வெளுத்து வாங்கும் கோடை காலத்தில் சரும பராமரிப்பிற்கு பல்வேறு டிப்ஸ்களை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
கோடை காலத்தில் செக்ஸ் ரொம்ப பெஸ்ட் என்றும் கூறியுள்ளனர் நிபுணர்கள். கோடையில் செக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகமாக இருக்குமாம்.
செக்ஸ் ஹார்மோன்
கோடை காலத்தில் சூரிய வெப்பத்தின் மூலம் செக்ஸ் ஹார்மோன் அதிக அளவில் தூண்டப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செரடோனின், டோபமைன், டெஸ்டோஸ்டிரன் போன்ற ஹார்மோன்கள் இந்த மாதங்களில் அதிகம் சுரக்கின்றன.
காற்றோட்டமான உடைகள்
கோடை வெப்பத்தின் புழுக்கத்தை தணிக்க குறைந்த அளவிலான உடையை அணிந்து கவர்ச்சிகரமான தோற்றத்தில் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
கவர்ச்சியாக உணரும் பெண்கள்
கோடையில் பெண்கள் தங்களை அதிக கவர்ச்சியாக உணர்வதும், அழகாக நினைப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
சீரான ரத்த ஓட்டம்
ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கான வழிகளில் ஒன்று செக்ஸ். அது நமது சருமத்திற்கு ரத்தம் பாய்வதற்கு உதவுவதுடன் பளபளப்பான சருமத்திற்கும் துணை புரிகிறது. எனவே, சரியான சரும தோற்றத்தை பெற செக்ஸ் அடிப்படையிலேயே உதவுகிறது.
சரும பாதுகாப்பு
நமது உடலில் ஹார்மோன் அளவு சீராக இருப்பதற்கும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும், சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்வதிலும் மற்றும் அக்னே எனப்படும் சரும நோயை கட்டுப்படுத்தவும் செக்ஸ் உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
அழகான தோற்றம்
கொலாஜன் உற்பத்தியினை ஊக்குவிப்பதில் செக்ஸ் முக்கிய பணியாற்றுகிறது. எனவே, செக்ஸ் வைத்து கொள்வதால் அழகான தோற்றத்தை பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
கோடையில் ரெடியா?
கோடையில் சரும பாதுகாப்பிற்கும், ஆரோக்கிய வாழ்விற்கு செக்ஸ் ஏற்ற ஒன்று என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நீங்களும் செலவில்லாத இந்த சரும பராமரிப்பிற்கு தயாராகி விட்டீர்களா?