•  

அதிகாலை காதல் மொழி அவசியமானது….

காதலிக்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் திருமணத்திற்குப் பின்னர் இருப்பதில்லை. எத்தனையோ தம்பதிகள் காதலித்த தினங்களை எண்ணி ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.பணிச்சுமை, குழந்தைகள் போன்ற பல சிக்கல்களில் சிக்கிக் கொள்வதால் தம்பதியர் இடையே சின்னச் சின்ன ரொமான்ஸ் கூட செய்வதற்கு கூட நேரமில்லாமல் போய்விடுகிறது.இதனால் சில நேரங்களில் வாழ்க்கையில் வெறுப்பும், வேதனையும்தான் மிஞ்சுகிறது. கிடைக்கும் சொற்ப நேரத்திலும் தம்பதியர் தங்களின் காதல் உணர்வுகளை உயிர்ப்பித்துக் கொள்வது அவசியம். அதற்காக சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.டேட்டிங் அவசியம்

டேட்டிங் அவசியம்

காதலிக்கும் போதுதான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள டேட்டிங் போகவேண்டும் என்றில்லை. திருமணத்திற்குப் பின்னரும் உறவுப் பிணைப்பை அதிகரிக்க டேட்டிங் போகலாம் தப்பில்லை. துணையின் எண்ணங்களை, உணர்வுகளை புரிந்து கொள்ள அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.

குளு குளு பிரதேசம்

குளு குளு பிரதேசம்

ஆண்டுக்கு ஒருமுறையாவது மலைப்பிரதேசங்கள், கடற்கரை விடுதிகளுக்கு தம்பதிகள் தனியாக போய் வாருங்களேன். விடுமுறை கிடைக்கலையே என்று அலுத்துக் கொள்ளாமல் இரண்டு நாட்களுக்காவது தனியாக நேரம் ஒதுக்கி இனிமையாக பொழுதை கழித்துவிட்டு வாருங்கள்.

சர்ப்ரைஸ் அவசியம்

சர்ப்ரைஸ் அவசியம்

கணவன் மனைவி என்றாலும் சின்னச் சின்ன சர்ப்ரைஸ்கள் அவசியம். படுக்கை அறையில் கூட தேடல் புதியதாக இருக்கவேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். சுவாரஸ்யமாக புதுமையானதாக இருக்கவேண்டும், அப்பொழுதுதான் தாம்பத்யம் இனிக்கும் என்கின்றனர்.

சரியாக உணர்த்துங்கள்

சரியாக உணர்த்துங்கள்

படுக்கை அறையில் உங்களின் தேவை என்னவோ அதை சரியான முறையில் உணர்த்துங்கள். இருவருக்கும் இடையேயான தகவல் தொடர்பும், புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியம். இரண்டு நிறுவனங்களுக்கு இடையேதான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவேண்டுமா என்ன? தம்பதியர் இடையே கூட புரிந்துணர்வு ஒப்பந்தம் அவசியம் என்கிறார் நிபுணர்.

அதிகாலை விளையாட்டு

அதிகாலை விளையாட்டு

இரவு நேரத்தில் மட்டும்தான் ரொமான்ஸ் செய்ய வேண்டுமா என்ன? அதிகாலை ரொமான்ஸ், காதல் விளையாட்டுக்கள் உற்சாகத்தினை அதிகரிக்குமாம். துணையை எழுப்பும் போது கொடுக்கும் சின்ன முத்தம், காதோரம் கிசுகிசுப்பாய் சொல்லும் ஐ லவ் யூ, போன்றவை மண வாழ்க்கையை மலரச் செய்யச்கூடியவை. அதிகாலையில் பேசிய காதல் மொழிகள் அன்றைக்கு முழுவதும் உங்கள் துணையின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்குமாம்.

நீங்களும் உங்கள் ரொமான்ஸ் வாழ்க்கையை உயிர்பிக்கும் செயல்களை இன்றே தொடங்குங்களேன்.

 

 

English summary
With a little effort and planning, you can bring the energy and passion back to your marriage.Things like an "I love you" in the morning, a special touch at breakfast, a "thinking of you" text during the workday, and cooking your spouse's favorite dish matter. They all count as foreplay. For a sensual night, be sure to include these foreplay essentials.
Story first published: Monday, July 1, 2013, 15:52 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras