உடலுறவு உற்சாகம் தரக்கூடியது... அது உடலின் தேவையற்ற கலோரிகளை எரிக்கும்... மன அழுத்தம் போக்கும், தலைவலி நீக்கும் என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
செக்ஸ் ஒரு சர்வரோக நிவாரணி என்றெல்லாம் கூட நிறைய செக்ஸாலஜிட்டுகள் கூறுகின்றனர். டிவி சேனல்களில் நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒரு எக்ஸ் டாக்டரிடம் தொலை பேசியில் செக்ஸ் பற்றிய சந்தேசங்களை கேட்பது இன்றைக்கு சகஜமாகிவிட்டது.
இதற்காக புதுவிதமாக சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியே ஒளிபரப்பாகிறது. அது டிஆர்பியில் ஹிட் அடித்திருக்கிறதாம். இப்படி பாலியல் சந்தேகங்களை அறிந்து கொள்வதிலும், பாலியல் பற்றிய செய்திகளை, ஆய்வுமுடிகளைப் பற்றி படிப்பதிலும் அநேகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுபோன்ற செக்ஸ் சிந்தனைகள் மனிதர்களின் மூளையை உற்சாகமூட்டுகிறதாம். நினைவுத்திறனை அதிகரிக்கிறதாம். இதுபோன்ற ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டு மனதில் பாலை வார்த்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
நினைவாற்றல் அதிகரிப்பு
சமீபத்தில் செக்ஸ் குறித்து எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சில மகிழ்ச்சியான முடிவுகள் வெளியாகியுள்ளன, இந்த ஆய்வில் செக்ஸ் சிந்தனைகளினால் மூளையின் சிலபகுதிகளில் நியூரான் அதிக அளவு அதிகரிக்கிறது என்றும் அது நீண்ட கால நினைவாற்றலை அதிகரித்து உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர்.
ஆக்ஸிஜன் உற்பத்தி
செக்ஸ் நடவடிக்கைகள் அதிகமாகும் போது மூளையின் செல்கள் அதிக அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த எலிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை நிறுத்திய பிறகு அவைகளுடைய மூளைத்திறன் பெருமளவில் குறைந்து விடுகிறது.
அறிவுத்திறன் அதிகரிப்பு
நெதர்லாந்து மட்டுமின்றி தென் கொரியாவின் பல்கழைக்கழகமும் இந்த ஆய்வு குறித்து முடிவுகளை உறுதி செய்து உள்ளது. தென் கொரிய பல்கலைக்கழக ஆய்வின்படி, செக்ஸ் அறிவார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கிறது என கூறுகிறது.
மனஅழுத்தம்
செக்ஸ் செயல்பாடுகள் மூளையின் பின்மேட்டு ஹிப்பாகோம்பல் (hippocampal) மண்டல பகுதியில் மன அழுத்தம் ஏற்படுத்துவதற்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறி உள்ளது. மேலும் வயதானவர்களின் செக்ஸ் செயல்பாடுகள் குறையும் போது அது பல மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவிக்கிறது. கிளாமர் இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
மன உளைச்சல் மாயம்
அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளை வைத்து பரிசோதனை செய்தனர். செக்ஸ் உறவில்ஈடுபட்ட எலிகளின் மூளை வளர்ச்சி அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. உறவில் அதிகம் ஈடுபட்ட எலிகளிடம், எலிகளின் பொதுவான குணமான படபடப்பு, பயம் போன்றவை குறைவாக இருந்ததாம். அவை, புதிய சூழல்களில் விடப்பட்டபோது உணவை எந்த தயக்கமும், பயமும் இல்லாமல் உண்டனவாம்!
மகிழ்ச்சி தரும் செக்ஸ்
மூளை வளர்ச்சியை பாதிக்கும் தன்மை உடைய உளைச்சல் ஹார்மோன்களின் பாதிப்பை, செக்ஸ் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவங்களின்மூலம் மாற்றியமைக்க முடியும்" என்று தெரியவந்துள்ளதாக கூறினர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!