•  

பெண்களின் மனஅழுத்தம் குறைக்கும் ஓரல் செக்ஸ்... ஆய்வில் தகவல்

ஓரல் செக்ஸ் எனப்படும் வாய்வழி புணர்ச்சியினால் பெண்களின் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கிறதாம். மனஅழுத்தம் குறைந்து நிம்மதியான உறக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.இல்லற இன்பம் பலவிதம் உண்டு. இது இப்படித்தான் என்று யாராலும் பாடம் எடுக்க முடியாது. எல்லாமே எரர் அன்ட் டிரையல்தான். அதில் ஒன்றுதான் வாய்வழி இன்பம். முத்தமிடுவது, முகர்வது, சுவைப்பது என பலவிதங்களில் உங்களின் துணையை மகிழ்விக்கமுடியும். இந்த வாய்வழி புணர்ச்சியினால் பெண்களுக்கு நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.நியூயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். 293 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.அதிகரிக்கும் அன்பு

அதிகரிக்கும் அன்பு

ஆண்களின் விந்தணுவில் உள்ள ரசாயனங்கள் பெண்களின் உடலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறதாம். கணவரின் மீதான அன்பை அதிகப்படுத்துகிறது.

மனஅழுத்தம் குறைகிறது

மனஅழுத்தம் குறைகிறது

உற்சாக மனநிலையை ஏற்படுத்துகிறது. நன்றாக உறக்கம் வரத் தூண்டுகிறது. தவிர மன அழுத்தத்தினை குறைக்கிறது.

மனதை ரிலாக்ஸ் செய்யும்

மனதை ரிலாக்ஸ் செய்யும்

விந்தணுவை பருகுவதன் மூலம் மனஅழுத்தம் தரும் ஹார்மோன் கார்டிசோல் சுரப்பு குறைகிறதாம். ஈஸ்ட்ரோஜன், ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறதாம். முக்கியமாக செரடோனின் சுரப்பு அதிகரித்து மனதையும், உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்கிறதாம்.

ஹார்மோன்களின் மாயம்

ஹார்மோன்களின் மாயம்

நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாக சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. ஓரல் செக்ஸ் வைத்துக்கொண்ட பெண்களுக்கு இந்த செரடோனின் சுரப்பு அதிகமாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் விந்தணு ஏற்படுத்திய மாயம் என்கின்றனர்.

காண்டம் வேண்டாமே

காண்டம் வேண்டாமே

ஆய்வின் போது காண்டம் உபயோகிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. பெரும்பாலான பெண்கள் காண்டம் உபயோகிப்பதை விரும்பவில்லையாம். அது உற்சாகத்தை குறைப்பதாக கூறுகின்றனர். சிலர் எப்போதாவது என்றும், அரிதாக சிலர் உபயோகிப்போம் என்றும் கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.

கேன்சர் வரலாம் எச்சரிக்கை

கேன்சர் வரலாம் எச்சரிக்கை

அதேசமயம் அதிக அளவில் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு தொண்டை, வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கின்றனர். இதற்குக் காரணம் ஹெச்.பி.வி எனப்படும் வைரஸ் என்கின்றனர்.

 English summary
Oral sex is good for women's health and makes them feel happier, a study which studied the effects of semen's "mood-altering chemicals" has claimed. The State University of New York study, which scientists carried out via survey rather than through practical experiment, compared the sex lives of 293 females to their mental health.
Story first published: Thursday, April 4, 2013, 17:20 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras