•  

நீ தீண்டும்போது தீ தோற்கிறதே....!

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு.. காமன் வீட்டு ஜன்னல் திறந்திருச்சு.... நிச்சயம் காமக்கலையின் முதல் 'ஷாட்'டே இந்த மின்னல்தான்.... இருவரது உள்ளங்களிலும் முதலில் தீப்பற்றி.. மெல்ல மெல்ல மெருகேறி.. உள்ளத்திலிருந்து இறங்கி உடலெங்கும் ஊர்வலம் போய்... உச்சத்தைத் தொட்டு உயிரை உருக்கி.. உணர்வுகளை பொசுக்கி நிற்கும்போது... எல்லாமும் நீயே என்று அங்கு இரு உடல்களும் சங்கமமாகிக் கிடக்கும்.. உள்ளத்தோடு சேர்த்து.காதலோடு கூடிய காமத்திற்கு என்றுமே வீரியம் அதிகம்.. வெறும் உடல் ஈர்ப்பு சில நிமிடங்களில் ஓய்ந்து விடும்.. காய்ந்து போகும். ஆனால் காதலையும், காமத்தையும் 'மிக்ஸ்' செய்து ஈடுபடும் 'செக்ஸ்' இருக்கிறதே... அது சொர்க்கத்தின் வாசல்படி.!சின்னச் சின்ன விளையாட்டுக்கள்.. செதில் செதிலாய் உணர்வுகளைத் தொட்டு விளையாடி துடிப்பூட்டி, துள்ள வைத்து உள்ளம் கொள்ளை போக வைக்கும் விளையாட்டுக்கள்... இதெல்லாம்தான் காமக் கலையின் முக்கிய அம்சங்கள்.Do Women Desire These In Bed?
 பெண் என்பவள் போகப் பொருள் அல்ல.. காமத்தில் ஈடுபடும் முன் இதை முதலில் தெளிவாக மனதில் கொள்ள வேண்டும். அவளது உடலில் ஊர்வதை விட மனதில் உறங்குவதுதான் முக்கியமானது... அழகே உன்னை ஆசையுடன் தொடுகிறேன்.. உன் அகத்தில் என்னை புதைத்துக் கொள்.. என்று கருத வேண்டும்.. ஆசையுடன் மட்டும் தொடாம்ல், பாசத்துடன், பரிவுடன், காதலுடன், அன்புடன், நேசத்துடன் தொட்டுப் பாருங்கள்.. ஜில்லிட்டுப் போய் ஜிவ்வென்று வானில் பறப்பார் உங்களவர்.செக்ஸ் குறித்து சிந்திக்கும்போது பெரும்பாலானவர்களுக்கும் தோன்றும் ஒரு பொதுவான எண்ணம்.. இன்றைக்கு எப்படியாவது நம்மவளை அசத்தி விட வேண்டும் என்பதே. இந்த கருத்தே தவறு.. உடல் ரீதியாக அசத்துவதை விட உள்ளத்தைத் தொட வைப்பதுதான் ஆண்மைக்கு அழகு...!மெதுவாக ஆரம்பியுங்கள்.. எதிலுமே அவசரம் வேண்டாம். முத்தமாகட்டும், தழுவல்களாகட்டும், கலந்து உறவாடுவதாகட்டும்.. நிதானம் இருக்கட்டும்... அதேசமயம், ஒவ்வொரு தொடுதலிலும், ஒவ்வொரு அசைவிலும் தீப்பொறி பறக்க வேண்டும்... சத்தமின்றி!.எதிரெதிரே உட்காருங்கள். உங்கள் முன் உட்கார்ந்திருக்கும் தேவதையை ஆசை தீர ரசித்துப் பாருங்கள்... உங்கள் பார்வையின் ஒவ்வொரு பாய்ச்சலும் அவரை 'ஆயிரம் ஹார்ஸ் பவர்' வேகத்தில் தாக்கும்....!அவர் கை பிடித்து, மெல்ல தூக்கி, விரல் சொடுக்கி, ஆசையுடன் நீவி, சின்னதாக தடவி சிலிர்ப்ப்பூட்டுங்கள்....!மேலும் அருகே நெருங்குங்கள்.. கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் மூளட்டும்.. அவர் நிச்சயம் தனது நெஞ்சத்தில் காதலை நிரப்பி உங்களிடம் கொடுப்பார்.. கண் பேசும் வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி இருக்கிறது தெரியுமா... தேடுங்கள், அந்தக் கண்ணுக்குள் உங்கள் காதலைத் தேடுங்கள்.. கண்களால் அவரைக் கைது செய்யுங்கள்.. காதலை வாரிப் பிடியுங்கள்...!அவரது சின்னக் கண்களைப் பார்த்து சொக்கியது போதும், சொக்க வைத்ததும் போதும்.. இப்போது முத்தம் தரும் நேரம். கிட்ட நெருங்கி, வாகாக அமர்ந்து, வசதியாக கண்களை நெருங்குங்கள்... சின்னதாக ஒரு முத்தம் வையுங்கள்... சிலிர்ப்பூட்டும் மொழி பேசுங்கள்.. செல்லமாக கொஞ்சுங்கள்.. இன்னும் ஒரு முத்தம்.. இன்னொரு முத்தம்.. இதோ இது ஒன்று.. என்று கணக்கில்லாமல் களைப்பில்லாமல் தொடருங்கள்....