•  

அன்பு அதிகரிக்க காதலோடு சொல்லுங்கள் ஐ லவ் யூ….

கணவன் மனைவியோ, காதலர்களோ, அன்பையும், காதலையும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். முத்தம் கூட கொடுத்தால்தான் உணரமுடியும். அதேபோல அன்பையும், காதலையும் அவ்வப்போது வெளிப்படுத்தவேண்டியது அவசியம்.சின்னச் சின்ன பரிசுகள்... அவ்வப்போது கொடுக்கப்படும் முத்தங்கள்... சர்ப்ரைஸ்கள் என ரொமான்ஸ் நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அன்போடு தரப்படும் ஒரு முத்தம் ஆச்சரியப்படத்தக்க நிகழ்வுகளை ஏற்படுத்தும்.தம்பதியருக்கிடையேயான காதலை உயிர்போடு வைத்திருக்கக் கூடிய சில விசயங்களை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் மேற்கொண்டு படியுங்களேன்.மின் அஞ்சல் கடிதம்தகவல்களை பகிர்ந்து கொள்ள இன்றைக்கு எல்லோரும் அதிகம் பயன்படுத்துவது மின் அஞ்சல், எஸ்.எம்.எஸ்தான் எனவே அவ்வப்போது காதலாய் கடிதம் எழுதி இ.மெயில் அனுப்புங்கள். சின்னச் சின்ன காதல் வார்த்தைகளை எஸ்.எம்.எஸ் செய்யுங்கள். அதைக் கண்டதும் பூக்கும் புன்னகை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.Top ten romance to your spouse
 
அற்புதமான இரவு விருந்துதினமும்தான் இரவு உணவை ஒரு உப்புச்சப்பில்லாமல் சாப்பிடுகிறோம். வேலைக்கு போய் வந்த களைப்பு இருவருக்கும் இருக்கும் எனவே விடுமுறை நாட்களிள் இரவு உணவை அற்புதமானதாக மாற்றலாம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மனதிற்கு பிடித்த சுவையான உணவை சாப்பிடலாம். முடிந்தால் உங்களவருக்கு ஊட்டி விடுங்களேன். அது ரொமான்ஸ் தருணங்களை அதிகமாக்கும்.கடற்கரை மணலில்....தினந்தோறும் ஒரே இடத்தில், ஒரே அறையில் அமர்ந்து பேசுவது கொஞ்சம் போராடிக்கத்தான் செய்யும். மாதம் ஒருமுறையாவது கடற்கரை மணலில் அமர்ந்து பேசலாம். சில்லென்ற காற்றும்... ஆர்ப்பரிக்கும் அலைகளும் மனதிற்கு இதம் தருவதோடு காதலை அதிகரிக்கும்.சின்னச் சின்ன மாற்றங்கள்சின்னச் சின்ன மாற்றங்கள் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தக்கூடும். இதனை ‘கெய்சென்' என்று ஜப்பானில் கூறுவார்கள். இது குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும். எதிர்பாராத தருணத்தில் சின்னதாய் கொடுக்கும் முத்தம். உறங்கும் போது கைகளை பிடித்துக்கொண்டு பேசாமல் உணரவைக்கும் வார்த்தைகள் அன்பின் ஆழத்தை அதிகரிக்கும்.சந்தோச தருணங்களை கொண்டாடுங்கள்பிறந்தநாள், திருமணநாள், போன்ற சிறப்பு வாய்ந்த நாட்களையும், வாழ்வில் முதல் முதலாய் சந்தித்த தினங்களையும் சந்தோசமாக கொண்டாடுங்கள். மறக்க முடியாத பரிசளியுங்கள்... அந்த நாட்களில் துணையுடன் செலவழிக்கும் நேரம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை அளித்திடும்.சண்டே சமையல் செய்யலாம்...வீட்டு வேலைகள் செய்வது சாதாரண விசயமில்லை. வாரந்தோறும் சமைத்து களைத்துப் போய், அதோடு அலுவலகம் சென்று அங்கும் அல்லாடும் துணைக்கு வாரம் ஒருநாள் வீட்டு வேலைகளில் உதவியாக இருக்கலாம். முடிந்தால் விடுமுறை நாட்களில் மனதிற்கு பிடித்த மாதிரி சமைத்துக் கொடுங்களேன். அப்படியே கட்டிக்கொள்வார் உங்கள் துணை.கைகோர்த்து செல்லுங்கள்வீட்டில் தனிமையில் இருக்கும் தருணங்களில் அன்பை ஒளித்து வைக்காமல் வெளிப்படுத்துங்கள். வெளியே இருவரும் தனியாக செல்லும் தருணங்களிலும் கைகோர்த்துச் செல்லுங்கள். உங்கள் வாய் பேசாத வார்த்தைகளை உங்களின் உணர்வுகள் பேசும். எதிர்பாராத இடத்திற்கு அழைத்துச் சென்று இனிய நினைவுகளை கிளறிவிடுங்கள்ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்கோடை காலத்தில் போர்வையே தேவைப்படாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் படுக்கை அறை என்பது மிகவும் அந்தரங்கமான இடம் அங்கு தம்பதியரிடையே பேசப்படும் வார்த்தைகள், கொடுக்கப்படும் முத்தங்கள் எல்லாவற்றிலும் காதலோடு கொஞ்சம் கிளர்ச்சியை தூண்டும் வகையில் ரொமான்ஸ் தூக்கலாக இருக்கவேண்டும்.புதிது புதிதாய் மகிழ்ச்சிப்படுத்துங்கள்தினந்தோறும் புதிதாய் பிறக்கிறோம் என்ற எண்ணம் மனதில் இருக்கட்டும். எனவே புதிது புதிதாய் காதலை சொல்லுங்கள். காதலோடு படுக்கை அறையிலும் உங்களின் செயல்பாடுகளில் ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கட்டும். ஸ்பரிசத்திலும், பேச்சிலும் கூட புதுமையை புகுத்த முடியுமாம். ஒரே இடம் என்பது போராடித்து விட்டால் எங்காவது மனதிற்கு பிடித்த இடத்திற்கு வெளியே அழைத்துச் செல்லுங்களேன். உங்கள் இருவருக்குமிடையே காதலோடு அன்பும் அதிகமாகும்.மனம் மயக்கும் மந்திர வார்த்தைகள்எத்தனையோ வார்த்தைகளை பேசிக்கொண்டாலும் அவ்வப்போது சொல்லப்படும் ஐ லவ் யூ, ஐ கிஸ் யூ, ஐ மிஸ் யூ, போன்ற சில உணர்வு பூர்வமான அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கும் மந்திர சக்தி இருக்கத்தான் செய்கிறது. எனவே அடிக்கடி இந்த வார்த்தைகளை உபயோகிப்பதனால் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
English summary
Our expectations of love, romance and sex have altered massively since only a generation ago: now statistics show that almost half of all marriages end in divorce. We’re all working longer hours and add to that high cost of living and – well, you get the picture. Romance gets moved to the back burner. So how do you avoid becoming a statistics? Hopefully this page of Top yaps will go long away to help you.
Story first published: Saturday, April 6, 2013, 15:46 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more