•  

சந்தனத் தைலம் உபயோகித்தால் உடலுறவில் உற்சாகம் கூடுமாம்!

நம்மை மயக்கும் வாசனை மூளையில் உற்சாகத்தை தூண்டும். அதனால்தான் புதுப் பெண்கள் தலை நிறைய மல்லிகைப் பூக்களை வைத்துக் கொண்டு கணவரின் முன்பாக வலம் வருவார்கள்.ஆண்களும் சாதாரணமானவர்கள் வாசனைத் தைலங்களையோ, சோப்பு, பவுடரோ போட்டு மணக்க மணக்க மனைவி முன் வந்து நிற்பார்கள். இந்த வாசனையினால் உணர்வுகள் தூண்டப்பட்டு உறவில் ஈடுபடும் போது உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.வாசனை எண்ணெய்களும் மனம் மயக்கும் இந்த வேலைகளை சரியாகச் செய்யுமாம். மசாஜ் செய்யப்பயன்படும் இந்த எண்ணெய்கள் கூடலின் போது தம்பதியரிடையே உற்சாகத்தை அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அவற்றை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.ஹார்மோன்களை தூண்டும்

ஹார்மோன்களை தூண்டும்

உறவின் போது மூலிகை எண்ணெய்கள் பயன்படுத்துவது பற்றி வேதங்களில் கூட பற்றி கூறப்பட்டுள்ளது. இவை ஹார்மோன்களின் சுரப்பை சரியான அளவில் சுரக்குமாறு தூண்டுகிறதாம்.

ரோஸ் எண்ணெய்

ரோஸ் எண்ணெய்

எகிப்து இளவரசி கிளியோபட்ரா இந்த ரோஸ் எண்ணெயை அதிகம் உபயோகிப்பாராம். இது இதயச் சக்கரத்தை தூண்டுகிறது. காதலோடு காமத்தையும் தூண்டுகிறதாம். எனவே முன் விளையாட்டுக்களின் போது, அல்லது மசாஜ் செய்யும் போதோ ரோஜா எண்ணெய் பயன்படுத்துங்களேன்.

மல்லிகை எண்ணெய்

மல்லிகை எண்ணெய்

மனம் மயக்கும் மல்லிகை எண்ணெய், உணர்வு நரம்புகளை தூண்டி உற்சாகமூட்டுகிறது. கிளர்ச்சி அதிகமாவதால் கால நேரம் பார்க்காமல் கலவியில் ஈடுபடும் நம்பிக்கையைத் தருமாம். எனவே உங்கள் துணைக்கு மசாஜ் செய்யும் போது மல்லிகை எண்ணெயை பயன்படுத்துங்களேன்.

மனோரஞ்சித தைலம்

மனோரஞ்சித தைலம்

மனோரஞ்ச மலரின் மணம் மனதை கொள்ளை கொள்ளக்கூடியது. இந்த எண்ணெயின் நறுமணம் நுகரும் போது உணர்வு நரம்புகளில் உற்சாகம் கொப்பளிக்கும். சாதாரண பஞ்சுத் துணியில் எண்ணெய் சிறிதளவு நனைத்து படுக்கையின் மீது தெளித்தால் வாசனை அள்ளிக்கொள்ளும். அப்புறமென்ன உற்சாகமாக விளையாடலாம்.

சந்தனத் தைலம்

சந்தனத் தைலம்

சந்தனத்தின் நறுமனம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சந்தன எண்ணெயின் நறுமணம், மூலிகைக் குணம் கொண்டது. எனவே படுக்கை அறையில் பயன்படுத்தினால் உற்சாகமான உறவு உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.

சீரக எண்ணெய்

சீரக எண்ணெய்

சீரகம் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது சீரண சக்தியை அதிகரிக்கும். ஆண்களும், பெண்களும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிப்பதோடு, கிளர்ச்சியைத் தூண்டுமாம்.

கிராம்பு தைலம்

கிராம்பு தைலம்

இந்திய சமையலில் வாசனைப் பொருளாக அதிகம் பயன்படுத்தப்படுவது கிராம்பு. இந்த கிராம்பு எண்ணெய், சமையலுக்கு மட்டுமல்ல மையலுக்கும் அதிகம் பயன்படுகிறதாம்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெய்

புதினாவை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். இது சுவையான வாசனையான தாவரம். இந்த எண்ணெய் மன அழுத்தம் போக்கும், சோகமான மனநிலையில் இருப்பவர்கள் கூட இந்த எண்ணெயை நுகரும் போது மனதில் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

 

English summary
Kamasutra often referred to as the Bible of sexuality, has mentioned profound use of ittar and aromatic oils in its literature. Since ancient times, these oils have been used widely to awaken desires and sensuous feelings.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more