பேசிக் இன்ஸ்டிங்க்ட் .. படம் பார்த்திருக்கிறீர்களா.. இல்லாட்டி இன்றே ஏதாவது திருட்டு விசிடியை வாங்கியாவது பாருங்கள்.. ஷரோன் ஸ்டோனின் கவர்ச்சிகரமான படங்களில் இதுவும் ஒன்று... போல்ட் அன்ட் ப்யூட்டிபுல் என்று சொல்வோமே... அதற்கு ஸ்டோன் ஒரு 'மைல்கல்'. சரி.. மேட்டருக்கு வருவோம்.. படத்தில் ஷரோன் ஸ்டோனின் முத்தக் காட்சி ஒன்று இருக்கும்... ஈரம் சொட்டும் முத்தம் அது.
கிளார்க் கேபிள் தெரியுமா... 1939ம் ஆண்டு வெளியான 'கான் வித் தி விண்ட்' படத்தில் நடித்தவர். அவரும் விவியன் லீக்கும் அந்தப் படத்தில் கொடுத்துக் கொண்ட முத்தம் இருக்கிறதே... இன்று நினைத்தாலும் இதழ்கள் துடிக்கும்... அப்படி ஒரு அழகான கிஸ் அது...
இன்னொரு கிஸ் இது..99ல் வெளியான ஐஸ் வைட் ஷட் படத்தில் டாம் க்ரூஸும், நிக்கோல் கிட்மேனும் கொடுத்தது... ஜில்லிட்டுப் போய் இந்த முத்த யுத்தத்தைப் பார்த்து ரசித்தனர் அப்போது ரசிகர்கள்.
இந்தப் படங்களில் வந்த ஹீரோயின்கள் எல்லோருமே நாயகன்களிடம் முத்தத்தைக் கேட்டுப் பெற்றவர்கள்... சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட பெண்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களிடமிருந்து ஈரமான முத்தத்தைப் பெறுவதில் ரொம்பவே சந்தோஷமாக இருக்குமாம்.. அதிலும் விதம் விதமான முத்தங்களைப் பெறும்போது அந்தப் பெண்ணின் மனதின் அடி ஆழத்திலிருந்து கிளம்பும் பாருங்கள்.. ஒரு நிம்மதிப் பெருமூச்சு.. வார்த்தையில் சொல்ல முடியாதது அது.
உரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...!
எல்லோருக்குமே முத்தம் பிடிக்கும்.. தொட்டுத் தழுவப் பிடிக்கும்.. இதழோடு இதழ் சேர்த்து இதழமுதம் பருக ரொம்பவே பிடிக்கும்.. அன்பின் வெளிப்பாடுதான் முத்தம். காதலிலும் சரி, அன்பிலும் சரி, பாசத்திலும் சரி, காமத்திலும் சரி.. முத்தத்திற்கு நிறையவே மதிப்புண்டு. இதழ்களின் உரசலை விரும்பாதவர்களும் உண்டோ....
முன் விளையாட்டின் முதல் விளையாட்டு
உறவுகளின்போது முத்தம்தான் முதல் முன் விளையாட்டாக இருக்கிறது. அதாவது உறவு யுத்தத்தைத் தொடங்கி வைக்கும் முதல் படிதான் இந்த முத்தம்...
இதழில் கதை எழுதும் நேரம்...
ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான முத்தம் பிடித்திருக்கும்.. சிலருக்கு அழுத்தம் பிடிக்கும்.. சிலருக்கு செல்லச் சீண்டல் பிடிக்கும்.. சிலருக்கு மென்மை பிடிக்கும்.. இன்னும் சிலருக்கு ஆழமான முத்தம்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.
நெற்றி தொடங்கி ...
முத்தம் கொடுப்பதில் இத்தனை வகை என்று வாத்சாயனரால் கூட உறுதியாக சொல்ல முடியாது.. காரணம், அது கொடுப்பவரின் கலையுணர்வு மற்றும் பெறுபவரின் விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்தது. நெற்றியில் தொடங்கி கால் விரல் வரை எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. முத்தத்தை.
ஏக்கத்தைத் தணிக்க ஒரு முத்தம்...
உறவுகளின்போது பெண்களின் உடல் உள்ளுக்குள் அனலடித்தபடியே இருக்கும். ஆனால் வெளிக்காட்ட மாட்டார்கள். ஆண்கள்தான் எப்போதுமே அவசரக்குடுக்கையாச்சே.. சடபுடவென்று பாய்ந்து விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை... அவர்களுக்குள் எழுந்திருக்கும் அந்த உணர்வு வெப்பத்தை, ஏக்க துடிப்பை தணிக்க முத்தமிடுங்கள்.. ஆனால் பொதுவாக முத்தம், பெரும்பாலும் உணர்வுகளை மேலும் பல மடங்கு அதிகரிக்கவே உதவும்.... அதனால் என்ன.. இருவருக்குமே லாபம்தானே...
முரட்டு முத்தம்
சிலருக்கு முரட்டுத்தனமாக முத்தமிடுவது பிடிக்கும்.. சுவரோடு சுவராக சாய்த்து நிற்க வைத்து முத்தம் தரச் சொல்வார்கள்.. இதழோடு இதழ் அழுத்தி, இன்னும் சில நேரங்களில் அழுத்தமாக, ஆழமாக இதழ்களைக் கவ்வியபடி முத்தமிடுவது ஆண்களுக்கும், பெற்றுக் கொள்வதில் பெண்களுக்கும் பிடிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு இதுமாதிரியான முத்தம்தான் நிறையப் பிடிக்கிறதாம்.
எண்ணாதே.. அள்ளிக் கொடு
சிலருக்கு முத்த மழை பொழிய வேண்டும்.. ஒவ்வொன்றாக கொடுக்காமல்.. தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் ரொம்ப் பிடிக்கும். தலையில் ஆரமி்பித்து கால் நுனி வரை மெல்ல இதழ்களால் படர்ந்து, பற்றி, தொடர்ந்து, முடிக்கும்போது அவர்களுக்குள் உணர்வுகள் உயிர்த்தெழுந்து உச்சத்தைத் தொட்டு விஸ்வரூபம் காட்டி நிற்கும்.
இதழ்களால் கைது செய்...
அதுதான் லிப் லாக்.. நிறையப் பெண்களுக்கு இந்த லிப் லாக் பிடிக்கும்.. ரசிப்பார்கள்.. லயித்துப் போவார்கள்.. இதழ்களைக் கவ்விக் கொண்டு நீண்ட நேரம் சுவைத்தபடி இருக்கும் ஆண்கள் மீது பெண்களுக்கு ஸ்பெஷலாக மோகம் வருமாம். தான் விட நினைத்தாலும் அவன் விடாமல் கொடுக்க வேண்டும்.. இதழ்களை விடுவிக்காமல் தொடர வேண்டும் என்று பல பெண்கள் கருதுவதாக சர்வே ஒன்றிலும் சொல்லப்பட்டுள்ளது.
கவிதை முத்தம்
நிறையப் பெண்கள் ரசிப்பது இந்த கவிதை முத்தத்தைத்தான்.. அதாவது வெறுமனே பச்சக் பச்சக் என்று உதடுகளால் பேசிக் கொள்ளாமல், சின்னச் சின்னக் கவிதை சொல்லி முத்தமிடுவது... நெற்றியில் ஆரம்பித்து, அப்படியே காதுகள், காது மடல்கள், கன்னம், புருவம், மூக்கு, இதழ்கள், கழுத்து, மார்புகள், வயிறு, இடுப்பு, முதுகு...இன்னும் இன்னும் என்று அழகான கவிதை வரிகளோடு, வர்ணித்தபடி கொடுக்கும் முத்தத்திற்கு அலாதி வரவேற்பு கிடைக்குமாம்.. பெண்களிடமிருந்து.
பிறகென்ன .. இதழ்களை விளையாட விட வேண்டியதுதானே...!