முத்தம் என்ற சொல்லை கேட்கும் போதே சிலருக்கு கிக் ஏறும். காதலியிடம் இருந்தோ, மனைவியிடம் இருந்தோ எதிர்பாராமல் முத்தம் கிடைத்து விட்டால் வானத்தில் பறக்க ஆரம்பித்து விடுவார்கள் ஆண்கள்.
கொடுப்பவருக்கும் சரி பெற்றுக் கொள்பவருக்கும் சரி ஒரே நேரத்தில் சந்தோசத்தை தரக்கூடியது முத்தம்தான். இதை கொடுப்பதற்கும் சில டெக்னிக்குகள் இருக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.
சும்மா ஒத்தடம் குடுப்பது போல இல்லாமல் உயிரோடு கலந்து உதட்டில் கொடுப்பதில்தான் இருக்கிறது சுகமே என்றும் கூறுகின்றனர். காதலின் மொழியான முத்தம் காதலர்களுக்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இந்த பாஷையை பயன்படுத்தி எவ்வளவு பெரிய சண்டையை கூட சமாதானம் செய்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
எங்கே எப்படி முத்தத்தை பயன்படுத்தலாம் தெரிந்து கொள்ளுங்களேன்.
கலையம்சத்தோடு கொடுங்களேன்!
முத்தம் கொடுப்பதிலும் ஒரு கலையம்சம் இருக்கிறதாம். கண்ணோடு கண் நோக்கி இருவரும் தயார் என்ற நிலையில்தான் முத்தம் கொடுக்க தயாராக வேண்டுமாம். துணையின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி உதட்டோடு கொடுக்கும் முத்தம்தான் சரியானது என்கின்றனர் அனுபவசாலிகள்.
எதற்கும் அவசரப்படக்கூடாது
முதல் சந்திப்பிலேயே முத்தம் கொடுக்க அவசரப்படக்கூடாது என்கின்றனர். இது உறவிற்கே வேட்டு வைத்து விடுமாம். உங்கள் மீது தவறான அபிப்ராயம் ஏற்படவும் வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே உங்கள் மீது காதல் அதிகரித்து நீங்கள் தொடமாட்டீர்களா? உங்களின் விரல் நுனியாவது தன்னைத் தீண்டாதா என்று ஏங்கும் போது லாவகமாக முத்தமிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
முத்தமிடும்போது கவனம்
முத்தமிடும்போது சிலர் கண்களை மூடிக்கொள்வார்கள். பெற்றுக்கொள்பவரும் கூட ஒரு வித கிறக்கத்திற்கு உள்ளாவார். அதற்காக கண்ணை மூடிக்கொண்டே இருக்காமல் நீங்கள் கொடுக்கும் முத்தத்தை உங்களவர் எப்படி அனுபவிக்கிறார் என்பதை ரசியுங்களேன்.
கோபப்பட வைக்காதீர்கள்
முத்தம் கொடுப்பவருக்கும் சரி, பெற்றுக்கொள்பவருக்கும் சரி ஒவ்வொரு செல்லும் ஹை வோல்டேஜில் இருக்கும். இது உறவுக்கான திறவுகோலாகவும் மாறும். அதையே சாக்காக வைத்து அங்கங்கே தொடுவது, தடவுவது என கூடாதாம். இது உங்கள் மீது கோபத்தை ஏற்படுத்திவிடுமாம். அதேபோல மென்மையான உதட்டினை சுவைப்பதற்கு பதிலாக கடித்து வைப்பதும் கூடாதாம்.
சாதாரணமாக தொடுங்களேன்...
உங்களிடம் இருந்து முத்தம் பெற்றுக்கொள்ள உங்கள் துணை தயாராக இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சில வழிகளை கூறியுள்ளனர். முதலில் பட்டும் படாமல் தொடுங்கள்... சதாரணமாக சந்திக்கும் தருணங்கள் லேசாக கைகளை தொட்டுப் பேசுங்கள். அவருக்கு உங்கள் மீதான காதல் அதிகம் எனில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். எதிர்பாராமல் தனிமையில் சந்திக்க நேர்ந்தால் அவருக்கு முத்தம் கொடுக்கலாம்.
காதலான தருணங்கள்
இருவருக்கும் பேசுவதற்கு நிறைய ஸ்வீட் நத்திங்ஸ் இருக்கும். பேசும்போது இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்திக்கும் தருணத்தில் அவை வெளிப்படுத்தும் ரகசியம் அலாதியானது. அப்பொழுது அருகில் நெருங்கி அமர்ந்தால் உங்களின் மூச்சுக் காற்றே உணர்த்திவிடும் என்ன தேவை என்பதை. அப்போது அழகான முத்தத்தை கீழுதட்டில் கொடுங்களேன்.
முத்த மொழியில் நிறைய பேசலாமே!
காதலர்களோ, தம்பதியர்களோ சின்னதாய் ஊடல்வந்தால் அதை தீர்க்க முத்தம்தான் சரியான மொழி. முத்தம் காதலின் மொழி என்று கூறப்படுவதால் அந்த மொழியில் நிறைய பேசலாம்.
மறக்கமுடியாத முதல் முத்தம்
ஒவ்வொருவருக்கும் தாங்கள் முதலில் கொடுத்த பெற்றுக்கொண்ட முத்தத்தை மறக்க முடியாது. ஆண்கள் தங்கள் கடைசி முத்தத்தை மறந்து நீண்ட காலம் ஆன பிறகும் பெண்கள் தங்கள் முதல் முத்தத்தை ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
நான்கு முத்தங்களுக்குப் பிறகு பெண்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்களாம்.
உணவுக்கும் முத்தத்திற்கும் தொடர்பு
முத்தம் பற்றி நிறைய பழமொழிகள் கூறுகின்றனர். முத்தம் உணவைப் போல, ஒரு வாய் சாப்பிட்டால் போதவே போதாது. அதேபோல முத்தம் உப்பு நீரைக் குடிப்பது போல குடிக்கக் குடிக்க தாகம் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர். முத்தத்தை உதட்டில் கொடுக்காமல் "ஃப்ளையிங் கிஸ்" கொடுப்பவர்கள் உலகமகா சோம்பேறி என்றும் கூட கூறுகின்றனர் நிபுணர்கள்.
முதலுக்கும் கடைசிக்கும் என்ன வித்யாசம்
காதலியிடம் இருந்து முதல் முத்தம் பெற ஆண்கள் கெஞ்சுவார்களாம். அப்போது பெண்கள் செய்யும் ‘பிகு'விற்கு அளவே இருக்காது. அதே சமயம் முத்தம் கொடுத்து, அப்புறம் பெற்றுக் கொண்ட பின்னர் இன்னும் வேண்டும் என்று பெண்கள் தங்கள் கடைசி முத்தத்திற்கு ஆண்களைக் கெஞ்சுவார்களாம். எனவே காதலுடன் முத்தம் கொடுத்து உங்கள் துணையை அசத்துங்களேன்!.