•  

வெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை "ஜில் ஜில்"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்!

சென்னை: வெயில் காலம் வந்தாலே வியர்வை, புழுக்கம் ஆரம்பித்து விடும். உறக்கம் வராமல் தவிப்பவர்கள் படுக்கை அறையில் அரைகுறை உடையோடு உறங்கும் துணையைக் காணும் போதே ஆண்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும்.

அசதியில் உறங்கும் மனைவியை எழுப்ப மனது வராதுதான் இருந்தாலும் சில டிரிக்ஸ்களை பயன்படுத்தினால் மனைவிக்கும் ஆசையை தூண்டலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஹீட்டான படுக்கை அறையை கூல் ஆக்க சில ஜில் ஜில் ஐடியாக்களை அளித்துள்ளனர் காமவியல் நிபுணர்கள்... நீங்களும் டிரை பண்ணி பாருங்க. அப்புறம் தினம் தினம் உங்க வீட்டில் சிம்லா ஸ்பெஷல்தான்.

கொதிக்கும் வெப்பம்

கொதிக்கும் வெப்பம்

கோடை காலத்தில் அதிக அளவில் ரொமான்ஸ் நடக்கும் காரணம் புழுக்கத்தை தடுக்க படுக்கை அறையில் குறைவான ஆடைகள் அணிவதே என்கிறது ஒரு ஆய்வு. வெப்பத்தின் தகிப்பு ஒருபக்கம் இருக்க புழுக்கம் வாட்டி வதைக்க, துணையின் குறைவான ஆடை ஒருவித உற்சாக மூடினை வரவழைக்கும். எனவே துணையை தயார் படுத்த ஜில் என்று யோசியுங்கள்.

குளியலறை உறவு

குளியலறை உறவு

புழுக்கத்தை போக்க குளியல் அவசியம்... தனியாக குளிப்பதை விட துணையோடு குளித்தால் தனியான சுகம்தான். அதுவும் ஷவரில் இருந்து மெல்லிய மழையால் தண்ணீர் விழும் போது துணையை தழுவிக்கொண்டே குளிப்பது, உறவுக்கு உற்சாகமாக தயார்படுத்தும்.

தண்ணீர் பழங்கள்

தண்ணீர் பழங்கள்

ஐஸ் க்யூப் எல்லாம் பழைய டிரிக்... அது குளுமையான விசயம்தான். ஆனாலும் மெல்லிய ஆடையில் துணை இருக்கும் போது, தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை என தண்ணீர் நிறைந்த பழங்களை துணையின் மீது வைக்கும் போதே ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தும். அதை மெதுவாக ஒவ்வொன்றாக சுவைத்து சாப்பிடும் போது லேசாக உடலின் மீது படும் உதடுகள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தும். அப்புறம் என்ன உங்கள் துணை கிறங்கித்தான் போவார்.

மெல்லிய மசாஜ்

மெல்லிய மசாஜ்

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் லேசான கட்டிகள் வியர்குரு போன்றவை துணையில் உடலில் தோன்றியிருக்கும். அந்த எரிச்சலை போக்க அதற்கென உள்ள ஜில் பவுடரை உடல் முழுவதும் தூவி மெதுவாக தடவி ரொமான்ஸ் மூடை உருவாக்கலாம். அப்புறம் என்ன உடல் குளிர்ச்சி ஒருபக்கம் மறுப்பக்கம் உறவுக்கு தயாராகி விடுவார் உங்கள் துணை.

நனைத்த டவல்

நனைத்த டவல்

மெல்லிய வெண்மை நிற டவலை தண்ணீரை நனைத்து அதை நன்றாக பிழிந்து படுக்கை அறையில் வைத்திருக்கலாம். துணையின் உடல் முழுவதும் இந்த துணியை வைத்து லேசாக துடைத்து விடலாம். வெப்பத்திற்கு இதமாக உடலில் ஒருவித குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதே நேரத்தில் கிளர்ச்சியை உருவாக்கும். அப்புறம் என்ன இந்த டிரிக்ஸ்ஐ உபயோகித்து உங்கள் துணையை உற்சாகப்படுத்துங்கள்... உங்கள் படுக்கை அறையில் இனி குலு மனாலி கோலாகலம்தான்!

 

English summary
Celebrate summer with these romantic warm-weather date ideas, and sex tips guaranteed to make the action inside your bedroom as scorching as the forecast.Forget the old ice trick—a chilled piece of watermelon is even better.
Story first published: Tuesday, April 18, 2017, 15:22 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more