•  

ஆசையுடன் அணுகுங்கள்…

காமம் என்பது உடல்களின் சங்கமம் மட்டுமல்ல... மனங்களின் சங்கமம் அங்கே நிகழவேண்டும். அப்பொழுதுதான் உறவில் உற்சாகமும், சந்தோசமும் நிகழும். இல்லையெனில் 10 நிமிட உறவு கூட வேதனையைத் தந்துவிடும்.உங்கள் துணையை நெருங்கும்போது ஆசையுடன் அணுகுங்கள். உங்களுக்குத் தேவையானது திகட்ட திகட்ட கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.தம்பதியர் இடையேயான உறவில் பிணைப்பு அதிகமாகவும், மகிழ்ச்சி நீடிக்கவும் நிபுணர்கள் கொடுத்துள்ள அறிவுரைகளை மேற்கொண்டு படியுங்களேன்.அழகாய் தொடங்குங்கள்

அழகாய் தொடங்குங்கள்

எந்த ஒரு விசயத்திற்கும் தொடக்கம் சரியாக இருந்தால் முடிவு சூப்பராக இருக்கும். அது செக்ஸ் விசயத்திலும் பொருந்தும். எனவே ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாய், புத்துணர்ச்சியோடு தொடங்குங்கள்.

விளையாட்டு முக்கியம்

விளையாட்டு முக்கியம்

எடுத்த உடனே கிளைமேக்ஸ்க்கு போகாமல் விளையாட்டோடு தொடங்குங்கள். கிளர்ச்சியான பேச்சு... சின்னச்சின்ன சில்மிஷங்கள் காதல் உறவை உற்சாகப்படுத்தும்.

மூடுக்கு கொண்டுவாங்க

மூடுக்கு கொண்டுவாங்க

எந்த விசயத்திற்குமே மூடு ரொம்ப முக்கியம், அதுவும் காம விளையாட்டில் மூடு ரொம்ப அவசியம். எனவே மூடு பார்த்து முன்னேறுங்கள். துணைக்கு சரியான மூடு இல்லாவிட்டால் உங்களின் கிளர்ச்சியான பேச்சாலும், செயலாலும் மூடுக்கு கொண்டு வாருங்கள்.

பற்றவைக்கும் முத்தம்

பற்றவைக்கும் முத்தம்

முத்தம் என்பது உறவின் திறவுகோல். எனவே படுக்கை அறையில் முதலில் முத்தம் மூலம் காமத்தீயை தூண்டிவிடுங்கள்.

அலங்காரமான அறை

அலங்காரமான அறை

படுக்கை அறை எப்போதுமே ஒரே மாதிரியாக இருந்தால் போர் அடிக்கும் எனவே கொஞ்சம் அவ்வப் போது சின்னதாய் அலங்கரியுங்கள். படுக்கை விரிப்புகளை மாற்றுவதோடு ஒரு மாற்றத்திற்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தை உபயேகிக்கலாம்.

சின்னச் சின்ன சர்ப்ரைஸ்கள்

சின்னச் சின்ன சர்ப்ரைஸ்கள்

காதல் தம்பதியரிடையே சர்ப்ரைஸ்கள் அவசியம். படுக்கை அறையில் கொடுக்கப்படும் சர்ப்ரைஸ்கள், பரிசுகள் உறவின் உற்சாகத்தை தூண்டும்.

புதிதாய் யோசியுங்கள்

புதிதாய் யோசியுங்கள்

ஒரே மாதிரியான செயல்பாடுகள், பொசிசன்கள் கொஞ்சம் போராடிக்கும் எனவே புதிது புதிதாக முயற்சி செய்யுங்கள். 60 பொசிசன்கள் காமசூத்ராவில் கூறப்பட்டுள்ளது. துணைக்கு உற்சாகத்தை, கிளர்ச்சியை அதிகரிக்கும் பொசிசன்களை முயற்சிக்கலாம்.

அச்சமில்லாத ஆரம்பம்

அச்சமில்லாத ஆரம்பம்

செக்ஸ் சிலருக்கு அச்சத்தைத் தரும், சிலருக்கு ஆனந்தத்தை தரும். எனவே உங்களின் துணைக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள். இதன்மூலம் துணைக்கு அச்சம் நீங்கி ஆனந்தம் பிறக்கும். உறவினை நினைத்தாலே உற்சாகம் ஊற்றெடுக்கும்.

 

English summary
In long-term relationships, it's easy to settle into a routine with your partner that, while may be comfortable, can make your sex life a tad mundane. However, by shaking it up and using these sex tips, you can revive the spark that first brought you two together. Here are a few ideas to consider.
Story first published: Friday, June 7, 2013, 13:38 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras