முத்தம் பற்றி 300 முறை எழுதினாலும் திகட்டாது. அத்தனை சுவாரஸ்யமான தகவல்களும், அனுபவங்களும் நிறைந்தது முத்தச்சரிதம். நட்போ, காதலோ, அன்போ வெளிப்படுத்தும் அதீதமான மொழி முத்தம்.
குழந்தைகள் அழும் போது கூப்பிட்டு முத்தமிடுங்க அடுத்த நொடியே அழுகையை நிறுத்திவிடும். அதேபோலத்தான் கோபப்பட்டு கத்தும் கணவரை வழிக்கு கொண்டு வர சிம்பிள் லாஜிக் நச் என்ற ஒரு முத்தம் போதும் டோட்டல் சரண்டர்தான்.
முத்தம் பற்றி இன்னும் எத்தனையோ விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. முத்தம் கொடுப்பது எப்படி ஒரு கலையோ அதை ரசனையோடு பெற்றுக் கொள்வதும் ஒரு கலைதான். அதிக டென்சனாக இருக்கும் போது முத்தம் கொடுத்தால் அந்த டென்சன் இருந்த இடம் காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள். முத்தம் ஏற்படுத்தும் மாயாஜாலம் என்னென்ன மேற்கொண்டு படியுங்களேன்.
அன்பு அதிகமாகும்
காதலர்களோ, தம்பதியர்களோ, முத்தம் கொடுக்கும் போது அன்பின் ஆழம் அதிகமாகிறதாம். அதுவும் உதட்டோடு உதடு வைத்து கொடுக்கும் முத்தம் ஆக்ஸிடோசின் அளவை அதிகரிக்கச் செய்து பிணைப்பை அதிகரிக்கிறதாம்.
இதயத்துடிப்பு சீராகும்
முத்தம் உறவின் திறவுகோல் என்பார்கள். இது இதயத்தின் ஆயுளை அதிகரிக்கிறதாம். முன்விளையாட்டு தொடங்குவது முத்தத்தின் மூலம்தான் அந்த முத்தச் சத்தம் இதயத் துடிப்பை சீராக்குகிறதாம்.
நோய் எப்படி வரும்?
செக்ஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல முத்தம் கூட மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறதாம். உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறதாம்.
மகிழ்ச்சி அதிகமாகும்
முத்தம் மூலம் உடலும், மனமும் உற்சாகமாகும். எண்டோர்பின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இது மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன்.
வலி போயே போச்சு
தலை வலிக்குதா உடனே உங்கள் துணை நன்றாக முத்தம் கொடுக்கச் சொல்லுங்கள். அதன் மூலம் வலி போயே போய்விடுமாம். இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு போகும் முன் ஒருமுறை முத்தச் சிகிச்சை செய்து பாருங்களேன்.
டென்சன் ஓடியே போயிடும்
மனிதர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் டென்சன் ஏற்படுவது இயல்பு. மன அழுத்தமும், உளவியல் சிக்கல்களும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் நன்றாக முத்தம் கொடுங்களேன். இது மனஅழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறதாம்.
காலியாகும் கலோரி
உடற்பயிற்சி செய்வதன் மூலம் காலியாகும் கலோரியைப் போல முத்தமிடுவதன் மூலம் எக்கச்சக்க கலோரிகள் காலியாகிறதாம். சக்தியும் அதிகரிக்கிறதாம். அப்போ இனி மருத்துமனைக்கும் போகாதீங்க... ஜிம்முக்கும் போகாதீங்க. முத்தம் கொடுத்தா போதும் என்கின்றனர் நிபுணர்கள். நீங்க என்ன சொல்றீங்க?