நான் சாகுறதுக்குள்ள ஒருதடவையாவது அந்த இடத்திற்கு போயிட்டு வந்திடணும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்றோ... ஒரே ஒரு முறை உன்னுடன் வாழவேண்டும் என்றோ கூறிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் துணையுடனான தாம்பத்ய உறவைக்கூட சில குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
படுக்கை அறையை மட்டுமே உறவிற்கு ஏற்ற இடமாக நினைக்காமல் சந்தோச சமாச்சாரத்திற்கு என சில இடங்களை பட்டியலிட்டுள்ளனர்.
உன் சமையலறையில்…
சமையல் அறைதான் மையலுக்கு ஏற்ற முக்கியமான அறையாம். அங்கு நடைபெறும் சின்னச் சின்ன சில்மிஷங்கள்....சந்தோசத்திற்கு திறவுகோலாக அமையும். மாதம் ஒருமுறையாவது சமையலறையில் உறவினை வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
குளியலோடு குதூகலம்
பூ பூவாய் உடலில் விழும் தண்ணீர் கிளர்ச்சியைத் தரும். அந்த நேரத்தில் தனியாக குளிப்பதை விட துணையோடு குளிப்பது கூட குதூகலம் என்கின்றனர் அனுபவசாலிகள்.
தோட்டத்தில் ஒருநாள்…
மாலை மயங்கும் நேரத்தில்.... மெல்லிய வெளிச்சத்தில் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது செய்யும் சந்தோச சேட்டைகள்... உறவிற்கு திறவுகோலாகும். நிலவு ஒளியில் அருகில் அழகாய் ஜொலிக்கும் துணையை ரசிப்பது தனி மகிழ்ச்சிதானே.
லிப்ட்டும் உதவும்
சில நிமிடமே மூடிய நிலையில் இருந்தாலும் லிப்ட் கூட உறவுக்கு ஏற்ற இடம்தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
கடற்கரை மணலில்…
கடற்கரை மணல் பரப்பில் பனிவிழும் பொழுதில் துணையுடன் அருகருகே அமர்ந்து பேசுவது கூடுதல் கிளர்ச்சி தரும். அதே உணர்வோடு உறவிற்கு அழைத்தால் துணை மறுக்கவா போவதில்லை... வார விடுமுறை நாளில் அழகான பீச் ரிசார்ட்ஸ் புக் செய்து கடற்கரை மணலில் கலவியை தொடங்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
சூட்டோடு சூடாக…
வெந்நீர் பாத் டப்பில் குளிப்பது உடலுக்கு இதம் தரும். தனியாக குளிப்பதை விட துணையோடு குளிப்பது கூடுதல் சுகம் என்கின்றனர்.
இதமான சாரல்
இது மழைக்காலம்... இதமான சாரலும் மிதமான குளிரும் நிலவும் இந்த சீசனில் மொட்டை மாடியில் நிலவு ஒளியில் கூடுதல் சந்தோச சமாச்சாரம் என்கின்றனர் நிபுணர்கள். நீங்களும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்களேன்.
கொஞ்சம் ஜாக்கிரதை
உறவு கொள்ள ஏற்ற பாதுகாப்பான இடம் படுக்கை அறைதான். வெளி இடங்களில் உறவு கொள்வது சந்தோசம் கொடுத்தாலும் அதில் சில சங்கடங்களும் நேரிடலாம். எனவே கழுகுக் கண்களில் இருந்து உங்களின் அந்தரங்கத்தை பாதுகாத்துக் கொள்ளுங்களேன் என்றும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.