நீ தீண்டும்போது தீ தோற்கிறது.. என்று சொல்லி கிளர்ச்சியுறுவார் உங்கள் துணை... உன் கை விரல் பட்டு என் மனம் பொசுங்கிப் போனதடி என்று நீங்கள் பதில் மொழி பேசுங்கள்... மெல்ல மெல்ல அவரை உங்கள் ஆளுமைக்குள் கொண்டு வாருங்கள்.. உங்கள் அன்பின் நெருக்கம் பார்த்து அவரே வருவார்...!இதழில் கதை எழுதும் நேரம் இப்போது.. சின்னச் செவ்விதழ் கவ்வி, அழகாக.. ஆனந்தமாக.. அவசரமில்லாமல் ஒரு இச்... இன்னும் ஒரு இச்... இப்படியே சில இச் இச் இச்....சிலிர்ப்பாகி 'ஸ்லிப்' ஆவார் உங்கள் இதயத்தில்...!நெஞ்சத்தையே மஞ்சமாக்கி அவர் சாயும்போது, மெல்ல சாய்த்துக் கொண்டு வீணையை மீட்டத் தொடங்குங்கள்.. கைகளைத் தொட்டு மெல்ல நீவி விடலாம்.. முதுகில் வருடித் தரலாம்.. மார்புகளில் கைகளை அலைய விட்டு அலை பாய விடலாம்.. ஆனால் உங்கள் உதடுகள் மட்டும் அவருடைய இதழ்களோடு சங்கமித்தபடி இருக்கட்டும்....இதழ் பருகி, இன்பம் கண்களில் சொருகி...இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா என்று அவர் பாடத் தொடங்கும்போது.. பளிச்சென மடியில் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்.. இன்ப விளையாட்டின் 2வது இன்னிங்ஸ் இப்போது....மார்போடு அணைத்து, மகிழ்ச்சியோடு அரவணைத்து, முதுகில் கை அழுத்தி.. விரல்களால் நடமிட்டு.. என் ஜீவனே.. என் செல்லமே.. என் தங்கமே.. என்று சொல்லி, ஆசையுடன் வாஞ்சையுடன், வாலிபத்துடன் வாரி வழங்குங்கள் காதல் அமுதை.மெல்ல அவர் உடல் பிரித்து.. மீண்டும் இதழ் சேர்த்து.. விரல்களால் தலை கோதி, காதுகளை வருடி, கழுத்தில் சின்னச் சின்ன சில்மிஷம் செய்து... தொடருங்கள்.மீண்டும் முத்த மழை பொழியலாமா... நெற்றியில் ஒரு முத்தப் பொட்டு.. காதுகளில் சத்தமின்றி ஒரு அழகு முத்தம்.. கண்களில் மறுபடியும் ஒரு காதல் முத்தம்.. மூக்கில் ஒரு மெளன முத்தம்.. இதழ்களில் ஒரு லட்டு முத்தம்.. நாசியில் ஒரு ஆசை முத்தம்.. கழுத்தில் ஒரு காந்த முத்தம்... தொடருங்கள்.. 'முடிவு' வரை தொடருங்கள்... தொடர்ந்து களத்தில் இறங்குங்கள்...!காமத்தை வேலையாக கருதாமல், அதை லீலையாக கருதி அத்தோடு நில்லாமல் காதலையும் கலந்து தரும்போது எந்தப் பெண்ணுக்குமே நீங்கள் மனம் கவர்ந்த மன்மத ராசாதான்....உடல் தந்த உங்கள் துணைக்கு உங்கள் உள்ளத்தில் ஆறுதல் கொடுங்கள்.. எல்லாம் முடிந்த பின்னர் ஏகாந்தமாக தூங்கப் போய் விடாமல்.. வாடி என்ன செல்லமே என்று மனதில் நி்ம்மதி கொடுங்கள்.. நீங்காத நினைவுகளுடன் இருவரும் இணைந்து தூங்கப் போங்கள்... நீண்டு நீடிக்கும் இந்த காதல் மழை- அடை மழையாக!.

English summary
When we think of sex and women, we get confused. It is very difficult to read the mind of a woman and make out what she really wants. There are few desires and needs of a woman too! But, men fail to understand it as the woman doesn't try to express herself. That is why men do not understand what women actually want in bed. So, here we are trying to explain what women desire in bed.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras