சந்தோஷம் போல வேறு எங்குமே கிடைப்பதில்லை. முகத்தை ஒரு குழந்தையை ஏந்துவதைப் போல தாங்கி பிடித்து முழு கவனத்தையும் உதட்டில் செலுத்தி மென்மையாக அதே நேரத்தில் ஆழமாக தரும் முத்தம் அற்புதமானது.

பெண்களுக்குப் பிடிக்கும்

பெண்களுக்குப் பிடிக்கும்

முத்தச் சண்டையில் வெற்றி பெறும் ஆண்களைத்தான் பெண்களுக்கு நிறையப் பிடிக்குமாம். தன்னை ஒருவன் எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பதை அவன் தனது இதழ்களில் தரும் முத்தத்தை வைத்துத்தான் ஒரு பெண் முடிவு செய்கிறாளாம். அப்புறம் என்ன உங்கள் துணைக்கு காதலோடும் அன்போடும் முத்தமிட்டு மனதை வெல்லுங்கள்... உதட்டோடு உதடு வைத்து உரச நீங்க ரெடியா?

 

English summary
Lip game is always a pleasurable one in relationships. Here are some of the tips for this hot summer.
Story first published: Wednesday, April 19, 2017, 16:58 [IST]

Get Notifications from Tamil Indiansutras