•  

என் மெல்லிதழ் கடித்துப் போ

சின்னச் செவ்விதழ்.. எத்தனை எத்தனை ஆராய்ச்சிகள்.. காதலிலும் சரி, காமத்திலும் சரி திளைக்கத் திளைக்க பேசப்படும் ஒரே விஷயம் முத்தம்தான்..முத்தம் மொத்தம் எத்தனை என்று வகை வகையாக பிரித்து மேய்ந்து விட்டனர் முத்த ஆராய்ச்சியாளர்கள்.. ஆனாலும் முடிவே இல்லாமல், முடிவும் தெரியாமல்.. இன்னும் இன்னும் என்று போய்க் கொண்டேதான் இருக்கிறது முத்த ஆராய்ச்சிகள்.. சத்தம் போடாமல்.கொடுப்பதும் சரி, வாங்குவதும் சரி.. முத்தத்திற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது.. கொடுக்க கொடுக்க வாங்குவதிலும், வாங்க வாங்க கொடுப்பதிலும் கிறங்கிப் போய்க் கிடக்கின்றன உலகத்து உதடுகள்...வாங்களேன்.. முத்தத்திற்குள் ஒரு முறை ஒரு சிற்றுலா போய் வருவோம்...மீண்டும் மீண்டும் வா...

மீண்டும் மீண்டும் வா...

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை... இது முத்தத்திற்கும் பொருந்தும். எத்தனை எத்தனை கொடுத்தாலும்... சலிக்காமல் இருப்பது இந்த முத்தம் மட்டுமே.

வேண்டும் வேண்டும் தா...

வேண்டும் வேண்டும் தா...

என் மெல்லிதழ் கடித்துப் போ... மென்மையாக சுவைத்துப் போ... உள்ளுக்குள் போர் ஒன்றை தட்டி எழுப்பு.. என் உதடுகளுக்குள் பாயும் புலியாய் பறந்து வந்து பரபரப்பை ஏற்படுத்து... என்றுதான் முத்த மழை பொழியப் பெற்றோரின் உதடுகள் துடித்துக் கதறும்.

மெல்ல மெல்ல

மெல்ல மெல்ல

முத்தம் தருவதும் சரி, அதைப் பெறுவதும் சரி.. தனிக் கலைதான்.. மெல்ல இதழ் விரித்து.. மேலுதட்டில் கொஞ்சம்.. கீழுதட்டில் மிச்சம் என்று மெல்ல மெல்ல அலை பாய்ந்து.. ஆசையாக அந்தக் கள்ளூறும் உதடுகளில் களிப்பாக நடமிடும் நாவுகளுக்கும், உதடுகளுக்கும் கிடைக்கும் உற்சாகம்.. புத்தியை பித்தம் பிடிக்க வைக்கும்..

நீ கொஞ்சம் நான் கொஞ்சம்

நீ கொஞ்சம் நான் கொஞ்சம்

முகத்துக்கு முகம் பார்த்து நெருங்கி வந்து... நீ கொஞ்சம் நான் கொஞ்சம் என்று போட்டி போட்டு நான்கு உதடுகளும் நர்த்தனமாடும்போது கிடைக்கும் உற்சாகம்.. எத்தனையோ சக்திகளுக்குச் சமமாம்.

உயிரோடு உறவாடி... உதடோடு விளையாடி...

உயிரோடு உறவாடி... உதடோடு விளையாடி...

முகத்தை நம் பக்கம் திருப்பி... மெல்ல தலை சாய்த்து... கண் மூடிக் கிறங்கிக் கிடக்கும் துணையை ஆசைப் பார்வை பார்த்து.. அவர் மயங்கிக் கிறங்கி வரப் போவது என்னவோ என்ற எதிர்பார்ப்பில் நெஞ்சம் படபடத்துக் கிடக்க... மென்மையாக நெருங்கி.. சின்னதாக ஒரு முத்தம் வைக்கும்போது சிலிர்க்கும் பாருங்கள்.. நெஞ்சம்.. சிம்லாவின் குளிர் தோற்கும் அந்த சிலிர்ப்புக்கு.

ஆசையே அலை போல... நாமெல்லாம் இதழ் மேலே...

ஆசையே அலை போல... நாமெல்லாம் இதழ் மேலே...

முத்தத்தை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. வாஞ்சையாக, ஆசையாக, உணர்வோடு, உந்துதுதலோடு, காமத்தோடு, காதலோடு... எப்படிக் கொடுத்தாலும் கிறங்கிப் போக காத்துக் கிடக்கின்றன இதழ்கள்.. பிறகென்ன உற்சாக பானம் அருந்த யாருக்கும் தந்தி அடித்து பெர்மிஷன் கேட்க வேண்டியதேயில்லை.. உதடுகளோடு உறவாடி சின்னதாக பெப் டாக் நடத்தினாலே போதும்...

அங்கு...இங்கு...எங்கெங்கும்

அங்கு...இங்கு...எங்கெங்கும்

நெற்றியில் உன் முத்தத்தால் என்னை நனை.. என் இதயத்தின் தாளமெல்லாம் தட்டுத் தடுமாறும்... நீ என்னை நினை... கண்ணில் உன் இதழ் பதித்து... காதோரம் உன் இதழ் சிரித்து... கழுத்தோரம் விளையாடி... என் இதயத்தைக் களவாடி.. என் இதழோடு உறவாடி... என்னைக் கொன்று போட்டுப் போ... என்றுதான் தோன்றும் உறவுக்கு கட்டியங் கூறும் முத்தத்தைப் பெறுவோருக்கு.

எப்போதும் சங்கீதம்.. சந்தோஷம்

எப்போதும் சங்கீதம்.. சந்தோஷம்

பால் நிலா கருத்த வானில் தடம் பதித்து தாளமிட... பருத்த இதழ் பறித்து.. கோவையை கிளி கொத்துவது போல செவ்விதழ்களைக் கவ்விப் பிடித்து... இதழில் கதை எழுதும் நேரம் இதுவன்றோ...

இதழ்களை ரசியுங்கள்... இனிமையாக முத்தமிடுங்கள்.. இதுதான் சொர்க்கத்தின் உண்மையான 'ரியாலிட்டி ஷோ'!

 

 

English summary
Kiss your lovable one with sweetness and passion by expressing poetic kissing.
Story first published: Monday, August 19, 2013, 15:23 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras